இறைவா! எங்களை விசுவாசிகளாக ஆக்கு என வேண்டும் துஆ
ரப்பனா ஆமன்னா பிமா அன்ஸல்த
வத்தபஃனர் ரசூல ஃபக்துப்னா
மஅஷ்-ஷாஹிதீன்.
ஸூரா ஆல இம்ரான் 3:53
பொருள் :
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (3:53)
விளக்கம் :
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சிஷ்யர்களான ஹவாரிய்யூன்கள் பிரார்த்தித்தனர். “எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!”
ஆதாரம் :
அல் குர் ஆன் : ஸூரா ஆல இம்ரான் 3: 53