நமது செயல்களுக்கு அல்லாஹ்வின்
திருப்தியை நாடி ஓதும் துஆ
ரப்பனா வஜ்அல்னா முஸ்லிமைனி லக வமின்
துர்ரிய்யதினா உம்மத்தம் முஸ்லிமத்தல் லக வ அரினா
மனாஸிகனா வதுப் அலைனா இன்னக அன்தத்
தவ்வாபுர் ரஹீம்
ஸூரத்துல் பகரா 2:128
பொருள் :
“எங்கள் இறைவனே! எங்களை உனக்கு முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
குறிப்பு :
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும், நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கஅபாவை புதிப்பித்து கட்டிய பின்னர் ஓதிய துஆ.