ஒரு குழந்தை வழங்க வேண்டி அல்லாஹ்விடம் கேட்கும் துஆ
رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۚ
اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ
ரப்பி ஹப்லீ மில்லதுன்க
துர்ரிய்யதன் தய்யிபதன்
இன்னக சமீவுத் துஆ.
ஸூரா ஆல இம்ரான் 3:38
பொருள் :
“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
விளக்கம் :
நபி ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) தனது வயதான காலத்தில் ஒரு சந்ததியைக் கேட்டு இந்த துஆவை ஓதி இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்தார். அல்லாஹ் அவருக்கு யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறினான்.
ஆதாரம் : அல் குர் ஆன் : ஸூரா ஆல இம்ரான் 3: 38-39