பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பிரார்த்தனை (துஆ)
மனிதர்கள் மகிழ்ச்சியின் போது தன்னைப் படைத்த இறைவனை மறந்துவிட்டு துன்பம், நெருக்கடி, நிர்கதி ஏற்படும்போது தான் அவற்றிலிருந்து நீங்கி நிம்மதியடைய பிரார்த்தனையின் (துஆவின்) பக்கம் செல்கிறார்கள். அவ்வாறின்றி எந்நிலையிலும் மனிதர்கள் தன்னைப் பிரார்த்திக்க வேண்டும் என்பதையே அல்லாஹ் விரும்புகிறான்.
இதைத்தான் அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் "நீங்கள் (உங்களுக்கு வேண்டிய அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன்" (குர்ஆன் 40:60) என்று கூறுகிறான்.
அண்ணல் நபி(ஸல்) அவர்களும் துஆவின் முக்கியத்துவத்தைப் பற்றி "உங்களின் செருப்பின் வார் அறுந்தாலும், சிறிது உப்பு தேவைப்பட்டாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள்" என்று கூறியுள்ளார்கள். (கன்ஜுல் உம்மால்-3140)
எனவே நாம் அனைவரும் நமது ஈருலக நற்பாக்கியங்களை இறையச்சத்தோடும், மனத்தூய்மையோடும் துஆவின் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்வோமாக!
யா அல்லாஹ்! ஈமானின் அழகினால் எங்களை அழகு படுத்துவாயாக! மேலும் எங்களை நேர்வழி பெற்ற வழிகாட்டிகளாகவும் ஆக்கியருள்வாயாக! விளக்கம்
இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக! விளக்கம்
“என்னுடைய இரட்சகனே! நீ என்பால் எந்த நன்மையை இறக்கி வைத்திடினும் திண்ணமாக நான் அதன்பால் தேவை யுள்ளவனாகவே இருக்கின்றேன்” விளக்கம்
“என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” (அல்குர்ஆன் 29:30) விளக்கம்
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (அல்குர் ஆன் 37:100) விளக்கம்
ரப்பனஃ ஃபிர்லனா வலிஇஹ்வானினல்லதீன ஸபகூனா பில்ஈமான், வலா தஜ்அல் ஃபீ குலூபினா ஃகில்லல்லில்லதீன ஆமனூ ரப்பனா இன்னக ரஊஃபுர் ரஹீம். (59:10) விளக்கம்
அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன்அளில்ல அவ் உளல்ல, அவ் அஸில்ல அவ் உஸல்ல, அவ் அழ்லிம அவ் உழ்லம, அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலைய்ய.விளக்கம்