இஸ்லாமியப் பண்பாடு தொடர் - 3
இஸ்லாத்தில் மலஜலம் கழித்தலின் முறைகள்

மனித வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்று மலஜலம் கழித்தலாகும். மனிதன் மட்டுமல்லாமல் விலங்கினங்களும் இதனை நிறைவேற்றி வருகின்றன. மனிதனுக்கும் மாக்களுக்கும் இதில் வேறுபாடு இருப்பது மிக அவசியம். இஸ்லாம் போதிக்கின்ற, பெருமானார் (ஸல்) வாழ்ந்து காட்டிச் சென்ற வழிமுறைதான் மனிதன் உலகில் பின்பற்ற வேண்டிய வழிகளில் சிறந்ததாகும். அவை பின் வருமாறு:
- மலஜலம் கழிக்கச் செல்லும் போது தலையை மூடிக் கொள்ள வேண்டும்.
- கால்களில் செருப்பு அணிய வேண்டும்.
- இடது காலை முன்னால் வைத்து மலவறைக்குச் செல்ல வேண்டும். கிப்லா திசையை நோக்கி அமரக்கூடாது. அமரும் போது முழங்கால் வரை மறைத்துக் கொள்ள வேண்டும். உள்ளே செல்லும் முன். “அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக மினல் குபுதி வல்கபாயிதி” எனும் துஆவினை ஓத வேண்டும்.
- எச்சில் துப்புதலை அங்கு தவிர்க்க வேண்டும்.
- மர்மஸ்தானத்தைப் பார்த்தல் கூடாது. விரைவாக வெளியேற முயற்சி செய்ய வேண்டும்.
- மல அறையை விட்டு வெளியே வரும் போது வலது காலை வெளியில் வைத்து “குஃப்ரானக, அல்ஹம்துலில்லா ஹில்லதீ அத்ஹப் அன்னில் அதா வ ஆஃபானி” எனும் துஆவினை ஓத வேண்டும்.
- நடைபாதைகளிலோ, நிழல் தரும் மரங்களின் அடியிலோ, நீர்நிலைகளிலோ மலஜலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். புதர்கள், எலிவலைகள், காற்றடிக்கும் திசைக்கு எதிராக சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பரப்பிலிருந்து மேட்டை நோக்கி சிறுநீர் கழிக்கக்கூடாது.
- மலஜலம் கழித்தவுடன் நன்றாக நீர் ஊற்றி இடது கரத்தால் முன், பின் துவாரங்களை கழுவ வேண்டும். பின்னர் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
- மலஜலம் கழிக்கும் போது பேசுவது, பாங்கு, தும்மல், சலாம் இவற்றிற்குப் பதில் சொல்லுவது, உண்பது, பருகுவது ஆகிய செயல்கள் கூடாது.
கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.
புதிய வெளியீடுகள்
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.