உஸ்வத்துல் ஹஸனா
உஸ்வத்துல் ஹஸனா இதன் பொருள் ‘அழகிய முன் மாதிரி’ என்பதாகும். இச்சொற்றொடரை இறைவன் தன் திருமறையில் மூன்று முறை பயன்படுத்துகிறான். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களிடமும், அவர்களுடைய மக்களிடமும் உலக மக்கள் பின் பற்ற வேண்டிய அழகிய முன்மாதிரி அமைந்துள்ளது என்பதைப் திருமறை அல் குர் ஆனில் பின்வருமாறு இறைவன் கூறுகிறான்:
நற்பண்புகளின் இருப்பிடமாக இருந்தார்கள்
“அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்று (33:21) அவன் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறுகின்றான். உண்மையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு உலகில் நல்வாழ்வு வாழ விரும்பும் அனைவருக்கும் நல்லதொரு முன்மாதிரியாகவே இருக்கிறது.
அடக்கம், பொறுமை, நேர்மை, நீதி, அறிவு, ஆண்மை, விவேகம், வீரம், தயை, இரக்கம், ஈகை, வணக்கம் முதலான பல்வேறு நற்பண்புகளுக்கும் அவர்கள் இருப்பிடமாக இருந்தார்கள். இத்தகு முன்மாதிரியை நாம் வேறு எவரிடமும் காண இயலாது.
மேலும் அவர்கள் “நற்பண்புகளைப் பரப்பவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்றும் கூறினார்கள். நற்பண்புகளால் என்ன பயன்? என்று வினவப்பட்ட பொழுது “எவன் கையில் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நற்பண்பு உள்ளவர்களே சுவனம் புகுவார்கள்” என்று அவர்கள் பதிலிறுத்தனர்.
நற்பண்புகள் யாவை?
“நற்பண்புகள் யாவை?” என்று கேட்கப்பட்ட பொழுது, “ஒற்றுமையுடன் இருப்பது, நல்ல செயல்களைச் செய்வது, அறம் செய்வது, சலாம் சொல்ல முந்திக் கொள்வது, நோயாளரைச் சென்று காண்பது, நல்லவரா கெட்டவரா என்று பாராமல் பிரேத ஊர்வலத்தில் கலந்து கொள்வது, முஸ்லிமா முஸ்லிமல்லாதவரா என்று பாராமல் அண்டை அயலார்களுடன் அன்புடன் நடந்து கொள்வது, முதியவர்களுக்கு மரியாதை செய்வது, மன்னிப்பது, சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது, கோபத்தை அடக்குவது, விலக்கப்பட்டதை தவிர்வது, உறவினர்களிடம் அன்பாய் நடந்து கொள்வது, கர்வம் கொள்ளாதிருப்பது” என்று அவர்கள் விடையிறுத்தனர்.
அண்ணலாரின் வாழ்வு பற்றி இரத்தினச் சுருக்கமாக
மேலே கூறப்பட்ட இந்த நல்ல பண்புகள் அனைத்தும் அவர்களிடம் அமைந்திருந்தன. அவர்களிடம் பல்லாண்டுகள் ஊழியம் புரிந்த அனஸ் (ரழி) அவர்கள் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது “அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நல்ல விஷயம் எதையும் விடவுமில்லை. தீய விஷயம் எதையும் தொடவுமில்லை” என்று கூறியிருப்பது அவர்களின் வாழ்வை இரத்தினச் சுருக்கமாக விளக்கப் போதுமானதாகும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.