ஒவ்வொரு ஸஹாபாவின் பெயரின் பின்னால் (ரழி) என குறிப்பிட்டுள்ளதை ரழியல்லாஹுஅன்ஹு எனவும், முஹம்மது நபியின் பெயருக்கு பின் (ஸல்) என குறிப்பிட்டுள்ளதை ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் எனவும் தொடர்ந்து படித்து கொள்ள வேண்டுகிறோம்.
அபூபக்ர் (ரழி) அமீர் உல் முஃமினீன் (கி.பி573–கி.பி634) அவர்கள் அபூபக்ர் சித்தீக் என்ற புனைப்பெயரால் பொதுவாக அறியப்படுகிறார். அவரின் பெயர் அப்துல்லாஹ் இப்னு அபூகுஹாஃபா என்பது. இவர் நபி(ஸல்) அவர்களுக்கு பின் முதல் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். இவர் காலத்தில் உருவான குழப்பங்களை, இவர் எடுத்த திறமையான நடவடிக்கைகளால், இஸ்லாமிய மார்க்கம் அரேபிய நாட்டையும் தாண்டி வேகமாக பரவியது. இவர் இளமை முதலே பெருமானாரின் மிக நெருங்கிய தோழராக இருந்து வந்தார். விரிவு
உமர் இப்னு அல்-கத்தாப் (ரழி) அமீர் உல் முஃமினீன் (கி.பி580-கி.பி644) அவர்கள் கலீபாக்களில் இரண்டாமவரும், அவர்களுள் முக்கியமானவரும் ஆவார். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஆலோசகரும், தோழரும் ஆவார்கள். “அஷ்ரதுல் முபஷ்ஷராஹ்” எனப்படும் சுவர்க்கத்துக்கு நன்மாராயங் கூறப்பட்ட பதின்மருள் ஒருவராவார். நபி(ஸல்) அவர்களுக்கு பின்னர் முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாகப் பொறுப்பேற்றார். இவரது நிருவாக மற்றும் போர்த் திறமையால் இஸ்லாமிய ஆட்சிப் பரப்பு மிக வேகமாக வளர்ச்சியடைந்தது. இவரது ஆட்சி காலத்தில் ஈராக், ரோம், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் அர்மீனியா ஆகிய பகுதிகள் வெற்றி கொள்ளபட்டது.விரிவு
உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அமீர் உல் முஃமினீன் (கி.பி.579-கி.பி.656) அவர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மருமகனும், பிரசித்திப் பெற்ற நபித்தோழர்களில் ஒருவரும் ஆவார். ”குலாபாயே ராஷிதீன்” இஸ்லாத்தின் மூன்றாம் கலீபாவாக (கி.பி.644முதல் கி.பி.656 வரை) பதவி வகித்தார்கள். இவரின் ஆட்சியில் ஈரான், வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா மற்றும் சைப்பிரசு ஆகிய பகுதிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் கடற்படை உருவாக்கப்பட்டது. திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடை பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது. விரிவு
அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அமீர் உல் முஃமினீன் (கி.பி. 600 - கி.பி. 661) அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களின் மருமகனும், நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையார் அபூதாலிபின் மகனுமாவார். அலீ(ரழி) அவர்கள் கிபி 656 முதல் கிபி 661 வரை நான்காவது கலீபாவாக ஆட்சி செய்தார்கள், அலீ(ரழி) ”குலாபாயே ராஷிதீன்” கலீபாக்களில் நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார்கள். நபி (ஸல்) அவர்களின் திருவதனங்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட 10 நன்மக்களில் அலீ (ரழி) அவர்களும் ஒருவராவார். விரிவு
அன்னை கதீஜா(ரழி)(கி.பி. 555-கி.பி.619) அவர்கள் மிகவும் வசதியான, கௌரவமிக்க குடும்பத்தில் பிறந்திருந்த அருமைத் தாயார் ஆவார்கள். இயற்கையிலேயே இறைநம்பிக்கை, வாய்மை, பண்பாடுகள், அருங்குணங்கள் இன்னும் கொடைத் தன்மை மிக்கவர்களாக வளர்ந்து வந்தார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த தூதை முதன் முதலாக ஏற்று இறைவிசுவாசம் கொண்டு, அதனைத் தனது வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக் கொண்டவர் களாகத் திகழ்ந்தார்கள்.விரிவு
ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரழி) (கி.பி.613-கி.பி.678) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” (இறை நம்பிக்கையாளர்களின் அன்னையர்) என்றும் அழைக்கப்படுபவர். “சித்தீக்கா” என்ற சிறப்புப் பெயர் இவருக்கு உண்டு. நபி (ஸல்) அவர்களுடன் மிக நீண்ட காலங்கள் வாழ்ந்திருந்ததன் காரணமாக, அதிகமான நபி மொழிகளையும் நமக்கு அறிவிப்புச் செய்திருக்கின்றார்கள். மிகச் சிறந்த அறிவாளியாகவும், அதிக ஞாபகசக்தியும் பெற்றுத் திகழ்ந்தார்கள், இன்னும் நேர்மை, நாணயம், நம்பிக்கை ஆகியவற்றில் மிகச் சிறந்த விளங்கிய அவர்கள், வாழ்ந்த கால கட்டத்தில் இஸ்லாமிய பிக்ஹுச் சட்டங்கள், ஷரிஅத் சட்டங்கள் இன்னும் இஸ்லாமியச் சட்டங்களின் பல கிளைகளிலும் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தார்கள். விரிவு
கதீஜா (ரழி) அவர்களின் மரணத்தை அடுத்து நபி(ஸல்) அவர்களது வாழ்க்கைத் துணைவியாக வாழ்க்கைப்பட்ட இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களின் வரிசையில், ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழி) அவர்கள் இருந்தார்கள். இறைநம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் அற்பணம் ஆகியவற்றில் தாயவர்கள் மிகச் சிறந்த இடத்தை வகித்தார்கள். இவர்களது எளிமை மற்றும் சுயநலமில்லாத தயாள குணம் ஆகியநற்குணங்கள் ஆயிஷா (ரழி) அவர்களது மனதை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மக்களில் ஒருவராகவும், இன்னும் இருமுறை ஹிஜ்ரத் செய்த பாக்கியத்தைப் பெற்றவர்களுமாவார்கள். ஒருமுறை அபிசீனியாவிற்கும் இன்னுமொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் சென்றார்கள். இவர்களது வாழ்வு, உலகத்துப் பெண்மணிகளுக்கோர் முன்னுதாரணமாகும். விரிவு
ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி) (கி.பி.605- கி.பி.665)அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” (இறை நம்பிக்கையாளர்களின் அன்னையர்) என்றும் அழைக்கப்படுபவர். இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா ஆட்சித் தலைவரான உமர் பின் கத்தாப் (ரழி)அவர்களின் மகள் தான் அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி) அவர்கள். அன்னையவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை மிகவும் பேணுதலுடன் பின்பற்றும் பெண்மணியும், இன்னும் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதிலும், நோன்பு நோற்பதிலும் அன்னையவர்கள் மிகுந்த கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். விரிவு
ஜைனப் பின்த் குஜைமா (ரழி) (கி.பி.595-கி.பி.627) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களில் ஏழைகளுக்கு இரங்கக்கூடியவர்களாகவும், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டக் கூடியவர்களாகவும் திகழ்ந்திருக்கின்றார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். ”உம்முல் மஸாக்கின்” (Umm al-Masakin) என்ற சிறப்புப் பெயர் இவருக்கு உண்டு. நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே மரணமடைந்த மனைவிமார்களில் இவரும் ஒருவர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், சொர்க்கத்தை அனந்தரங்கொள்ளக் கூடிய பெண்களைத் தான் இறைவன் என்னை மணமுடித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளான். விரிவு
உம்மு ஸலமா (ஹிந்த் பின்த் அபூ உமைய்யா) ரலி (கி.பி.596-கி.பி.680) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவார். அன்னையவர்களின் இயற்பெயர் ஹிந்த் பின்த் உமைய்யா என்றிருந்த போதும், உம்முஸலமா (ரலி) என்றே மிகப் புகழோடு அழைக்கப்பட்டு வந்தார்கள். வரலாறு அவ்வாறே அவர்களது பெயரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. பிறப்பு மற்றும் வம்சாவழிச் சிறப்புகளின் அடிப்படையில், இயற்கையிலேயே புத்திக் கூர்மையுள்ள, கல்வியறிவுள்ள, நேர்மையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் கொண்டவர்களாக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள். விரிவு
அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) (கி.பி.590-கி.பி.641) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர். தானதர்மங்கள், தேவையுள்ளவர்களுக்கு இரங்குதல், தொழுகையில் தனிப்பட்ட அற்பணிப்புடன் தொழுதல் ஆகியவற்றில் தனிச்சிறப்புடன் விளங்கிய அன்னையவர்கள், முதல் கணவராக நபித்தோழரும், நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனுமான ஜைது பின் ஹாரிஸாா (ரழி) அவர்களை மணந்து பின்னர் விவாகரத்து ஆனார்கள். மேலும் இறைவனின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்களுடன் அன்னையரின் திருமணத்தை இறைவனே நடத்தி திருமறைக் குர்ஆனின் 33:37 வசனம் மூலம் வெளிபடுத்தினான். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” இறை நம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவார். விரிவு
அன்னை ஜுவைரிய்யா பின்த் ஹாரிஸ் (ரழி) (கி.பி.608- கி.பி.676) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” இறை நம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவார். அன்னையவர்களின் மூலமாக நூற்றுக்கணக்கான அவர்களது குலத்தவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றார்கள். புத்திக்கூர்மையுள்ள மற்றும் நேர்மை மிக்கவரான இவர், மொழிகளிலும், இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.விரிவு
உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூஸுஃப்யான் (ரழி) (கி.பி.689-கி.பி.665) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் ஒருவர். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவார். இஸ்லாம் அறிமுகமான ஆரம்ப காலத்திலேயே அன்னையவர்கள் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டார்கள்.விரிவு
ஸஃபிய்யா பின்த் ஹய் (ரழி) (கி.பி.610-கி.பி.670) அவர்கள் இஸ்ரவேலர்களின் பனூ நழீர் கூட்டத்தாருடைய தலைவரின் மகள். கைபர் போரில் கைதியானார். இவரை நபி (ஸல்) தனக்காக எடுத்துக் கொண்டு இஸ்லாமுக்கு வரும்படி அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ளவே நபி (ஸல்) அவரை உரிமை விட்டு, கைபரிலிருந்து திரும்பும் போது ஹிஜ்ரி 7 இல் மணமுடித்துக் கொண்டார்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவார். விரிவு
மைமூனா பின்த் ஹாரிஸ் அல் ஹிலாலிய்யா (ரழி) (கி.பி.594- கி.பி.673) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” இறை நம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவார். அன்னையவர்களின் இயற்பெயர் பரா என்பதை நபி(ஸல்) அவர்கள் மைமூனா என்று மாற்றினார்கள். மைமூனா (ரலி) அவர்கள் இறையச்சம் மிக்க பெண்மணியாகத் திகழ்ந்ததோடு, நற்பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாடுகளைக் கொண்டவர்களாகவும் திகழ்ந்ததோடு, உறவுகளைப் பேணக் கூடியவர்களாகவும் திகழ்ந்தார்கள். இவர் உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் ஹாரிஸின் சகோதரியாவர்.விரிவு