ஒவ்வொரு ஸஹாபாவின் பெயரின் பின்னால் (ரழி) என குறிப்பிட்டுள்ளதை ரழியல்லாஹுஅன்ஹு எனவும், முஹம்மது நபியின் பெயருக்கு பின் (ஸல்) என குறிப்பிட்டுள்ளதை ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் எனவும் தொடர்ந்து படித்து கொள்ள வேண்டுகிறோம்.
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களின் மகள் அஸ்மாவின் மகனாவார். இவர்களின் தந்தை உலகத்திலேயே சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்ற ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) ஆவர். முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவில் குடியேறிய புதிதில் அவர்களுக்கு யாதொரு குழந்தையும் பிறக்காத பொழுது, “நாங்கள் முஸ்லிம்களுக்கு வஞ்சனை செய்து விட்டோம், எனவே முஸ்லிம்களுக்கு யாதொரு குழந்தையும் பிறக்காது” என்று யூதர்கள் பிதற்றித் திரிந்தனர். அப்பொழுது மதீனா வந்த அஸ்மா அவர்களுக்குக் குபாவில் வைத்து ஓர் ஆண்மகவு பிறந்தது. அது கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவி ஆயிஷா (ரழி) அவர்களை நோக்கி, “நான் அக்குழந்தைக்குப் பெயரிடும் வரை வேறு எவரும் அதற்குப் பெயரிட வேண்டாம்” என்று கூறினர்.விரிவு
மதீனாவில் பனூ அவ்ஸ் கிளையைச் சேர்ந்த ஸாபித் இப்னு அபீ அல்-அஃப்லா மற்றும் அல்-ஷாமுஸ் பின்த் அபீ ஆமிர் என்பவர்களின் மகனாக மதீனாவில் பிறந்தவர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு குடிபெயர்ந்த பொழுது உதவிய, துவக்கத்திலேயே இஸ்லாத்தைத் தழுவியவர்களில் ஒருவரான இவர் மாபெரும் வீரராக இருந்து, பத்ருப் போர் மற்றும் உஹத் போர்களில் முஸ்லிம்களின் வெற்றிக்கு மிகப் பெரும் பங்காற்றிய நபித் தோழர்களில் இவரும் ஒருவர். விரிவு
அபூபக்ர் (ரழி) அவர்களின் தந்தையாகிய இவரின் இயற்பெயர் உஸ்மான் இப்னு ஆமிர். பெரிய தலையைப் பெற்றிருந்ததால், ‘மண்டை ஓட்டின் தந்தை’ என்று பொருள்படும் அபூ குஹாஃபா என்று அழைக்கப்பட்டார். இவர் மக்காவில் ஒரு பணக்கார குடும்பத்தில் கி.பி.538 ஆம் ஆண்டில் ஜுலை மாதம் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஆமிர் இப்னு அம்ர் தைம், இவரது தாய் பனூ ஆதி குலத்தைச் சேர்ந்த கியாலா பின்த் அதாத் கஅப் என்பவராவார். மக்காவில் பிறந்த அபு குஹாஃபா குறைஷிகளின் முக்கிய உறுப்பினராக இருந்தார். மேலும் குறைஷிகளின் குலமான பனூ தைமின் தலைவராக இருந்தவர். இவர் உம்மு கைர் என்றழைக்கப்படும் சல்மா பின்த் சகர் என்பவரை மணந்தார். விரிவு
ஆயிஷா (ரழி) அவர்களும் இவரும் உடன் பிறந்தவர்களாவர். இவர்களின் அன்னை உம்மு ரெளமான் ஆவர். ஆயிஷா (ரழி) அவர்களை விட வயதில் மூத்தவர் இவர். அபூபக்ர் (ரழி) அவர்களின் முதல் மகன் இவர்தாம். இவர் கி.பி 600 இல் மக்காவில் பிறந்தார். பத்ருப் போர், மற்றும் உஹத் போரில் இவர் குறைஷி படையில் இருந்து தனது தந்தை அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு எதிராக போர் புரிந்தார். இவரது குடும்பத்தினர் அனைவரும் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தினை தழுவ, இவர் மட்டும் கி.பி628 இல் ஹுதைபிய்யா உடன்பாடு ஏற்பட்ட பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார். இதன் பின் அப்துர் ரஹ்மான் பல காலம் வாழ்ந்திருந்து இஸ்லாத்திற்காக வீரப் போர் செய்தார்.விரிவு
நபித்தோழரான இவர் மதீனாவில் கஸ்ரஜ் குலத்தில் தோன்றியவர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனா வருவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த புஆத் சண்டையில் இவருடைய தந்தை இறந்து விட்டார். அப்பொழுது இவருக்கு வயது ஆறு. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த சமயம் இவர் பற்றி நன்றாக ஓதத் தெரிந்தவர் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு ஜைத் இப்னு தாபித் (ரழி) ஓதுவதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செவிமடுத்தார்கள். தெளிவாக ஓதினார், துள்ளியமாக உச்சரித்தார். கற்று உணர்ந்தவர் போல் வசனங்களின் பொருளையும் நன்றாகப் புரிந்து ஓதினார். மேலும் இவர் பல சூராக்களை மனனமாக்கி இருந்தார் என்று கூறப்படுகிறது. பின்னர் பத்ரு போரில் கைப்பற்றப்பட்ட கைதி ஒருவரிடமிருந்து இவர் அரபி எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.விரிவு
அபூஸுஃப்யானுக்கும், ஹிந்தாவுக்கும் முதல் மகனாக இவர்கள் ஹிஜ்ரத்துக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மக்காவில் பிறந்தார்கள். உமையா குலத்தின் தோன்றலான இவர்கள், ஆரம்பகால முஸ்லிம் வரலாற்றாசிரியர்களான அல்-பலாதுரி மற்றும் இப்னு ஹஜர் ஆகியோரால் மேற்கோள் காட்டப்பட்ட கணக்குகளின்படி, ஹுதைபிய்யா உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளின் போது முஆவியா இரகசியமாக முஸ்லிமாக மாறினார். இஸ்லாத்தைத் தழுவும் பொழுது இவர்களுக்கு வயது 23. பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களால் தமக்கு வரும் வஹியை (வேத வெளிப்பாடுகளை) எழுதும் எழுத்தாளராக நியமிக்கப்பட்ட இவர்கள், அபூபக்ர் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது தங்கள் சகோதரர் யஜீதுக்கு உதவியாக ஒரு படைக்குத் தலைமை தாங்கிச் சென்று சிரியாவில் சில இடங்களை வென்றார்கள். தங்கள் சகோதரர் யஜீத் இறந்ததும் அவர் வகித்து வந்த சிரியாவின் தலைநகர் (Damascus) திமிஷ்கின் ஆளுநர் பதவியில் இவர்கள் நியமிக்கப் பட்டார்கள்.விரிவு
பனூ ஹாஷிம்களுக்கு விரோதமான பனூ உமையாக் கிளையில் தோன்றிய இவருடைய இயற்பெயர் ஷக்ர் என்பதாகும். இவருக்கு ஸுஃப்யான் என்ற மகன் இருந்ததனால் ஸுஃப்யானின் தந்தை என்று பொருள்படும் அபூ ஸுஃப்யான் என்று இவர் அழைக்கப்பட்டார். இதுவே இவருடைய இயற்பெயரை விடப் பிரபல்யம் பெற்று விட்டது. இவருடைய தந்தை பெயர் ஹர்ஃப் என்பதாகும். இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களைவிடப் பத்து வயது மூத்தவர். குறைஷிகளுக்கும் ஹவாஸின்களுக்கும் இடையே நடந்த போரில் இருதரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்ட பொழுது குறைஷிகள் தாங்கள் தரவேண்டிய இழப்புத் தொகையைத் தரும் வரை இவரையே பிணை வைத்தனர்.விரிவு
தமீம் இப்னு அவ்ஸ் அத்தாரீ துவக்கத்தில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார். இவர் பலஸ்தீனத்தில் வசித்து வந்தார் மற்றும் லக்ம் பழங்குடியினரின் குலமான பனு அல்-தாரைச் சேர்ந்தவர். ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டில் இஸ்லாத்தைத் தழுவி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவராக ஆனார். சிறந்த வணக்காவளராக இவர் இருந்தமையின் ‘ராஹிபுல் உம்மா’ (சமுதாயத்தின் துறவி) என்று அழைக்கப்பட்டார். முற்கால வரலாறுகள், கதைகள் ஆகியவை இவருக்கு நன்கு நினைவில் இருந்தன. அவற்றை இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அனுமதியுடன் மக்களுக்கு எடுத்துரைத்தார். விரிவு
மதீனாவிலுள்ள கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த ரவாஹா இப்னு தலபாஹ் என்பவரின் மகன். இஸ்லாமிய பிரச்சாரத்தின் தொடக்க காலத்தில் மக்காவில் இரண்டாவது அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டு இஸ்லாத்தைத் தழுவிய அன்சாரிகள் பன்னிருவரில் இவரும் ஒருவராவார். இவர் சிறந்த வீரர் மட்டுமல்லாது எழுதப்படிக்கத் தெரிந்த சிலரில் ஒருவராகவும் இருந்தார். எனவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரைத் தங்களின் எழுத்தராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். விரிவு
அலீ (ரழி) அவர்களின் சகோதரரான ஜஃபர் இப்னு அபூதாலிப்(ரழி) அவர்களின் மகனாவார். இவரது அன்னை அஸ்மா பின்த் உமைஸ் ஆவார். இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினரும், தோழரும் ஆவார். அபிசீனியாவில் பிறந்த முதல் முஸ்லிம் குழந்தை இவர்தான். ‘கைபர்’ போருக்குப் பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழி) தனது குடும்பத்தினருடன் மதீனாவுக்குத் திரும்பினார். மூத்தா போரில் இவரின் தந்தை ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) அவர்கள் இறந்த பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் ஆளான இவர் பின்னர் அலீ (ரழி) அவர்களின் மகள் ஜைனப் அவர்களை திருமணம் செய்து, அலீ (ரழி) மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்தார். மக்களுக்கு பெருந்தன்மையாக கொடைகள் பல வழங்கியதால் ‘தாராளத் தன்மையின் கடல்’ என்னும் பொருள் படும் ‘பஹ்ருல் ஜூத்’ என்று அழைக்கப்பட்டார். உஸ்மான் (ரழி) அவர்கள் கிலாபத்திலும், அலீ (ரழி) அவர்கள் கிலாபத்திலும் நடந்த போர்களில் பங்கேற்று வெற்றிகளை ஈட்டியவர். விரிவு