Home


இஸ்லாமியப் பண்பாடு தொடர் - 8

இஸ்லாத்தில் வாகனத்தில் செல்லும் முறை

வாகனத்தில் செல்லும் முறை :

  1. வாகனத்தில் வலது காலை வைத்து “பிஸ்மில்லாஹ்” என்று சொல்லி ஏறியவுடன் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்ல வேண்டும்.
  2. வாகனம் புறப்படும் போது கீழ் வரும் துஆ ஓத வேண்டும். “சுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமாகுன்னா லஹு முக்ரினீன் வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்” பொருள் : நம்மால் வசப்படுத்த முடியாத வாகனத்தை நமக்கு வசப்படுத்திக் கொடுத்த அல்லாஹ் தூய்மையானவன், மேலும் நாம் அவன் பக்கமே திட்டமாக மீளுவோம். பிறகு “அல்ஹம்துலில்லாஹ்” என்று மூன்று தடவையும் “அல்லாஹு அக்பர்” என்று மூன்று தடவையும் ஓதி கீழ் வரும் துஆவை ஓத வேண்டும். “சுப்ஹானக இன்னீ ளலம்து நப்ஸீ பஃபீர்லீ இன்னஹு லா யஃபிரு துனூப இல்லா அன்த.” பொருள் : அல்லாஹ்வே நீ தூய்மையானவன், நான் எனக்கு அநீதி இழைத்துக் கொண்டேன். எனவே எனது பாவங்களைப் பொருத்தருள்வாயாக! திட்டமாக பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர யாருமில்லை.
  3. வாகனம் மேட்டில் ஏறும் போது “அல்லாஹு அக்பர்” என்றும், பள்ளத்தில் இறங்கும் போது “ஸுப்ஹானல்லாஹ்” என்றும் கூற வேண்டும்.
  4. கூடுமான வரைத் தனியாகப் பிரயாணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  5. வாகனத்திலிருந்து இறங்கும் போது இடது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும். “ரப்பி அன் ஜில்னீ முன்ஜலம் முபாரக்கவ் வ அன்த கைருல் முன்ஜிலீன்”. பொருள்: அல்லாஹ்வே! என் இறங்குதலை பரக்கத்தானதாக ஆக்குவாயாக, மேலும் இறக்கி வைப்பவர்களில் நீயே மேலானவன்.

இஸ்லாமியப் பண்பாடு தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.