Home


இஸ்லாமியப் பண்பாடு தொடர் - 7

இஸ்லாத்தில் வீட்டில் நுழையும் முறை

வீட்டில் நுழையும் முறை :

  1. வீட்டின் தலை வாசல் வழியே தான் செல்ல வேண்டும்.
  2. “பிஸ்மில்லாஹ்” சொல்லி வலது காலை முன் வைத்து ஸலாம் சொல்லி உள்ளே நுழைய வேண்டும்.
  3. வீட்டிலிருந்து வெளியே வரும் போது இடது காலை முன் வைத்து “பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹ்” என்று கூற வேண்டும்.
  4. பிறர் வீடுகளில் நுழைய விரும்பினால் ஸலாம் சொல்லி அனுமதியைப் பெற்று உள்ளே நுழைய வேண்டும்.
  5. பிறர் வீட்டிலுள்ளவர்கள் “யார் நீங்கள்?” என்று கேட்டால் “நான் தான்” என்று சொல்லாமல் பெயரைச் சொல்ல வேண்டும். அனுமதி கிடைக்கா விட்டாலும், பதில் இல்லா விட்டாலும் திரும்பி விட வேண்டும்.

மஸ்ஜிதில் நுழையும் முறை :

  1. பள்ளிவாசலில் வலது காலை முன் வைத்து ஓதும் துஆ : “அல்லாஹும் மஃபிர்லீ துனூபீ வஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக்க”. பொருள் : இறைவனே! என் பாவங்களை மன்னித்து உன் அருட்கொடையின் தலைவாசலை எனக்குத் திறப்பாயாக.
  2. வெளியில் வரும் பொழுது இடது காலை முன் வைத்து ஓதும் துஆ :  பொருள் : நாயனே! நிச்சயமாக “அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்க மின் ஃபள்லிக்க வ ரஹ்மதிக்க”. நான் உனது அன்பையும் அருளையும் வேண்டியவனாக வெளியேறுகிறேன்.
  3. துர்வாடை வீசக்கூடிய பூண்டு, பீடி, சிகரெட் இவைகளை உபயோகித்தவுடன் மஸ்ஜிதிற்குள் நுழையக் கூடாது.
  4. அமர்ந்திருக்கும் இருவரின் தோள் புஜங்களுக் கிடையில் தாண்டி முன் வரிசைக்குச் செல்வதும், தொழுபவரின் குறுக்கே செல்வதும் கூடாது.
  5. மஸ்ஜிதில் தங்குவதாக இருந்தால் “நவைத்து ஸுன்னத்தல் இஃதிகாஃப ஃபீ ஹாதல் மஸ்ஜித்” என்று நிய்யத் வைக்க வேண்டும்.
  6. பிறர் தொழுகைக்கு இடைஞ்சல் விளைவிக்கும் முறையில் சப்தமிட்டு குர் ஆன் ஓதுவதும், திக்ரு செய்வதும் நல்லதல்ல.
  7. பள்ளியினுள் எச்சில் உமிழ்வதும், ஜன்னல் வழியாகத் துப்புவதும், காற்று பிரியவிடுவதும், விரல்களைச் சொடக்கு விடுவதும் கூடாது.
  8. காணமல் போன பொருள்களைப் பள்ளியினுள் தேடுவது, விசாரிப்பது கூடாது.

இஸ்லாமியப் பண்பாடு தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.