Home


லெப்பை

முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் (தொடர்-14)

                லெப்பை, லப்பை, லெவை, என தமிழக முஸ்லிம்களில் ஒரு சாரார் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் அநேகமாக நாட்டின் எல்லா பகுதிகளிலும் வாழ்கின்றனர். தமிழ் நாட்டில் மட்டும் தான் லப்பை என்ற பெயரால் முஸ்லிம்களில் சிலர் குறிப்பிடப்படுகின்றனர். உருது பேசும் முஸ்லிம்கள்  ஆரம்ப காலத்தில் இவர்களை “லெபாபீன்” எனக் குறிப்பிட்டு வந்தனர்.

                லெப்பை எனக் குறிப்பிடப்படும் முஸ்லிம்கள் தமிழகத்தில் இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில், இங்கு வந்த மார்க்கப் பிரச்சாரகர்களின் சிஷ்யர்களாக இருந்து பணி செய்தனர் என்றும், தங்கள் குருமார்கள் இடும் உத்திரவுகளுக்கு  ‘லப்பைக்’ (அடிபணிகிறேன்) என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லக்கூடியவர்களாக இருந்தனர் என்றும், அதனால் அதே பெயர் அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது என்றும் தகவல்கள் கூறுகின்றன. வெளி நாடுகளிலிருந்து வந்த பிரச்சாரகர்கள் சென்றவுடன், அந்த பணியையை தாங்களே ஏற்று ‘அதான்’ (பாங்கு) கூறல், தொழ வைத்தல், மார்க்கக் கல்வியைப் புகட்டல், மத அனுஷ்டாங்களைச் செய்து கொடுத்தல் முதலான மார்க்கக் காரியங்களை கவனிக்கக் கூடியவர்களாக இருந்து வந்தனர்.

        இதனால், நாளடைவில் மார்க்க காரியங்களை கவனிப்போர் அனைவருக்கும் (அவர்கள் ராவுத்தர்களாக இருப்பினும், மரைக்காயர்களாக இருப்பினும், வேறு எப் பெயருடையவராக இருப்பினும்) லப்பை எனக் குறிப்பிடும் பழக்கம் வந்து விட்டது. பொதுவாக மார்க்கக் கல்வி கற்ற, அல்லது பட்டம் பெற்ற ஆலிம்கள் எல்லோரையும் மக்கள் லப்பை எனக் குறிப்பிடத் தொடங்கி விட்டனர்.

        ’லப்பை’ எனக் குறிப்பிடப் படுவோர் அனைவரும் தமிழ் மொழியே வீட்டிலும் வெளியிலும், பேசும் மொழியாகக் கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் விவசாயத்தை மேற் கொண்டிருக்கின்றனர். சிலர் வியாபாரத்துறைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

        பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காலத்தில், முஸ்லிம்களில் பிற்பட்ட வகுப்பினரைப் பற்றி ஒரு பரிசீலனை நடந்தது; அச் சமயம், கல்வியிலும் பொருளாதாரத்திலும், லப்பைகள் எனப்படுவோரே மிகவும் பிற்போக்காக இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு மட்டும் கல்விச் சலுகை அளிக்க வேண்டும், என்றும் சிலர் சிபாரிசு செய்தார்கள். ஆனால், முஸ்லிம் தலைவர்கள் ஒன்று கூடி தமிழ் பேசும் முஸ்லிம்கள் மாத்திரமல்ல, உருது பேசும் முஸ்லிம்களும், கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றனர் என்றும், எல்லோரையும் பின் தங்கிய வகுப்பார் எனப் பிரகடனப்படுத்தி அச்சலுகையை வழங்க வேண்டுமென்று வாதாடினர். ஆனால் உருதுவைத் தாய் மொழியாகக் கொண்ட ஆந்திரா (அப்போது சென்னை மாகாணத்துடன் இருந்த) ராஜ்யத் தலைவர்கள், உருது பேசும் முஸ்லிம்களைப் பின் தங்கிய வகுப்பினர் என்று கூறுவதை எதிர்த்தனர்.

இதனால் தமிழ் முஸ்லிம்களில் ‘லப்பை’ என்ற ஒரு பிரிவைக் குறிப்பிட்டு, அவர்களைப் பின் தங்கிய வகுப்பார் எனப் பிரகடனப் படுத்தப்பட்டுவிட்டது. லப்பை என்பது முஸ்லிம்களில் தனிப்பிரிவினரோ, கொள்கையினரோ இல்லையாதலால், நாளடைவில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் லப்பை எனக் கருதப்படலாயினர்.

வரலாற்று தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.