பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பிரார்த்தனை (துஆ)
மனிதர்கள் மகிழ்ச்சியின் போது தன்னைப் படைத்த இறைவனை மறந்துவிட்டு துன்பம், நெருக்கடி, நிர்கதி ஏற்படும்போது தான் அவற்றிலிருந்து நீங்கி நிம்மதியடைய பிரார்த்தனையின் (துஆவின்) பக்கம் செல்கிறார்கள். அவ்வாறின்றி எந்நிலையிலும் மனிதர்கள் தன்னைப் பிரார்த்திக்க வேண்டும் என்பதையே அல்லாஹ் விரும்புகிறான்.
இதைத்தான் அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் "நீங்கள் (உங்களுக்கு வேண்டிய அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன்" (குர்ஆன் 40:60) என்று கூறுகிறான்.
அண்ணல் நபி(ஸல்) அவர்களும் துஆவின் முக்கியத்துவத்தைப் பற்றி "உங்களின் செருப்பின் வார் அறுந்தாலும், சிறிது உப்பு தேவைப்பட்டாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள்" என்று கூறியுள்ளார்கள். (கன்ஜுல் உம்மால்-3140)
எனவே நாம் அனைவரும் நமது ஈருலக நற்பாக்கியங்களை இறையச்சத்தோடும், மனத்தூய்மையோடும் துஆவின் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்வோமாக!
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் (இவ்வுலகத்திலும்) நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் (மறுஉலகத்திலும்) நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!” விளக்கம்
“எங்கள் இறைவனே! எங்களை உனக்கு முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” விளக்கம்
“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” விளக்கம்
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறி விடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!” விளக்கம்
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” விளக்கம்
“அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” விளக்கம்
“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” விளக்கம்
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” விளக்கம்
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக” விளக்கம்
வானங்கள் மற்றும் பூமியின் படைப்பு முறையைப் பற்றி சிந்திக்கும் அறிவுடையோர் தம் ஆராய்ச்சியின் முடிவில் இவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள். விளக்கம்
“எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” விளக்கம்
"எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" விளக்கம்
இந்த துஆவை “ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். விளக்கம்
"எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்" விளக்கம்
“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” 7:126 விளக்கம்
யா அல்லாஹ்! நீ எளிதாக்கிய காரியத்தை தவிர வேறேதும் எளிதானது அல்ல!. மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை எளிதாக்கி விடுகிறாய். விளக்கம்