ஒவ்வொரு ஸஹாபாவின் பெயரின் பின்னால் (ரழி) என குறிப்பிட்டுள்ளதை ரழியல்லாஹுஅன்ஹு எனவும், முஹம்மது நபியின் பெயருக்கு பின் (ஸல்) என குறிப்பிட்டுள்ளதை ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் எனவும் தொடர்ந்து படித்து கொள்ள வேண்டுகிறோம்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) (கி.பி. 581-கி.பி.654) அவர்கள், அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருங்கிய தோழர்களில் இவரும் ஒருவராக இருந்தார். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் இவ் உலகிலேயே செர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார். மிகச் சிறந்த வியாபாரியும், இன்னும் மத விவகாரங்களில் மிகச் சிறந்த ஞானத்தையும், உண்மையையும், நேர்மையையும் பண்பாகப் பெற்றவர். கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். பத்ரு, உஹது, மற்றும் பல போர்களிலும் தீரமுடன் கலந்து கொண்டு வீரப் போர் புரிந்துள்ளனர். சிறந்த கொடையாளியாகவும் திகழ்ந்தார். விரிவு
ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) (கி.பி.595 - கி.பி.674) அவர்கள் ஸஅத் இப்னு மாலிக் என்றும் அறியப்படுகிறார்கள். திருமறைக் குர்ஆனில் புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பல நபித்தோழர்களில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் உஹதுப்போர்க்களத்தில் தனது வில்லிலிருந்து அம்புகளை மழை என எதிரிகளின் மீது பொழிந்து எதிரிகளை நிலைகுலையச் செய்தவரும் ஆவார். மேலும் முக்கியமாக கதீஸிய்யாப் போருக்கு தலைமைத் தளபதியாக ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் நியமித்தார்கள். கி.பி636இல் ஈரானைக் கைப்பற்றியதிலும் தளபதியாக இருந்தார்கள். ஈரான் கவர்னராகவும், கி.பி 651இல் உஸ்மான்(ரழி) அவர்கள் காலத்தில் சீனாவிற்க்கு சென்று திரும்பிய தூதுவராகவும் பணியாற்றியவர்கள். நபி (ஸல்) அவர்களால் இவ் உலகிலேயே செர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பெற்ற பத்து பேரில் இவர்களும் ஒருவர். விரிவு
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) (கி.பி. 594 - கி.பி. 657) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரன்புடைய தோழர்களில் இவரும் ஒருவராக இருந்தார். உஹது போரில் நபி (ஸல்) அவர்களின் உடலுக்கு முன் கேடயம் போல் நின்று எதிரிகள் எய்த அம்புகளை அனைத்தையும் தன் உடம்பில் வாங்கி அரண் போல நபி (ஸல்) அவர்களை தன் உயிரை விட மேலாக பாதுகாத்தவர். அண்ணல் நபி(ஸல்) அவர்களால் இவ் உலகிலேயே சொர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார். மிகச் சிறந்த வியாபாரியும், உயர் பண்புடையவரும், பெருந் தன்மையுள்ளவரும், சிறந்த கொடையாளியாகவும் தல்ஹா (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். பூமிக்கு மேல் நடமாடும் ஷஹீது (உயிர் நீத்த தியாகி) என பாராட்டை நபி (ஸல்) அவர்களிடம் பெற்றவர். விரிவு
அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.583 - கி.பி.639) அவர்களின் இயற்பெயர் ஆமிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு அல்ஜர்ராஹ் என்பதாகும். உலகத்திலேயே சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்ற பத்து பேரில் இவர்களும் ஒருவர். பத்ருப் போரில் தம் தந்தை அப்துல்லாஹ்வை எதிர்த்துப் போரிட்டு அவரைத் தம் வாளுக்கு இரையாக்கினார்கள். உஹத் போரில் நபி (ஸல்) அவர்களின் உடலில் பாய்ந்திருந்த இரும்புத் துண்டுகளைத் தம் பற்களால் கடித்து இழுத்ததில் இவர்களின் இரண்டு பற்கள் விழுந்தன. மேலும் அவர்கள் சிறந்த போர் வீரராகவும், படைத்தளபதியாகவும், அனைத்து போர்களிலும் பணியாற்றி நபி (ஸல்) அவர்களின் நம்பிக்கையை பெற்று தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தன்னலமற்ற சேவையாளர். இவர்களை நபி (ஸல்) அவர்கள் ”அமீனுல் உம்மத்” சமுதாயத்தின் நம்பிக்கையாளர் என்று கூறினார்கள். விரிவு
பிலால் இப்னு ரபாஹ் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.580-கி.பி.640) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிகவும் நம்பகமான மற்றும் விசுவாசமான தோழர்(சஹாபாக்)களில் ஒருவர். அபிசீனியா நாட்டை சேர்ந்தவர், இவர் மக்காவில் பிறந்தார். அடிமைகளாக இருந்தவர்களில் முதன் முதலாக இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இவர்களே ஆவார். மக்காவில் உமைய்யா பின் கலஃபிடம் அடிமையாக பல சித்திரவதைகள் படுவதை காண சகிக்காமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறி விலைக்கு வாங்கி உரிமை விட பணித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தொழுகைக்கு அழைப்பொழி முழங்க முதன் முதலாக நியமிக்கப்பட்ட ’முஅத்தீன்’ ஆவார்கள். விரிவு
ஸுபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி. 594 - கி.பி. 656) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிக நெருங்கிய உறவினரும், தோழரும் ஆவார்கள். “ஒவ்வொரு நபிக்கும் சில சீடர்கள் (ஹவாரிய்யீன்கள்) உள்ளார்கள். என்னுடைய ஹவாரி (சீடர்) ஸுபைர் இப்னு அவ்வாம்” என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் ஒரு சிறந்த குதிரை வீரர், பொதுவாக ஒரு தனித்துவமான மஞ்சள் தலைப்பாகை அணிந்திருப்பார். நபி (ஸல்) அவர்கள் நடத்திய போர்களிலெல்லாம் இவர் கலந்து கொண்டு வீரத்துடன் போர் செய்துள்ளார். நபி (ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு இவ்வுலகில் நன்மாராயம் கூறப்பெற்ற பத்து பேரில் இவரும் ஒருவர். விரிவு
ஸயீது இப்னு ஜைது (கி.பி. 593 - கி.பி. 671) ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவரும், இவ் உலகிலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து பேரில் இவர்களும் ஒருவர் ஆவார். குறைஷி குலத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் இவரும், இவரது மனைவியும் முதன்மையானவர்களாவர். விரிவு
ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா (கி.பி.605-கி.பி.632) அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பிற்கு மிகவும் நெருக்கமான புதல்வியாவர், ஏனையோர் ஜைனப், ருக்கையா, உம்மு குல்தூம் (ரழி) ஆகியோர் ஆவர். ’காத்தூனெ ஜன்னத்’ (சுவனத்தின் பேரரசி) என்று அழைக்கப்பட்ட இவர்கள் பெரும்பாலும் “ஸஹ்ரா” (பிரகாசமானவர்) என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்கள். மேலும் இவர்களுக்கு சித்தீகா, முபாராகா, ஸகிய்யா, ரலிய்யா, ராலிய்யா, முஹத்ததா, தாஹிரா முதலான பெயர்களும் உண்டு. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமை மகள் என்ற முறையிலும், அலீ (ரழி) அவர்களின் துணைவியார் என்ற முறையிலும், ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) ஆகியவர்களின் அன்னையார் என்ற முறையிலும், இவர்களின் வழியிலேயே இன்று உலகிலே உள்ள நபி(ஸல்) அவர்களின் வழித்தோன்றல்கள் அனைவரும் தோன்றியுள்ளார்கள் என்ற முறையிலும், இவர்களின் மாண்பு தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது. விரிவு
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.568-கி.பி.624) அவர்கள் அப்துல் முத்தலிபின் கடைசி மகன் ஆவார் மேலும் இவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையுமாவர். இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள், ”அஸதுல்லா” அல்லாஹ்வின் சிங்கம் என்ற சிறப்புப் பெயருக்கு சொந்தக்காரர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்து தம் உயிரை அர்ப்பணம் செய்த உத்தம சஹாபாக்களில் ஒருவர் ஆவார். விரிவு
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.568- கி.பி.653) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையார் ஆவார். இவர்கள் நபி (ஸல்) அவர்களை விட இரண்டு வயது மூத்தவர் என்று இப்னு ஹஜர் கூறுகிறார். இவர்கள் பெரிய வணிகராக மக்காவில் இருந்தனர். வாணிபத்தின் பொருட்டு அடிக்கடி வெளிநாடும் சென்று வந்தனர். மக்கா வரும் யாத்திரியர்களுக்கு தண்ணீர் அளிக்கும் பணி இவர்களுடையதாக இருந்து வந்தது. இவர்களின் மறு பெயர் அபுல் ஃபழ்ல் என்பதாகும். பத்ரு போரில் கைது செய்யப்பட்ட இவர், அதன் பின்னர் இஸ்லாத்தை தழுவினார். விரிவு