Home


தக்னி

முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் -15  (தொடர் நிறைவு)

        உருதுவைத் தாய் மொழியாகக் கொண்டு தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களை “தக்னி” எனக் குறிப்பிடுகிறார்கள். தக்னி என்ற வார்த்தை ‘தக்கான்’ (டெக்கான்) என்ற சொல்லிலிருந்து வந்தது. இது ஹிந்தியில் ’தக்ஷிண்’ என்று கூறப்படுகிறது. இதன் பொருள் ‘தெற்கு’ என்பதாகும். ‘தக்னி’ என்ற வார்த்தைக்குச் சரியான பொருள் கூறப் போனால் தக்கானத்தவர் அல்லது தெற்கத்தியர் என்று கூறலாம். தக்கான் இந்தியாவின் தெற்கே இருக்கிறது. தமிழ்நாடும் தெற்கே தான் இருக்கிறது. ‘தக்னி’ என்று குறிப்பிடப்படுவோரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களே.

        தக்கான் என்று குறிப்பிடப்படும் ராஜ்யம், தமிழகத்திற்கு மிகச் சமீபமாக இருப்பதால் அக்காலத்தில் தமிழ் நாட்டுடன் அவர்கள் சாதாரணமாக வியாபாரத் தொடர்பை மேற்கொள்ள முடிந்தது. தமிழகத்தின் பல பாகங்களிலும் தங்கி அவர்கள் வியாபாரங்கள் நடத்தினர்; அதோடு படை வீரர்களாகவும் பலர் வந்து தங்கினர். தமிழ்நாட்டில் எல்லா பாகங்களிலும் அவர்கள் இருந்தாலும், திருச்சி, மதுரை, கோவை, சேலம், மைசூர்-தமிழக எல்லைப்பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர். தென்னாற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களிலும் பல ஊர்களில் நிறைந்து காணப்படுகின்றனர். தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், முதலிய மாவட்டங்களிலும் மற்றும் உள்நாடுகளிலும் இவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.

அக்காலத்தில் இராணுவத் தொடர்பு இவர்களுக்கு அதிகமிருந்ததால், அந்த வீர உணர்வு பாரம்பரியமாக இன்று வரை இவர்களிடையே நீடித்து வருவதைக் காணலாம். இஸ்லாமிய மதப் பற்றிலும், உணர்ச்சியிலும் இவர்கள் தலைசிறந்து விளங்குவதன் காரணம் உருது மொழியே ஆகும். இம்மொழியில் இஸ்லாம் சம்பந்தமாக செய்யப்பட்டுள்ள பிரச்சாரங்களைப் போல வேறு எம் மொழியிலும் செய்யப்பட்டில்லை. மார்க்க அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதில் இவர்களுக்குத் தனிச் சிறப்புண்டு. பழக்கவழக்கங்கள், மரியாதை காட்டுவது, விருந்தோம்பல், குடும்ப கவுரவம் முதலியவை இவர்களிடம் தனிச் சிறப்பாகும்.

முஸ்லிம்களிடையே வகுப்பு, மொழி  வேறுபாடுகள் இல்லாத காரணத்தால், தமிழ் - உருது மொழி பேசுவோரிடையே பல கொள்வினை கொடுப்பினைகள் ஏற்பட்டு, மொழியினால் பிரித்துப் பார்க்க முடியாத உறவுகள் தமிழகத்தில் வளர்ந்து விட்டன. தமிழ் பேசும் முஸ்லிம்களில் பலர் உருதுவும் பேசக்கூடியவர்களாக விளங்குகின்றனர்.

வரலாற்று தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.