Home


தேசிய ஒருமைப்பாடும் - முஸ்லிம்களும்

இந்திய இஸ்லாமியர்

        முஸ்லிம்கள் அவர்கள் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், வெளிநாடுகளுக்குச் சென்றால், அங்குள்ளவர்கள் கேட்கும் போது, தங்கள் மொழியைக் காட்டாமல், வட்டாரத்தைக் கூறாமல் நாங்கள் இந்தியர்கள் எனக் கூறக்கூடிய பழக்கமுடையோராக இருக்கிறார்கள்.

        நம்முடைய அரசியல் சாசனத்தை ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கு மட்டும் உரிமை வழங்கப் பட்டில்லை. அதைப் பேணுவதற்கும், மற்றவர்களுக்குப் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை வழங்கப் பட்டிருக்கிறது.

செகுலரிஸம் (மதச்சார்பின்மை) என்றால் என்ன?

        இந்த அரசியல் சாசனத்தில் ‘செகுலர்’ என்ற வார்த்தை ஆரம்பத்தில் குறிப்பிடப்படவில்லை, என்றாலும் நம்முடைய மூத்தத் தலைவர்கள் இந்த ‘செகுலரிஸம்’ என்ற தத்துவத்தை நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்துக் கொண்டார்கள்.

        மேலை நாட்டினர் செகுலரிஸம் என்றால் கொண்டிருக்கும் பொருள் வேறு; நாம் ஒப்புக்கொண்டுள்ள அர்த்தம் வேறு. இங்கேயுள்ள முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஐரோப்பாவுக்குச் சென்று நாங்கள் செகுலரிஸத்தை ஆதரிக்கிறோம் என்றால் நம்பவே மாட்டார்கள். ஏனெனில் அங்கே செகுலரிஸம் என்றால் மதமற்ற - மதத்திற்கு விரோதமான - என பொருள் கொள்கிறார்கள். நாமோ, செகுலர் என்றால் ஒரு மதத்தைச் சார்ந்திருந்தாலும், வேறு மதங்களை வெறுத்தொதுக்காத, இழிவு படுத்தாத ஒரு பரந்த மனப்பான்மையைக் குறிப்பிடுகிறோம்.

        இதற்க்கு முழு எடுத்துக்காட்டாக விளங்கியவர் (ஷஹீத்) தியாகி தீரர் திப்பு சுல்தான் அவர்கள்.

திப்பு சுல்தான் மஸ்ஜிதும் ஶீரங்கநாதர் கோவிலும்

        ஶீரங்கப்பட்டிணத்தில் திப்பு சுல்தான் கட்டிய மஸ்ஜித் இருக்கிறது. அதற்குப் பக்கத்திலேயே ஶீரங்கநாதர் கோவிலும் இருக்கிறது. அந்தக் கோவிலை ஹிந்துக்களிலேயே ஒருசாரர் ஒரு காலத்தில் இடித்து தரைமட்டமாக்கி விட்டார்கள். அதைப் புதுப்பித்துக் கட்டிக் கொடுத்தவர் திப்பு சுல்தான்.

        அது மாத்திரமல்ல, மஸ்ஜித்தில் மகரிப் தொழுகைக்கு அழைப்பு (பாங்கு) கொடுக்கப்படும் போது, கோயிலில் பூஜை செய்யும் மணியோசையும் கேட்கிறது. அந்த பூஜை செலவுகளுக்கு மான்யம் வழங்கியவரும் திப்பு சுல்தான் தான்.

சிருங்கேரி மடத்தை சிதைத்த மராட்டியர்

        இது மாத்திரமல்ல, ஒரு சமயம் சிருங்கேரி மடத்தை மராட்டியர்கள் படையெடுத்துப் பிடித்து பொருட்களை கொள்ளையடித்து சங்கராச்சாரியாரையும் விரட்டி விட்டார்கள். சிருங்கேரி சங்கராச்சாரியார் காட்டில் புகலிடம் தேடி வசிக்க வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் திப்பு சுல்தான், பிரிட்டிஷாருக்கு எதிராக, ஃபிரஞ்ச் காரர்களுக்கு ஆதரவாகப் போரிடுவதற்கு பரங்கிப்பேட்டையில் முகாமிட்டிருந்தார்.

        செய்தி அறிந்த திப்பு சுல்தான் சிருங்கேரி சங்கராசாரியாருக்கு தன்னுடைய வேதனையைத் தெரிவித்து கடிதம் எழுதினார்.

        ”இறைவனுடைய விசாரணையிலேயே ஈடுபட்டுள்ள உங்களைப் போன்றோருக்கு இந்த நிலை நேரிட்டிருக்க கூடாது. இந்தக் கொடுமையை செய்தவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்” என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன்படியே கர்நாடகம் திரும்பி மராட்டியரிடமிருந்து மடத்தை மீட்டு, மீண்டும் சங்கராச்சாரியாரை அங்கே நிலை பெறச் செய்தார்.

மடத்திலுள்ள திப்பு சுல்தான் கடிதம்

        திப்பு சுல்தான் சங்கராச்சாரியாருக்கு எழுதிய கடிதங்கள் இன்றும் கூட சிருங்கேரி மடத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பொதுமக்கள் பார்வைக்கு ஆண்டுக்கு ஒரு முறை அனுமதிக்கப்படுகிறது.

சிதம்பர ரகசியம்

        அது மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலேயே புகழ்மிக்க ஆலயம் சிதம்பரத்தில் இருக்கிறது. நடராஜர் சிலை அங்கே இருக்கிறது. நடனமாடும் தெய்வம் (டான்ஸிங் காட்) என அதைக் குறிப்பிடுவார்கள். களவு போனது போக அங்கே மிக விலை உயர்ந்த நகைகள் இருக்கின்றன, அத்தனை நகைகளும் திப்பு சுல்தான் செய்து தந்தவை என்பதை அங்குள்ள தீட்சதர்களே சொல்லிக் காட்டுகிறார்கள்.

திருச்சி ஶீரங்கம் நவ்வாப் தானம்

        அது மாத்திரமல்ல. திருச்சி ஶீரங்கத்திலுள்ள ஶீரங்கநாதர் ஆலயம் வாலாஜா நவ்வாப் தானமளித்த இடத்தில் தான் கட்டப் பட்டிருக்கிறது. அதை அடுத்துள்ள தோட்டம் இன்று கூட நவ்வாப் தோட்டம் என்று தான் வழங்கப்படுகிறது.

        இந்த நிகழ்ச்சிகள் ஒரு வழிப்பாதையல்ல, இதே போல ஹிந்து மன்னர்கள் இஸ்லாமிய மஸ்ஜித்களுக்கு மான்யம் அளித்த சம்பவங்களும் நிறைய உண்டு.

சரபோஜி கட்டிய நாகூர் தர்கா

        நாகூர் தர்காவின் பெரிய மினாரா, தஞ்சையை ஆண்ட சரபோஜி என்ற மராட்டிய மன்னரால் கட்டப்பட்டது என்பது வரலாறு.

        இத்தகைய சமய சக வாழ்வை வற்புறுத்து பவர்களாகவே முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள்.


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....


Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.