பைத்துல் முகத்தஸ்
இஃது பைத்துல் மக்திஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ‘புனித இல்லம்’ என்பதாகும். இங்கு நபி சுலைமான் (அலை) அவர்கள் நிறுவிய பள்ளிவாயில் ஹீப்ரு மொழியில் பெத்ஹம்மிக்தஷ் என்று குறிப்பிடப்படுகிறது. அதுவே அரபியில் பைத்துல் முகத்தஸ் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அந்நகரம் முழுவதற்கும் இதுவே பெயராக அமைந்தது. கி.பி. 136 இல் இது ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் ஆன பொழுது அவர்கள் இதனை கலோனியா ஈலியா கேப்பிட்டோலினா என்று அழைத்தனர். அதுவே சுருக்கமாக ஈலியா என்று கூறப்பட்டது. இதனையே கிருஸ்தவர்களும் ஏனையோரும் ஜெரூஸலம் என்று அழைக்கின்றனர்.
குர்ஆனில் இது பற்றி
குர் ஆனில் பைத்துல் முகத்தஸ் என்ற சொல் இடம் பெறவில்லை ஆனால் ஹதீதுகளில் இடம் பெற்றுள்ளது. இறைவன் இஸ்ரவேலர்களை நோக்கி, “இந்நகரில் புகுந்து நீங்கள் விரும்பிய வண்ணம் தாராளமாகப் புசியுங்கள்!” (2:55) என்று கூறியுள்ளது, இந்நகரையோ, அரிஹா (ஜெரிக்கோ)வையோ ஆகும் என்று பைளாவி கூறுகின்றனர்.
நெபுக்கட் நஸரின் படையெடுப்பால் பாழடைந்து கிடந்த அந்நகரை இறைவன் எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிக்க செய்வான் என்று எண்ணினர் உஜைர் (அலை). இங்கு நெபுக்கட் நஸரின் படையெடுப்புக்குப் பின் இல்யாஸ் (அலை) அவர்களோ, கிள்ரு (அலை) அவர்களோ வந்துள்ளனர்.
ஓரிரவு தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு எடுத்துச் சென்ற இறைவனுக்கே எல்லாப் புகழும் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான். இதில் மஸ்ஜிதுல் அக்ஸா (தொலையிலுள்ள பள்ளி) என்று இறைவன் கூறுவது இந்நகரில் சுலைமான் (அலை) அவர்கள் நிறுவிய பள்ளி வாயிலையேயாகும்.
பைத்துல் முகத்தஸின் சிறப்புகள்
பைத்துல் முகத்தஸைப் பற்றி சுயூத்தி (ரஹ்) அவர்கள் ஒரு நூல் எழுதியுள்ளனர். அதில் இங்கேயே தாவூத் (அலை) அவர்களும், சுலைமான் (அலை) அவர்களும் ஆட்சி செய்தனர்; இங்கேயே ஜகரிய்யா (அலை) அவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்கள் பிறக்கப் போவது பற்றி நன்மாராயம் வழங்கினான் இறைவன்; இங்கேயே ஈஸா (அலை) அவர்கள் வாழ்ந்தனர்; இங்கிருந்தே அவர்கள் விண்ணகம் உயர்ந்தப்பட்டனர்; உலக இறுதி நாளின் போது, அவர்கள் இங்கேயே வந்திறங்குவர்; யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் இதைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் கைப்பற்றுவர்; இங்கு வைத்தே அவர்கள் இறைவனால் அழிக்கப்படுவர்; இங்கேயே இப்ராஹீம் (அலை), இஸ்ஹாக் (அலை), தாவூத் (அலை), சுலைமான் (அலை), மர்யம் ஆகியோர் அடங்கப் பெற்றுள்ளனர்; மறுமையில் நீதி விசாரணை நடக்கும் மஹ்ஷர்வெளி இங்கேயே அமையப் பெற்றிருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
முஸ்லிம், கிருஸ்தவ, யூதர் ஆகிய மூவர்களுக்கும் புனித நகரம்
எனவேதான் இது முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய மூவருக்கும் புனித நகரமாக இருக்கிறது. முஸ்லிம்களுக்கு இது மக்கா, மதீனா ஆகியவற்றிற்கு அடுத்தபடியான புனித நகரமாகும். துவக்கத்தில் முஸ்லிம்கள் இதை நோக்கியே தொழுது கொண்டிருந்தனர். இங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா முஸ்லிம்களுக்குப் புனிதமானதாகவும், மாதாகோவில் கிறிஸ்தவர்களுக்குப் புனிதமானதாகவும் அழுகைச் சுவர் (WAILING WALL) யூதர்களுக்குப் புனிதமானதாகவும் உள்ளன.
சுருக்கமாக இதன் வரலாறு பின் வருமாறு:
ஐ.நா சபையில் ஜெருசலேம் பிராந்தியம் குறித்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மசோதா மீதான நீண்ட விவாதங்களுக்கு பிறகு நடந்த ஓட்டெடுப்பில் 11 வாக்குகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக கிடைத்தது..
129 நாடுகளின் பிரதிநிதிகள் மஸ்ஜித் அல் அக்ஸா வளாகம் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு உரிமையானது என்று ஆதரித்து வாக்களித்தனர்.
அமெரிக்க, ஹங்கேரி, செக் குடியரசு உட்பட 11 நாடுகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக விவாதிக்கவும் வாக்களிக்கவும் செய்த நிலையில் பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்..
அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்ற உரிமை போராட்டத்தில் பாலஸ்தீன முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஐ.நா.சபையில் தங்கள் நாடுகளின் ஆதரவை பதிவு செய்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐ.நா பிரதிநிதிகளுக்கு ஐ.நா வுக்கான பாலஸ்தீன பிரதிநிதி ரியாஸ் மன்சூர் நன்றிகள் தெரிவித்தார்.)
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.