ஒவ்வொரு ஸஹாபாவின் பெயரின் பின்னால் (ரழி) என குறிப்பிட்டுள்ளதை ரழியல்லாஹுஅன்ஹு எனவும், முஹம்மது நபியின் பெயருக்கு பின் (ஸல்) என குறிப்பிட்டுள்ளதை ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் எனவும் தொடர்ந்து படித்து கொள்ள வேண்டுகிறோம்.
ஜைது இப்னு ஹாரிஸா ரழியல்லாஹு அன்ஹு (கி.பி. 581-கி.பி.629) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமையாக கதீஜா (ரழி) அவர்களால் கொடுக்கப்பட்டவருக்கு நபி (ஸல்) அவர்கள் விடுதலை அளித்து, விரும்பியபடி செல்ல கூறியும், செல்லாமல் நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் இருப்பதையே தேர்ந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் இவரை வளர்ப்பு மகனாக பிரகடன படுத்தினர். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுள் இவரே முதலாவதாக இஸ்லாத்தை தழுவியவர். நபி (ஸல்) அவர்கள் நடத்திய எல்லா போர்களிலும் கலந்து கொண்டதோடு, அவர்களின் ஆணைப்படி சில படையெடுப்புக்குத் தலைமை தாங்கியும் சென்றார். விரிவு
முஸ்அப் இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.594 - கி.பி.624) அவர்கள், அப்துத்தார் குடும்பத்தைச் சேர்ந்த அழகரானவர், அக்காலத்தில் மக்காவிலேயே அழகாக உடையணிபவராய் இருந்தார். இவர் ஹாஷிமின் கொள்ளுப் பேரராவார். இவரை நபி (ஸல்) அவர்கள் தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளராக மதீனாவிற்கு அனுப்பினார்கள். ‘அல்முக்ரி’ (குர் ஆனின் ஞானமுடையவர்) என்று முஸ்அப் முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப்பட்டார். இவர் உஹதுப் போரில் கலந்து கொண்டார். உருவில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஒத்திருந்த இவரை இப்னு கமிஆ, அண்ணல் நபி(ஸல்) அவர்கள் என எண்ணி வெட்டினான். அப்போர்க்களத்திலேயே (ஷஹீது) வீர மரணம் எய்தினார். விரிவு
அர்கம் இப்னு அபுல் அர்கம் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி593-கி.பி675) அவர்கள் மக்சூம் கிளையைச் சேர்ந்தவர். அல் முகைராவின் சகோதரருடைய பேரராவார். பிரபலமான நபித் தோழரான அர்கம் (ரழி) அவர்கள் மிகவும் துவக்க காலத்தில் இஸ்லாத்தில் இணைந்து மார்க்கத்திற்காக அளப்பறிய தியாகத்தை செய்துள்ளார்கள். இவர் தனது இல்லத்தை நபி (ஸல்) அவர்களுக்கு இஸ்லாத்தின் செயலகமாக இருக்க இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அர்பணித்தார்கள். இந்த வீடு தான் இஸ்லாத்தின் முதல் மதரஸா (கல்விகூடம்), தஃவா (அழைப்பு) பணிக்கான முதல் மையம், இஸ்லாம் துவங்கிய இடம். விரிவு
ஜஃபர் இப்னு அபூதாலிப் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.590 - கி.பி.629) அவர்கள் அபூதாலிப் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களின் மூன்றாவது மகனாவார். அலீ (ரழி) அவர்களின் மூத்த சகோதரரும், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகனும் ஆவார்.. மக்காவிலிருந்த முஸ்லிம்களுள் சிலர் அபிசீனியாவில் அடைக்கலம் புகுந்த பொழுது அந்நாட்டு மன்னர் நஜ்ஜாஷிக்கு இவர்கள் மூலமாகவே நபி (ஸல்) அவர்கள் அறிமுகக் கடிதம் அனுப்பி வைத்தார்கள். அவர் முன் சற்றேனும் அஞ்சாது ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமாவர் என்று இவர்கள் கூறியது நஜ்ஜாஷியின் கருத்துக்கு இணக்கமாய் இருந்தது. எனவே, இவர்களை அடிக்கடி தம் அரண்மனைக்கு அழைத்து இவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார் அவர். விரிவு
உபைதா இப்னு ஹாரிஸ் ரழியல்லாஹ் அன்ஹு (கி.பி.562 - கி.பி.624) அவர்களின் தந்தை ஹாரிஸ் அப்துல் முத்தலிபின் மூத்த மகன். இவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூத்த சகோதரர் (பெரியதந்தையின் மகன்) மற்றும் குறைஷி குல ஸஹாபியுமாவார். இவர் பத்ரு ஸஹாபாவாகவும், இஸ்லாத்தை பாதுகாப்பதற்காக போர்க்களத்தில் அதாவது பத்ரு போரில் ஷஹீதான முதல் ஸஹாபியுமாவார். விரிவு
ஹன்ளலா இப்னு அபூ ஆமிர் ரழியல்லாஹ் அன்ஹு (கி.பி.601 - கி.பி.625) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்(சஹாபி)களில் ஒருவர். திருமணம் ஆகி மணவறையில் இன்பம் துய்த்துத் தூய்மையற்ற நிலையைக் குளித்துக் களைவதற்குள் உஹுத் போர் களம் சென்று வீரமுடன் இணைவைப்பாளர்களின் அணிக்குள் புகுந்து எதிரிகளைத் தாக்கிய வண்ணம் இணைவைப்பாளர்களின் தளபதியான ‘அபூ ஸுஃப்யானை' நெருங்கி கடுமையான போர் புரியும் சமயம் பின்னால் இருந்து தாக்கப்பட்டு வீர மரணமா(ஷஹீதா)னார். ‘கஸீல் அல்மலாயிக்கா’ ’மலக்குகளால் குளிப்பாட்டப் பட்டவர்கள்’ என்ற சிறப்புக்குரியவர்.. விரிவு
பரகா பின்த் தஃலபா அவர்கள் பொதுவாக உம்மு அய்மன் என்று அறியப் படுகிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் மற்றும் ஆமினா பின்த் வஹப் ஆகியோரின் நீக்ரோ அடிமை தஃலபாவின் மகளாவார். அன்னை ஆமினா அவர்கள் மரணமடைந்த பின்னர் நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் நபி (ஸல்) அவர்களை வளர்த்ததில் இவருக்கும் பங்கு உண்டு. நபி (ஸல்) அவர்கள் இவரைத் தம் தாயைப் போன்றே கருதினார். இஸ்லாத்தின் தொடக்க காலத்திலேயே இஸ்லாத்தை தழுவியவர்களில் இவர்களும் ஒருவர். இவர் உஹுத் மற்றும் கைபர் போர்களில் கலந்து மிக சிறப்பாக போர் புரிந்து சேவையாற்றி யுள்ளார்கள். விரிவு
அம்மார் இப்னு யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி. 570 - கி.பி.657) அவர்களின் மற்றொரு பெயர் அபுல் யஹ்ஸான் என்பதாகும். இவர்களை இப்னு சுமையா என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான இவர் இஸ்லாத்தை தழுவியதால் குறைஷிகளின் கடுமையான கொடுமைகளுக்கு ஆளாகியது மட்டுமின்றி, தனது தாய் சுமையா(ரழி), தந்தை யாஸிர்(ரழி) ஆகிய இருவரையும் குறைஷி அபூஜஹ்லின் உச்சகட்ட கொடுமைகளால், இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் தியாகிகளின் வாரிசு இவர். திருக்குர்ஆனிலுள்ள 2:207, 3:62, 6:52, 122, 16:108-111, 29:2, 39:12 ஆகிய வசனங்கள் இவர்களையே குறிப்பன என்று கருதப்படுகிறது. விரிவு
லுபாபஹ் பின்த் ஹாரிஸ் (ரழி) (இறப்பு கி.பி.650) அவர்கள் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) அவர்களை மணந்து ஃபழ்ல் என்ற மகனை ஈன்றதால் உம்முல் ஃபழ்ல் என்னும் இடுகுறிப் பெயர் பெற்றார். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிற்றன்னையாகவும் மற்றும் சஹாபா தோழியரில் இவரும் ஒருவர். அன்னை கதிஜா (ரழி) அவர்களுக்கு பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இரண்டாவது பெண்மணி இவரேயாவார். இவரது சகோதரியான மைமூனா பின்த் ஹாரிஸ் (ரழி) மற்றும் இவரது தாய்யின் மறுமணம் மூலம் பிறந்த சகோதரி ஜைனப் பின்த் குஜைமா (ரழி) ஆகிய இருவரும் நபி (ஸல்) அவர்களின் மணைவிமார்களாவர். விரிவு
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் மறு பெயர் அபுல் அப்பாஸ் என்பதாகும். பனூ ஹாஷிம்கள் ஷீபே அப்துல் முத்தலிப் என்ற இடத்தில் பகிஷ்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட காலத்தில் அங்கு வைத்துப் பிறந்தவர்களில் இவர்களும் ஒருவர். இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பையும், துஆ பரக்கத்தையும் சிறு வயதிலேயே பெற்று பிற்காலத்தில் “பஹ்ருல் இல்ம்” - கல்வி கடல் என்றும், “ஹிப்ருல் உம்மா”- சமுதாயத்தின் அறிஞர் என்றும் “தர்ஜுமானுல் குர்ஆன்” - திருக்குர்ஆன் விரிவுரையாளர் என்றும் “சுல்தானுல் முஃபஸ்ஸிரீன்” வேத வியாக்கியானிகளின் அரசர் என்றும் புகழெய்தி வாழ்ந்தனர். ”குலாபாயே ராஷிதீன்” கலீபாக்கள் அபூபக்ர்(ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) மற்றும் அலீ (ரழி) ஆகியோருடன் சிறப்பாக பணியாற்றி முஆவியாவின் மகன் யஸீதுடைய காலம் வரை வாழ்ந்தார்கள். விரிவு