பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பிரார்த்தனை (துஆ)
மனிதர்கள் மகிழ்ச்சியின் போது தன்னைப் படைத்த இறைவனை மறந்துவிட்டு துன்பம், நெருக்கடி, நிர்கதி ஏற்படும்போது தான் அவற்றிலிருந்து நீங்கி நிம்மதியடைய பிரார்த்தனையின் (துஆவின்) பக்கம் செல்கிறார்கள். அவ்வாறின்றி எந்நிலையிலும் மனிதர்கள் தன்னைப் பிரார்த்திக்க வேண்டும் என்பதையே அல்லாஹ் விரும்புகிறான்.
இதைத்தான் அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் "நீங்கள் (உங்களுக்கு வேண்டிய அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன்" (குர்ஆன் 40:60) என்று கூறுகிறான்.
அண்ணல் நபி(ஸல்) அவர்களும் துஆவின் முக்கியத்துவத்தைப் பற்றி "உங்களின் செருப்பின் வார் அறுந்தாலும், சிறிது உப்பு தேவைப்பட்டாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள்" என்று கூறியுள்ளார்கள். (கன்ஜுல் உம்மால்-3140)
எனவே நாம் அனைவரும் நமது ஈருலக நற்பாக்கியங்களை இறையச்சத்தோடும், மனத்தூய்மையோடும் துஆவின் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்வோமாக!
சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும். இதுவே இறைவனால் ஒரே தடவையில் முதலாவதாக, முழுதாக அருளப்பட்ட அத்தியாயமாகும். இது மக்காவில் அருளப் பட்டதாகும். இதன் பொருள் தோற்றுவாய் என்பதாகும். இது திருகுர்ஆனின் துவக்கத்தில் இடம் பெற்றிருப்பதால் இதற்கு இப் பெயர் ஏற்பட்டது என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். விளக்கம்
அல்லாஹுத் தஆலா ஜிப்ரீல்(அலை) மூலம் இந்த அத்தியாயத்தை இறக்கி வைத்தான்.மிகச்சுருக்கமான சிறிய இந்த அத்தியாயத்தின் மூலம் அல்லாஹ், தன்னைப்பற்றி கருத்தாழமிக்க தெளிவான விளக்கத்தை உலக மக்களுக்கு விளக்கி, "இறைவன் ஒருவன்" மட்டுமே என்ற ஏகத்துவ தத்துவத்தை தெளிவுபடுத்தியுள்ளான்.விளக்கம்
சூரத்துல் ஃபலக், சூரத்துன் நாஸ் திருக்குர்ஆனில் இறுதியாக இடம் பெற்றுள்ள இவ்விரு அத்தியாயங்களுக்கும் பெயரே "பாதுகாப்பு தேடப்படும் இரண்டு அத்தியாயங்கள்" என்பதாகும். இவ்விரு அத்தியாயங்களை அல்லாஹுத் தஆலா நமக்கு அனைத்து தீங்குகளிலிருந்து பாதுகாப்பு தேடும் துஆவாகவும், நோய் நிவாரணி ஆகவும் அருளியுள்ளான். விளக்கம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.விளக்கம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும். விளக்கம்
காலையில் ஓதும் துஆ "அஸ்பஹ்னா. வ அஸ்பஹல் முல்க்கு லில்லாஹ் வல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு" ... விளக்கம்
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” ... விளக்கம்
இறைவா! கவலையிலிருந்தும், துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிருந்தும், கோழைத் தனத்திலிருந்தும், கருமித்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.விளக்கம்
யா அல்லாஹ்! எனது உடலில் நலனைத் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனைத் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது பார்வையில் நலனைத் தந்தருள்வாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. விளக்கம்
ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல், அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்.விளக்கம்