பொறுமைக்கான துஆ
ரப்பனா அஃப்ரிஃ அலைனா ஸப்ரவ், வ சப்பித்
அக்தாமனா வன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்.
ஸூரத்துல் பகரா - 2:250
பொருள் :
“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”
குறிப்பு :
நபி தாவூது (அலை) அவர்கள், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.