பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பிரார்த்தனை (துஆ)
மனிதர்கள் மகிழ்ச்சியின் போது தன்னைப் படைத்த இறைவனை மறந்துவிட்டு துன்பம், நெருக்கடி, நிர்கதி ஏற்படும்போது தான் அவற்றிலிருந்து நீங்கி நிம்மதியடைய பிரார்த்தனையின் (துஆவின்) பக்கம் செல்கிறார்கள். அவ்வாறின்றி எந்நிலையிலும் மனிதர்கள் தன்னைப் பிரார்த்திக்க வேண்டும் என்பதையே அல்லாஹ் விரும்புகிறான்.
இதைத்தான் அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் "நீங்கள் (உங்களுக்கு வேண்டிய அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன்" (குர்ஆன் 40:60) என்று கூறுகிறான்.
அண்ணல் நபி(ஸல்) அவர்களும் துஆவின் முக்கியத்துவத்தைப் பற்றி "உங்களின் செருப்பின் வார் அறுந்தாலும், சிறிது உப்பு தேவைப்பட்டாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள்" என்று கூறியுள்ளார்கள். (கன்ஜுல் உம்மால்-3140)
எனவே நாம் அனைவரும் நமது ஈருலக நற்பாக்கியங்களை இறையச்சத்தோடும், மனத்தூய்மையோடும் துஆவின் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்வோமாக!
"அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான "அர்ஷின்" அதிபதி.” விளக்கம்
அலல்லாஹி தவகல்னா, ரப்பனா லா தஜ்-அல்னா ஃபித்னதல் லில்கவ்மில் ளாலிமீன, வ நஜ்ஜினா பிரஹ்மதிக்க மினல் கவ்மில் காஃபிரீன். விளக்கம்
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” விளக்கம்
எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!" விளக்கம்
அல்லாஹும்ம இன்னக்க அfப்வுன் துஹிப்Bபுல் அஃபஃவ ஃபஃபு அன்னி' விளக்கம்
ரப்பிர்ஹம்ஹுமா கமா ராப்பயானீ ஸஃகீரா. விளக்கம்
ரப்பனா ஆத்தினா மில்லதுன்க ரஹ்மத்தவ் வஹய்யிஃலனா மின் அம்ரினா ரஷதா.விளக்கம்
ரப்பிஷ்ரஹ்லீ சத்ரீ, வயஸ்ஸிர்லீ அம்ரீ, வஹ்லுல் உக்ததம் மில்லிஸானீ, யஃப்கஹு கவ்லீ.விளக்கம்
"என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" விளக்கம்
"லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினழ் ழாலிமீன்" விளக்கம்