ஒவ்வொரு ஸஹாபாவின் பெயரின் பின்னால் (ரழி) என குறிப்பிட்டுள்ளதை ரழியல்லாஹுஅன்ஹு எனவும், முஹம்மது நபியின் பெயருக்கு பின் (ஸல்) என குறிப்பிட்டுள்ளதை ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் எனவும் தொடர்ந்து படித்து கொள்ள வேண்டுகிறோம்.
நபி தோழர்களில் ஒருவரான இவர்களின் இயற்பெயர் உவைமிர் என்பதாகும். தந்தையின் பெயர் ஆமிர். கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குத் தர்தாஉ என்னும் மகன் இருந்ததன் காரணமாக இவர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது. இவர்கள் தம் குடும்பத்தினர் அனைவரும் பத்ரு போருக்கு பிறகு இஸ்லாத்தைத் தழுவினார்கள். இவர்கள் சிறந்த அறிஞராக விளங்கியதால் “ஹகீமுல் உம்மத்” என்று இவர்கள் போற்றப்பட்டார்கள். பத்ருப் போரைத் தவிர்த்து ஏனைய போர்களில் இவர்கள் கலந்து கொண்டனர்... விரிவு
உஸாமா இப்னு ஜைத் (ரழி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமை ஜைத் பின் ஹாரிதாவின் மகனாவார். இவரின் அன்னை உம்மு ஐமனாவார். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தாயார் ஆமினாவின் நீக்ரோ அடிமைப் பெண்ணாகிய இவர் அன்னை ஆமினா அவர்கள் அப்வா என்ற இடத்தில் இறந்த பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவர்களின் பாட்டனாரிடம் கொண்டு வந்து சேர்த்தார். இவரைத் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “என் அன்னைக்குப் பின் நீர் தான் என் அன்னை” என்று கூறினர். இத்தம்பதிகளுக்கு பிறந்த மகனாகிய இவர் தம் தாய் போன்று கறுப்பாகவும் சப்பை மூக்குடனும் இருந்தார்... விரிவு
மதீனாவின் ஆதரவாளர்களில் ஒருவரான இவரின் முழுப் பெயர் அஸ்அது இப்னு ஜுராரா இப்னு அதஸ் இப்னு உபைதுல் அன்ஸாரி அல் நஜ்ஜாரி அல் கஸ்ரஜ் என்பதாகும். யத்ரிபின் (மதினாவின்) பழங்குடிகளான அவ்ஸ்களுக்கும், கஸ்ரஜ்களுக்கும் இடையே நடந்து வந்த சண்டையில் தோற்கடிக்கப் பட்ட கஸ்ரஜ்கள், குறைஷிகளின் உதவியை நாடி, இவர்கள், தக்வான் என்பவரையும் அழைத்துக் கொண்டு மக்கா வந்தனர். அங்கு வந்த இவர்கள் அங்கு தங்களுக்கு அறிமுகமானவரான உத்பா இப்னு ரபீஆ என்பவரின் மூலமாகக் குறைஷிகளின் உதவியை நாடிய பொழுது, குறைஷிகள், “உங்களுடைய ஊரோ வெகுதொலைவில் உள்ளது. எங்களிடையே ஒரு மனிதர் தோன்றி, தம்மை நபியென்று கூறி, எங்களின் மூதாதையரும், நாங்கள் தொழுதுவரும் தொழு உருவங்களையெல்லாம் வெறும் கல்லுருவங்களெனக் கூறி எங்களையெல்லாம் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார். அவரைச் சமாளிப்பதே எங்களுக்குப் போதும் போதும் என்றிருக்கிறது” என்று கூறிக் கையை விரித்து விட்டனர். ஏமாற்றத்துடன் வெளியே வந்த தக்வான், அஸ்அது அவர்களை நோக்கி, “குறைஷிகள் கூறுவதைப் பார்த்தால், யத்ரிபில் நீரும், உம்முடைய நண்பரும் பேசிக் கொண்ட மார்க்கம் போன்றல்லவோ இருக்கிறது இது?” என்று சொன்னார். “ஆம்” என்று பதில் கூறினார் அஸ்அது.... விரிவு
ஹஸன் இப்னு அலீ (ரழி) (2 மார்ச் 625 - 2 ஏப்ரல் 670 கிபி ) அவர்கள், அலீ (ரழி) அவர்களுக்கும் பாத்திமா (ரழி) அவர்களுக்கும் முதல் மகனாக ஹிஜ்ரி 3, ரமலான் பிறை 15 வியாழக்கிழமை (2 மார்ச் 625) மதீனாவில் பிறந்தார்கள். இவர்கள் பிறந்ததும் இவர்களுடைய காதுகளில் பாங்கு சொல்லி, தங்கள் வாயில் வைத்து சுவைத்த பேரீத்தம் பழத்தை இவர்களுக்கு தீத்தியவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மேலும் உருவில் தம்மை ஒத்திருந்த இவர்களுக்கு, இவர்களின் பெற்றோர்கள் இட்ட ‘குஹாப்’ என்ற பெயரை மாற்றி ஹஸன் (அழகர்) என்ற பெயரைச் தன் பேரனுக்கு சூட்டியவர்களும் அவர்களே. இவர்களுக்கு அபூ முஹம்மது என்ற ‘குன்யத்’ பெயரும் மற்றும் சில சிறப்புப் பெயர்களும் உண்டு. “ஹஸனும் ஹுஸைனும் சுவர்க்கத்தின் இரு மலர்கள்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.விரிவு
ஹுஸைன் இப்னு அலீ (10 ஜனவரி 626 - 10 அக்டோபர் 680 கி.பி.) அவர்கள் அலீ (ரழி) அவர்களுக்கும் பாத்திமா (ரழி) அவர்களுக்கும் இரண்டாம் மகனான ஹிஜ்ரி 4 ஷஅபான் 5 ஆம் நாள் மதீனாவில் பிறந்தார்கள். ஹஸன் (ரழி) பிறந்த ஐம்பதாவது நாளில் இவர்கள் தங்கள் அன்னையின் வயிற்றில் கருவுற்றிருக்கலாம் என்று வாக்கிதி கூறுகிறார். இடுப்புக்கு மேல் அண்ணல் நபி (ஸல்) அவர்களை உருவத்தில் ஹஸன் (ரழி) ஒத்திருந்தார்கள் எனவும் இடுப்புக்கு கீழே அண்ணல் நபி (ஸல்) அவர்களை உருவத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஒத்திருந்தார்கள் எனவும் கூறுவர். கர்பலா போரில் இவர்கள் அநியாயமான முறையில் ஷஹீதாக்கப்பட்டார்கள், மேலும் இவர்களின் குடும்பத்தினர் 72 பேர்களும் இப்போரில் கொல்லப்பட்டார்கள்.விரிவு
ஹஸ்ஸான் இப்னு தாபித் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி. 563 - கி.பி. 674) அவர்கள் கஸ்ரஜ் குலத்தில் ஏறத்தாழ கி.பி. 563 ஆம் ஆண்டில் யாத்ரிபில் பிறந்தார். இவர் ஒரு அரேபியக் கவிஞர், நபி தோழர்களில் இவரும் ஒருவர். இவரது தந்தை தாபித், இவரது பாட்டனார் அல்முந்திர் ஆகியோர்களும் கவிஞர்களாய் விளங்கினர். சிறந்த கவிஞராகிய இவர் தொடக்கத்தில் கஸ்ஸானிய அரசர்களின் அரசவைக் கவிஞராய்ப் பணியாற்றினார். பின்னர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மதீனா வருகை (ஹிஜ்ரத்)தின் போது இஸ்லாத்தினை தழுவிய இவர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன் புகழ்ந்தும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எதிரிகளை தாக்கியும் கவி பாடிய கவிஞர் மேலும் இவரே இஸ்லாத்தின் முதல் மதக் கவிஞரும் ஆவார்.விரிவு
நபிதோழர்களில் ஒருவரான இவர்களின் முழுப்பெயர் உக்காஷா இப்னு மிஹ்ஸன் இப்னு ஹர்த்தான் இப்னு கைஸ் என்பதாகும். இவர் பனீ அஸத் கிளையைச் சேர்ந்தவர். துவக்கத்திலேயே இஸ்லாத்தைத் தழுவிய மதீனாவின் ஆதரவாளர்களில் இவரும் ஒருவர். பத்ரு போரில் இவர்களின் வாள் ஒடிந்து விடவே, இவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு மரக்கிளையை கொடுத்து போரிட கூறினார்கள். அந்த மரக்கிளை உறுதிமிக்க நீண்ட ஒரு வாளாக மாறியது. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி கொடுக்கும் வரை அவ்வாளால் உக்காஷா (ரழி) போரிட்டார். பின்னரும் இந்த வாளை மற்றும் பல போர்களில் உக்காஷா (ரழி) பயன்படுத்தினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் எவ்விதக் கேள்வி கணக்குமின்றி சுவனம் செல்வோரில் தாமும் ஒருவராக இருக்குமாறு இறைஞ்ச வேண்டினார். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நீரும் ஒருவரே” என்று நன்மாராயம் மொழிந்தனர்.விரிவு
அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்கள் ஓர் ஏழைக் குருடர். இவரின் இயற்பெயர் அம்ர் இப்னு கைஸ் என்றும், இவர் ஹிலால் கிளையைச் சேர்ந்தவர் என்றும், இவரின் இயற்பெயர் அப்துல்லாஹ் இப்னு ஷுரை என்றும், இவர் லுவய்யி கிளையைச் சேர்ந்தவரென்றும் இரு வேறு விதமாகக் கூறப்படுகிறது. இவர் கதீஜா (ரழி) அவர்களின் மாமன் மகன் என்றும் ஒரு வரலாறும் உள்ளது. ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தைத் தழுவிய நபித்தோழர் இவர்.விரிவு
குறைஷிகளில் ஜுமாப் பிரிவைச் சேர்ந்த இவர் இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பதின்மூன்றாவது நபராவார். மக்காவில் ஆரம்ப கால குறைஷி காபிர்களின் துன்புறுத்தல்கள் கொடுமைகள் அதிகமாக இருந்தபொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் படி இவருடைய தலைமையின் கீழ் தான் முதன் முதலாகப் பதினோர் ஆண்களும் நான்கு பெண்களும் அபிஸீனியாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்தனர்.விரிவு
ஹிஜ்ரத்திற்கு இருபது ஆண்டுகள் முன் மக்காவில் பிறந்தார். தொடக்கத்தில் இவர்கள் இஸ்லாத்திற்கும் இறுதி நபி அவர்களுக்கும் விரோதமானவராய் இருந்தனர். ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டில் நிகழ்ந்த உஹத் போரில் இவர்கள் குறைஷிப் படையணியில் சேர்ந்து முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நிற்கச் சொன்ன இடத்தை விட்டு முஸ்லிம் வீரருள் சிலர் இடம் பெயர்ந்ததைப் பயன்படுத்தி அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெறாமல் செய்தவர்கள் இவர்கள்தாம். பின்னர் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிம்களில் மிகப் பெரும் தளபதியருள் ஒருவரானார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அதன் பின் அபூபக்ர் (ரழி) மற்றும் உமர் (ரழி) அவர்களின் ஆட்சி காலங்களில் நடைபெற்ற போர்களில் முஸ்லிம்களைத் தோற்கடிக்க, கிருஸ்தவ உலகமே திரண்டெழுந்த பொழுது எதிரிப்படைகள் வியப்புறும் வண்ணம் போர் செய்து வெற்றிக்கு வழிகோலியவர். விரிவு