Home


இஸ்லாமியப் பண்பாடு

(இஸ்லாத்தில் உறங்கும் முறை) தொடர் - 2

        மனித வாழ்வில் உறக்கம் இறைவன் அளித்த பெரிய அருட்கொடையாக இருக்கிறது. பகலெல்லாம் உழைத்த மனிதன் சற்று இளைப்பாற இறைவனால் அளிக்கப்பட்ட சந்தர்ப்பமே உறக்கம் ஆகும். சராசரி மனிதன் ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்தில் கழித்து விடுகிறான். இது ஒரு சாதாரண வழக்கமாக இருக்கிறது. இதே செயலை உலகில் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நடத்திக் காட்டிய முறைப்படி செய்யும் போது அது இபாதத்தாக மாறி விடுகிறது. உறக்கத்தோடு சேர்ந்து நற்பலனும் கிடைத்து விடுகிறது. ஆகவே இதனை ஒவ்வொரு வரும் கடைபிடித்தொழுகுவது சாலச் சிறந்ததாகும் அவையாவன.

  1. உறங்குவதற்கு முன் ஒளு செய்து கொள்வது.
  2. ஸலாத்துத் தவ்பா 2 ரக அத் நபில் தொழுது கொள்வது.
  3. விரிப்பை மும்முறை உதறி விரித்துக் கொள்வது.
  4. சுவரை ஒட்டி விரிப்பை விரிக்காமலிருப்பது.
  5. விரிப்பில் அமர்ந்து அந்நாளில் செய்த காரியங்களை எண்ணிப் பார்ப்பது. அவைகளில் தவிர்க்க வேண்டியன குறித்து சிந்திப்பது. அத்தவறுகளிலிருந்து தவிர்ந்து கொள்ள முயற்சி செய்வது.
  6. அல்ஹம்து சூரா, குல் எனத் தொடங்கும் நான்கு சூராக்கள், ஆயத்துல் குர்ஸி ஆகியவைகளை ஓதிக் கொள்வதுடன், சுப்ஹானல்லாஹ்        33 விடுத்தம், அல்ஹம்துலில்லாஹ்        33 விடுத்தம், அல்லாஹு அக்பர்        34 விடுத்தம், ஓதி கைகளில் ஊதி பாதங்களின் கீழ்ப்பகுதி, மர்மத்தலம் ஆகியவற்றைத் தவிர்த்து உடலின் எல்லாப் பகுதிகளிலும் தடவிக் கொள்வது.
  7. “அல்லாஹும்ம பிஸ்மிக அமூத்து வ அஹ்யா” என்ற துஆவை ஓதி வலது பக்கம் சாய்ந்து உறங்குவது.
  8. தீய கனவுகள் ஏற்படும் பொழுது “அவூதுபில்லாஹி மினஷ் ஷைத்தான்” என்று கூறி மறுபக்கம் திரும்பிப் படுப்பது.
  9. ஆண்கள் குப்புறப் படுப்பதும், பெண்கள் மல்லாந்து படுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
  10. சுபுஹுத் தொழுகைக்குப் பின்னும், அஸர் தொழுகைக்குப் பின்னும் உறங்குவது கூடாது. உடலுக்கும் கேடு விளைவிக்கும்.
  11. தூங்கி எழுந்தவுடன் ஒதும் துஆ : “அல்ஹம்து லில்லா ஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா  வ இலைஹின் நுஷுர்”  பொருள்: நம்மை மரணிக்கச்(தூங்க) செய்த பின் நமக்கு உயிர்(விழிப்பு) அளித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்; திரும்பிச் செல்லுதல் அவன் பக்கமே.

இஸ்லாமியப் பண்பாடு தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.