இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்கும்
தேவையான நன்மை மற்றும் பாதுகாப்பு துஆ
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதவ்
வஃபில் ஆகிரத்தி ஹஸனதவ்
வகினா அதாபன்னார்.
ஸூரத்துல் பகரா 2:201
பொருள் :
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் (இவ்வுலகத்திலும்) நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் (மறுஉலகத்திலும்) நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!”
குறிப்பு :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமாக அல்லாஹுவிடம் கேட்ட துஆ. இந்த துஆவில் இம்மை(இவ்வுலக) மற்றும் மறுமை(மறுஉலக) நன்மைகள் அனைத்தையும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து பாதுகாப்பையும் இறைவனிடம் கேட்கும் அற்புதமான குர் ஆனில் உள்ள துஆ. இதை நாம் எல்லா நேரங்களிலும் ஓதிக் கொள்ளலாம்.