Home


ராவுத்தர்  

முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் -13

தமிழ் நாட்டின் மத்திய பாகங்களில் வாழும் முஸ்லிம்கள் பலர் ராவுத்தர்கள் என்று குறிப்பிடப் படுகிறார்கள். ராவுத்தர் என்ற சொல் தமிழ்ச் சொல்லாக இருப்பது போலவே, அம்முஸ்லிம்களும் தமிழ் நாட்டவராக, தமிழே தாய் மொழியினராக இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து அன்னிய நாடுகளுக்குச் சென்றுள்ளவர்களைத் தவிர, மற்ற நாடுகளில் முஸ்லிம்களை ராவுத்தர்கள் என்று குறிப்பிடப் படுவதில்லை.

“ராவுத்தர்” என்ற தமிழ் வார்த்தைக்கு ‘குதிரைகளை செலுத்துவோர்’ எனப் பொருள் கூறப்படுகிறது. தமிழ் மன்னர் களின் காலத்தில் குதிரை வீரர்களாகவும், குதிரைப் படை செலுத்துவோராகவும், குதிரை வியாபாரிகளாகவும் விளங்கிய முஸ்லிம்களையே, ராவுத்தர் என்று குறிப்பிடப் பட்டு வந்தது.

குதிரையோடு இவர்கள் அதிக தொடர்பு கொண்டிருந்ததற்குக் காரணம், அரபு முஸ்லிம்களின் தொடர்பே காரணமாகும். அரபுகள் குதிரைகளை வளர்ப்பதிலும், அவற்றைப் பயிற்றுவிப்பதிலும், போர் காலங்களிலும், பிரயாணங்களிலும் அவற்றை சிறந்த முறையில் உபயோகிப்பதிலும் கைதேர்ந்தவர்கள் என்பது உலகறிந்த உண்மையாகும்.

தமிழ் நாட்டில், அக்காலத்தில் மிகக் குறைவாக இருந்த மிருகங்களில் குதிரையும் ஒன்று. ஏனெனில் இங்கு மக்களின் உபயோகத்துக்கு அதிகம் பயன் பட்டு வந்த மிருகம், பசு, காளை முதலானவைகளே. குதிரையின் தேவையை காளை மாடுகள் இங்கே பூர்த்தி செய்து வந்தன. அக்கால அரபு வியாபாரிகள், மளையாள நாட்டில் குதிரைகளை இறக்குமதி செய்து, பண்டமாற்று நடத்தினர். இதையறிந்த தமிழ் நாட்டவரில் சிலர் அவர்களோடு வியாபாரத் தொடர்பு கொண்டனர். அதன் விளைவாக ஏராளமான குதிரைகளை தமிழகத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். அவற்றைப் பல துறைகளிலும் பயன்படுத்தப் பழக்கினர். பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆண்ட காலத்தில், ராவுத்தர்களின் (முஸ்லிம்களின்) குதிரைப் படையொன்று சிறப்புடன் இயங்கி வந்த்தாக சரித்திரங்கள் கூறுகின்றன.

இதை யொட்டி, உள்நாடுகளிலுள்ள முஸ்லிம்கள், பொதுவாகவே ராவுத்தர்கள் என அழைக்கப் படலாயினர். இவர்கள் தமிழகத்தின் எல்லா வட்டங்களிலும் இன்று நிறைந்து வாழ்கிறார்கள். இப்போது பல்வேறு பட்ட வியாபாரங்கள், தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். விவசாயம், கைத்தொழில் முதலானவற்றில் நேரடியாகப் பங்கு பெற்று உழைக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

ராவுத்தர்கள் எந்த கடினமான வேலைகளிலும், தொழில்களிலும் தளராமல் ஈடுபடக் கூடியவர்கள். உடல் உழைப்பில் நிகரற்றவர்கள். அது போன்றே இறை பக்தியிலும், இஸ்லாமிய மார்க்கப் பற்றிலும் உறுதியானவர்கள். மதகாரியங்களுக்காக, தான தர்மங்கள் செய்வதில் இவர்கள் மிகவும் தாராளமானவர்கள். தமிழ் நாட்டில் எழுப்பப்பட்டுள்ள பல பள்ளிவாசல்களின் வரலாற்றை ஆராய்ந்தால், ‘முறைவேலை’ வைத்துக் கொண்டு, வீட்டுக்கு ஒருவர் இருவாராகச் சென்று, அவர்களே மண் வெட்டி, கல் சுமந்து பள்ளிகளை எழுப்பியிருப்பதைக் காணலாம். நல்ல வசதியான அந்தஸ்திலிருந்தவர்களும் கூட, தங்கள் கடமையெனக் கருதி இவ்விதம் கடின உழைப்பை மேற்கொண்ட பல சம்பவங்கள் இருக்கின்றன.

ராவுத்தர் எனக்குறிப்பிடப்படும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பகுதிக்குப் பகுதி வெவ்வேறாக இருப்பதைக் காணலாம். தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளிலுள்ளோர் விவசாயத் துறையிலும், மற்ற பகுதிகளிலுள்ளோர் அதிகம் தொழில் துறைகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர். எட்டயாபுரம் தாலுகாவிலிருந்து, வியாபாரத் துறையில் வெளியேறிய ராவுத்தர்களில் பலர், திருச்சி, திண்டுக்கல், சேலம், கோயம்புத்தூர் ஆகிய பல பகுதிகளில் குடியேறி சிறப்புடன் வாழ்கிறார்கள். தோல் பதனிடும் தொழில், பாய் பின்னுதல், கைத்தறி நெசவு, முதலியவை அவர்களிடையே சிறப்பான தொழில்கள்.

வரலாற்று தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.