ஒவ்வொரு ஸஹாபாவின் பெயரின் பின்னால் (ரழி) என குறிப்பிட்டுள்ளதை ரழியல்லாஹுஅன்ஹு எனவும், முஹம்மது நபியின் பெயருக்கு பின் (ஸல்) என குறிப்பிட்டுள்ளதை ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் எனவும் தொடர்ந்து படித்து கொள்ள வேண்டுகிறோம்.
மக்காவிலிருந்து சிரியா செல்லும் பாட்டையில் வாழ்ந்து வந்த குறைஷிகளில் ஒரு பிரிவினரான கிஃபாரிக் கூட்டத்தைச் சேர்ந்தவர் இவர். அக்கூட்டத்தினர் சிரியா செல்லும் வழியில் வாழ்ந்து வந்தார்கள். வாணிபம் செய்து வந்த இவர்கள் பின்னர் வணிகக் கூட்டத்தினரைக் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர். அவர்களின் தலைவராக ஜுன்தப் என்ற இயற்பெயர் பெற்றிருந்த அபூதர் கிஃபாரி இருந்து வந்தார்கள். தம் கூட்டத்தினர் புனித மாதங்களில் கொள்ளையடிப்பதை விரும்பாத இவர்கள் அவர்களை விட்டும் பிரிந்து தம் அன்னை ரம்லாவுடனும், தம்பி அனீஸுடனும், நஜ்திலிருந்த தம் தாய் மாமன் வீடு சென்று வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் தம்பி அனீஸ் ஒரு கவிஞர் பல கவிதைப் போட்டிகளில் அவர் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்... விரிவு
இஸ்லாத்தை முதன்முதலில் தழுவியவர்களில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களும் ஒருவர். மக்காவில் முதன் முதலில் குர் ஆனை பகிரங்கமாக உரத்தகுரலில் ஓதியதற்காக, குறைஷிக்காபிர்களால் கொடுமையாக தாக்கப்பட்டார்கள். மக்காவை துறந்து அபிஸீனியாவுக்கு சென்றவர்களில் இவர்களும் ஒருவர். இஸ்லாத்திற்காக நிகழ்த்தப்பட்ட பத்ரு போர் முதல் பல புனித யுத்தங்களில் பங்குபற்றியவர். ஹலரத் அபூபக்ர் (ரழி), ஹலரத் உமர் (ரழி) அவர்களின் கலீபா காலங்களில் பொறுப்பான பல பதவிகளை வகித்திருக்கிறார்கள். மேலும் 848 ஹதீஸ்களுக்கு இவர்கள் சாட்சியாக இருக்கிறார்கள். இவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உறவினர் என்று பலர் நெடுங்காலம் வரை எண்ணிக் கொண்டிருக்கும் படி அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இவர்கள் பல்வேறு ஊழியங்கள் செய்து பெருமானாரின் அன்பை பெற்றவர்கள்... விரிவு
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.611 - கி.பி.712) இவர்கள் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் சிறப்பு பெயர் அபூ ஹம்ஸா என்பதாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹதீதுகளைத் திரட்டிய முக்கியஸ்தர்களில் ஒருவர். இவருக்கு பத்து வயதாக இருக்கும் போது இவரது அன்னையார் நபி (ஸல்) அவர்களிடம், அவர்களின் பணியாளராக இவரை ஒப்படைத்தார். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அந்திய காலம் வரையிலும், இவர்கள் பெருமானாரின் சிறந்த பணியாளராகச் சேவையாற்றி யுள்ளார்கள். எனவே இவர்களுக்கு “ஹாதிம் ரசூலுல்லாஹ்” என்னும் சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இஸ்லாத்திற்காக நடைபெற்ற யுத்தங்களிலெல்லாம் நேரடியாக இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.... விரிவு
ஹல்ரத் உமர் (ரழி) அவர்களின் மூத்தப் புதல்வர் அப்துல்லாஹ். பொதுவாக இப்னு உமர் என்று அழைக்கப்பட்ட இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நபிப் பட்டம் வருவதற்கு ஓராண்டுக்கு முன் மக்காவில் பிறந்தனர். தந்தை உமர் (ரழி) தாயார் ஜைனப் பின்த் மஸ்வூன் ஆவர். தந்தையுடன் சேர்ந்து இவர்கள் இஸ்லாத்தைத் தழுவினர். பெருமானார் (ஸல்) அவர்களின் மெய்காவலராகப் பணியாற்றியவர். இஸ்லாத்திற்காக நடைபெற்ற போர்கள் அனைத்திலும் பங்கு பற்றியவர். மத வைராக்கியமிக்க அப்துல்லாஹ் ராணுவத் திறமை மிகுந்தவராகவும் இருந்தார். இதன் காரணமாக இஸ்லாத்திற்காக நடைபெற்ற போர்களில் ஆயுள் பரியந்தம் நேரடியாகப் பொறுப்பேற்றிருந்தார் அப்துல்லாஹ் அவர்கள்.விரிவு
கஸ்ரஜ் கோத்ரத்தைச் சேர்ந்த இவர்களது முழுப் பெயர் கஃப் இப்னு மாலிக் அபூ அப்துல்லாஹ் என்பதாகும். இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யும் முன்பே, இரண்டாவது அகபா உடன்படிக்கையின் போது இஸ்லாத்தின் சிறப்பையுணர்ந்து இஸ்லாத்தை தழுவினார். இஸ்லாமியக் கவிஞர்களான ஹஸ்ஸான் இப்னு தாபித், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஆகியவர்களுடன் இவர் மூன்றாமவராய்க் கருதப்பட்டார். இஸ்லாத்தின் விரோதிகள் மீது இவர் கண்டனக் கவிதைகள் பாடியுள்ளார். இஸ்லாமிய எதிரிகள் எழுப்பிய வினாக்களுக் கெல்லாம், அவர்களது சக்தியே சிதறும்படி இவர் பல பாடல்கள் மூலமே பதில் அளித்திருக்கிறார். இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டாரா, இல்லையா என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. பத்ருப் போரைத் தவிர பிற எல்லா போரிலும் கஃப் இப்னு மாலிக் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார். உஹது போரில் நபி (ஸல்) அவர்களுக்குக் காயமேற்பட்டதை அறிந்ததும், அவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக முன் வந்து அதனால் படுகாயமடைந்தார்..விரிவு
குபைப் இப்னு அதீ அல் அன்சாரி என்பது இவரது முழுப் பெயராகும். ஆரம்ப காலத்தில் இஸ்லாத்திற்காக தியாகம் செய்தவர்களில் இவரும் ஒருவர். அண்ணல் நபி (ஸல்) அவர்களால் மக்காவுக்கு அனுப்பப் பட்ட தூதர்களில் இவர்களும் அனுப்பப் பட்டார்கள். பத்ரு போரில் கலந்து கொண்ட இவர்கள் அங்கு எதிரியும் மக்காவாசியுமான ஹாரித் என்பரைப் பத்ருப் போரில் கொன்றவராதலின் இவரை ஒரு நயவஞ்சக கும்பல் கடத்தி எதிரிகளிடம் விற்று விடுகின்றனர். இதன் பின்னர் “இஸ்லாத்தைத் துறக்க வேண்டும் அல்லது இறக்க வேண்டும்” என்று குபைப்பை வற்புறுத்தினர் எதிரிகள். இந்த உலகிலிருந்து இறக்கத் தயார்; உயிர் வாழ்வதற்காக இஸ்லாத்தைத் துறக்க முடியாது என்று உறுதியாகக் கூறினார்கள் ஹல்ரத் குபைப் (ரழி) அவர்கள்...விரிவு
பூனைக்குட்டிகளிடம் அதிகப் பிரியமுடையவர்களாக இருந்ததால் பூனைக் குட்டிகளின் தந்தை என்ற சிறப்புப் பெயரில் அபூ ஹுரைரா என்று அழைக்கப் பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையும் செயலையும் அதிகமாகப் பரப்பியவர்களில் ஹல்ரத் அபூஹுரைரா அவர்களைப் பிரதானமாகக் குறிக்கப் படுகிறது. கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களோடு சேர்ந்தார் ஹல்ரத் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள். சுமார் 3500 ஹதீதுகளுக்கு இவர்கள் சாட்சியமளித்துள்ளார்கள். ஹல்ரத் உமர் (ரழி) அவர்களாலும், மதீனாவின் கவர்னராக இருந்த ஹல்ரத் மர்வான் அவர்களாலும், இவர்களுக்கு பல பதவிகள் கொடுக்கப்பட்டன. இவர்கள் எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். ஹிஜ்ரி 57ல் தனது 78ம் வயதில் மதீனாவில் காலமானார்கள்...விரிவு
பாரசீக நாட்டில் பிறந்த இவர்கள், கிருஸ்துவர்களின் வணக்க முறையால் கவரப்பட்டு கிருஸ்துவராகி பாதிரிகளின் ஊழியத்தில் இருந்தனர். பின்னர் ஒரு பாதிரியின் வழிகாட்டல் படி அண்ணல் நபி (ஸல்) அவர்களை தேடி அலைந்து ஒரு கூட்டத்தரிடம் மாட்டி யாத்ரிபில் (தற்கால மதீனாவில்) ஒரு யூதரிடம் அடிமையாக்கப்பட்டார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் புறப்பட்டு குபா வந்து சேர்ந்து, அங்கு தங்கி இருந்த பொழுது, அவர்களிடம் கிருஸ்துவப் பாதிரியார் கூறிய அடையாளங்களைக் கண்ட இவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு ஸல்மான் என்று பெயரிட்டார்கள். அடிமையான இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முயற்சியால் விடுதலையானார். இவரின் ஆலோசனை படியே அகழ் தோண்டி நபி (ஸல்) அவர்கள் யுத்தம் செய்தார்கள். நீண்ட காலம் வாழ்ந்த நபித் தோழர்களில் ஒருவரான இவர்கள் மதாயினின் ஆளுநராய் இருந்த பொழுதே கி.பி 652இல் ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டு காலமானார்கள்....விரிவு
அபூ ஐயூப் அன்ஸாரி அவர்கள் அகபா உடன் படிக்கையில் பங்கு கொண்டவர்களாவர். அப்துல் முத்தலிபின் அன்னை ஸல்மா, பனூ நஜ்ஜார் குலத்தில் தோன்றியமையின் இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குத் தூரத்து உறவினராவார்கள் அபூஐயூப் அன்ஸாரி (ரழி) அவர்களின், இல்லத்தின் முன் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களைச் சுமந்து வந்த அல் கஸ்வா என்னும் ஒட்டகம் நின்றது. பின்னர் அது சற்றுத் தொலை சென்று மீண்டும் அவ்விடத்திலேயே வந்து படுத்துக் கொண்டது. எனவே இவர்களின் வீட்டையே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தற்காலிகத் தங்குமிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அது கண்டு அபூ ஐயூப் அன்ஸாரிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை...விரிவு
அபூமூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் அஷ்அரீ என்பது இவர்களின் முழுப்பெயராகும். இவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலேயே யமனிலிருந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவராவார். மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களோடு அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் இவரும் ஒருவர். கைபர் வெற்றிக்குப் பின்னரே இவர்கள் அபிஸீனியாவிலிருந்து மக்காவுக்கு திரும்பினார்கள். இதன் பின் ஒரு மாகாணத்தின் கவர்னராகப் பெருமானார் (ஸல்) அவர்களால் அல் அஷ்அரீ நியமிக்கப்பட்டார். பின்னர் இரண்டாவது கலிபாவான உமர் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 17 இல் பஸ்ராவுக்கும், ஹிஜ்ரி 22 இல் கூபாவுக்கும், ஹிஜ்ரி 23 இல் மீண்டும் பஸ்ராவுக்கும் அல் அஷ்அரீ அவர்களை கவர்னராக நியமித்தார். ஹல்ரத் உதுமான் (ரழி) அவர்கள் கலீபாவாக இருந்த போது ஹிஜ்ரி 34 இல் கூபாவுக்கு கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். பின்னர் ஹல்ரத் அலீ (ரழி) அவர்களுக்கும் அமீர் முஆவியாவுக்கு மிடையே நடந்த ஸிஃப்ஃபீன் போரில் இருதரப்பினருக்கும் மத்தியஸ்தம் செய்து வைப்பதற்காக நியமிக்கப்பட்ட இரு மத்தியஸ்தர்களில் அல் அஷ் அரீ அவர்களும் ஒருவராகும். ஹிஜ்ரி 42 இல் கூபாவில் தங்களின் 52 வது வயதில் இவர்கள் காலமானார்கள்...விரிவு