Home


துஆக்களின் தொகுப்பு மற்றும் அதன் விளக்கம் Page No.4

பிஸ்மில்லாஹிர் ர‌ஹ்மானிர் ர‌ஹீம்
பிரார்த்த‌னை (துஆ)
ம‌னித‌ர்க‌ள் ம‌கிழ்ச்சியின் போது த‌ன்னைப் ப‌டைத்த‌ இறைவ‌னை ம‌றந்துவிட்டு துன்ப‌ம், நெருக்க‌டி, நிர்க‌தி ஏற்ப‌டும்போது தான் அவ‌ற்றிலிருந்து நீங்கி நிம்ம‌திய‌டைய‌ பிரார்த்த‌னையின் (துஆவின்) ப‌க்க‌ம் செல்கிறார்க‌ள். அவ்வாறின்றி எந்நிலையிலும் ம‌னித‌ர்க‌ள் த‌ன்னைப் பிரார்த்திக்க‌ வேண்டும் என்ப‌தையே அல்லாஹ் விரும்புகிறான். இதைத்தான் அல்லாஹுத்த‌ஆலா திருக்குர்ஆனில் "நீங்க‌ள் (உங்க‌ளுக்கு வேண்டிய‌ அனைத்தையும்) என்னிட‌மே கேளுங்க‌ள். நான் உங்க‌ளுடைய‌ பிரார்த்த‌னையை அங்கீக‌ரித்துக் கொள்வேன்" (குர்ஆன் 40:60) என்று கூறுகிறான்.
அண்ண‌ல் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளும் துஆவின் முக்கிய‌த்துவ‌த்தைப் ப‌ற்றி "உங்க‌ளின் செருப்பின் வார் அறுந்தாலும், சிறிது உப்பு தேவைப்ப‌ட்டாலும் அல்லாஹ்விட‌மே கேளுங்க‌ள்" என்று கூறியுள்ளார்க‌ள். (க‌ன்ஜுல் உம்மால்-3140)
என‌வே நாம் அனைவ‌ரும் ந‌ம‌து ஈருல‌க‌ ந‌ற்பாக்கிய‌ங்க‌ளை இறைய‌ச்ச‌த்தோடும், ம‌னத்தூய்மையோடும் துஆவின் மூல‌ம் ம‌ட்டுமே பெற்றுக்கொள்வோமாக‌!

குழந்தை பாக்கியம் வேண்டும் துஆ Posted on June 27, 2021

"என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ வாரிசாகக்கூடிய வர்களில் மிக்க மேலானவன்" விளக்கம்

பயணத்தில் வாகனம் புறப்படும் போது ஓதும் துஆ Posted on July 04, 2021

பிஸ்மில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமாகுன்னா லஹு முக்ரினீன் வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். விளக்கம்

சிறந்த வசிக்கும் இடத்தை வேண்டும் துஆ Posted on July 11, 2021

என் இரட்சகனே! நீ என்னை மிக்க பாக்கியம் செய்யப்பட்ட இறங்கும் இடத்தில் இறக்கி வைப்பாயாக! நீயே இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன். விளக்கம்

இதயங்கள் அமைதி பெற வேண்டும் துஆ Posted on July 18, 2021

அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன . அவற்றை அறிந்து ( அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில் ) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார் . என அபூ ஹுரைரா ( ரழி ) அறிவித்தார் . (ஸஹீஹ் புகாரி : 2736) விளக்கம்

ஷைத்தானிடமிருந்து காப்பாற்ற வேண்டும் துஆ Posted on July 25, 2021

"என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து என்னை காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன். (23:97) என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்" (23:98) விளக்கம்

மன்னித்து எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் துஆ Posted on August 01, 2021

"எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிளெல்லாம் நீ மிக்க மேலானவன்" விளக்கம்

மகிழ்ச்சியான குடும்பத்தை இறைவனிடம் வேண்டும் துஆ Posted on August 08, 2021

"எங்கள் இறைவனே! எங்கள் மனைவியையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! அன்றி, பரிசுத்தவான்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!" விளக்கம்

தீய செயலிலிருந்து காப்பாற்ற இறைவனிடம் வேண்டும் துஆ Posted on August 15, 2021

"என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக" (26:169)விளக்கம்

தன்னுடைய பெற்றோருக்கும் சேர்த்தே பிரார்த்தனை புரிதல் Posted on August 22, 2021

"என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன்னுடைய அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக் கூடிய நற் செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!" (27:19)விளக்கம்

சங்கடத்தின் போது ஓதும் துஆ Posted on August 29, 2021

லாயிலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புஸ்ஸமா வாத்தி, வ ரப்புல் அர்ளி, வரப்புல் அர்ஷில் கரீம். விளக்கம்

வாரம் ஒரு துஆ, தொடர்ந்து இன்ஷாஅல்லாஹ் வெளி வருகிறது.