ஷஹீது (உயிர்த்தியாகி)
ஷஹீது, இதன் பொருள் உயிர்த்தியாகி என்பதாகும். இதன் பன்மை ஷுஹதா. இவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
உஹதுப் போர் நிகழ்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கு பின்
“இறைவன் பாதையில் வெட்டுண்டு இறப்பவர்கள் தங்கள் அடக்க இடத்தில் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது” என்று இறைவன் கூறுகின்றான். உஹதுப் போர் நிகழ்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கு பின் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு அடங்கப் பெற்ற உயிர்த்தியாகிகளின் அடக்கவிடங்கள் பாதிக்கப்பட்ட பொழுது அந்த உயிர்த் தியாகிகள் அரைத் தூக்கத்தில் இருக்கும் நிலையில் காணப்பட்டார்கள் என்றும் அவர்களுடைய காயங்களிலிருந்தும் இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.
இராக்கில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது
கி.பி. 1922 இல் இராக்கில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அங்கு மதாயின் என்ற ஊரின் அருகில் நடந்த போரில் உயிர் நீத்த நபி தோழர் இருவருடைய அடக்கவிடங்கள் இருக்கின்றன. அவர்களுள் ஒருவரான ஹுதைபா இப்னு யமான் (ரழி) அவர்கள் இராக் மன்னர் ஃபைஸலின் கனவில் தோன்றித் தங்கள் அடக்கவிடத்தில் தண்ணீர் இருக்கிறதென்றும், தங்கள் அருகே அடங்கப் பெற்றுள்ள ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்வின் அடக்கவிடத்தில் ஈரம் இருந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார்கள். மூன்றாம் இரவு முஃப்தியெ அஃலமின் கனவில் தோன்றி இதனை எடுத்துரைத்து, நாங்கள் இதுபற்றி அரசரிடம் இரு முறை எடுத்துரைத்தும் அவர் அசட்டையாக இருப்பதாகவும் எனவே, இது பற்றி அரசரிடம் கூறி ஆவன செய்யுமாறும் கூறி மறைந்தார்கள். விடிந்ததும் முஃப்தியெ அஃலம் மன்னரைச் சந்தித்து இக்கனவைக் கூறியதும் அவரும் தாம் தொடர்ச்சியாய் இதே கனவைக் கண்டதாய் ஒப்புக் கொண்டார்.
இதன் பின் ஈதுல் அல்ஹா தொழுகை முடிந்ததும் அந்த அடக்கவிடங்கள் தோண்டப் படுமென்று பிரகடனப்படுத்தப் பட்டது. இதனைச் செய்தித்தாள்களில் பார்த்த ஹாஜிகள் தாங்களும் அக்காட்சியைக் காண விரும்புவதாகவும் எனவே அவ்வேலையை சில நாள்கள் ஒத்தி வைக்குமாறும் மன்னருக்கு விண்ணப்பம் செய்ய அவ்விதமே துல்ஹஜ் பிறை 20 திங்கட்கிழமை தோண்டுவதாய் முடிவு செய்யப்பட்டது.
ஏராளமான யூதர்களும் கிருஸ்துவர்களும் இஸ்லாத்தைத் தழுவினர்
அவ்வாறே கி.பி 1922 துல்ஹஜ் பிறை 20 அன்று அடக்கவிடங்கள் லட்சக் கணக்கான மக்களின் முன் தோண்டப் பட்.ட பொழுது ஹுதைபா (ரழி) அவர்களின் அடக்கவிடத்தில் தண்ணீர் இருந்தது. ஜாபிர் (ரழி) அவர்களின் அடக்கவிடத்தை ஈரம் தாக்கிக் கொண்டிருந்தது. அவர்களின் கஃபன் கூடக் கெடவில்லை. அவர்களின் உடல்கள் இரண்டு நாள்களுக்கு முன் இறந்தோரின் உடல்கள் போன்று காட்சி வழங்கின. அவர்களின் கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்த ஒரு ஜெர்மன் கண் மருத்துவர் வியப்புற்று, “உங்களின் மார்க்கமே உண்மையானது” எனக் கூறி அக்கணமே இஸ்லாத்தைத் தழுவினார்.
அவ்விரு நபி தோழர்களின் உடல்களும் பத்திரமாய் எடுக்கப்பட்டு வேறு இடங்களில் நல்லடக்கம் செய்யப் பட்டன. இதனைத் திரைப்படத்தில் பார்த்த ஏராளமான யூதர்களும் கிறிஸ்துவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இச் செய்தி உலகப் பத்திரிக்கைகளிலெல்லாம் வெளி வந்தது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.