Home


இரவு தூங்குவதற்கு முன்பு ஒத வேண்டிய துஆ

ஸூரா ஆல இம்ரான் 3: 191 - 194

பொருள் :

3:191.        “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”

3:192.        “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”

3:193.        “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்”;

                “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”

3:194.        “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல” (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).

ஆதாரம் : ஸூரா ஆல இம்ரான் 3: 191 - 192 - 193 - 194

விளக்கம் : அறிவுடையோரின் பிரார்த்தனை

        ஆக, வானங்கள் மற்றும் பூமியின் படைப்பு முறையைப் பற்றி சிந்திக்கும் அறிவுடையோர் தம் ஆராய்ச்சியின் முடிவில் இவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள்.

        “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)

        “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!” (என்றும்;)

        “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” (என்றும்;)

        “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி