மனித வாழ்வில் உண்ணுவது, பருகுவது, உறங்குவது வழக்கமாக இருக்கிறது. இதற்காகத் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியைச் செலவழிக்க வேண்டியுள்ளது. இவைகளைப் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் காட்டிய முறையில் செய்யும் பொழுது அது வணக்கமாக (இபாதத்தாக) ஆகி விடுகிறது. இதனால் இறைவனிடம் நன்மையைப் பெற முடியும். “ஆதத்” என்னும் வழக்கத்தை “இபாதத்” என்னும் வணக்கமாக மாற்றுவது இஸ்லாமிய வழிமுறைகளாகும். விரிவு
ஹஜ்ரத் ஸல்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ”எம்முடைய உம்மத்திலிருந்து நாற்பது ஹதீஸ்களை மனனம் செய்பவர் சொர்க்கம் சேர்ந்திடுவார்” என்று ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ள நாற்பது ஹதீஸ்களைப் பற்றி “யாரஸுலல்லாஹ்! அவை எந்த ஹதீஸ்கள்?” என்பதாக நான் கேட்ட போது நபியவர்கள் கூறியதாவது : விரிவு
மனித வாழ்வில் உறக்கம் இறைவன் அளித்த பெரிய அருட்கொடையாக இருக்கிறது. பகலெல்லாம் உழைத்த மனிதன் சற்று இளைப்பாற இறைவனால் அளிக்கப்பட்ட சந்தர்ப்பமே உறக்கம் ஆகும். சராசரி மனிதன் ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்தில் கழித்து விடுகிறான். இது ஒரு சாதாரண வழக்கமாக இருக்கிறது. இதே செயலை உலகில் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நடத்திக் காட்டிய முறைப்படி செய்யும் போது அது இபாதத்தாக மாறி விடுகிறது. உறக்கத்தோடு சேர்ந்து நற்பலனும் கிடைத்து விடுகிறது. ஆகவே இதனை ஒவ்வொரு வரும் கடைபிடித்தொழுகுவது சாலச் சிறந்ததாகும். விரிவு
மனித வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்று மலஜலம் கழித்தலாகும். மனிதன் மட்டுமல்லாமல் விலங்கினங்களும் இதனை நிறைவேற்றி வருகின்றன. மனிதனுக்கும் மாக்களுக்கும் இதில் வேறுபாடு இருப்பது மிக அவசியம். இஸ்லாம் போதிக்கின்ற, பெருமானார் (ஸல்) வாழ்ந்து காட்டிச் சென்ற வழிமுறைதான் மனிதன் உலகில் பின்பற்ற வேண்டிய வழிகளில் சிறந்ததாகும். விரிவு
உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நகம் வெட்டுவார்கள், மேல் மீசையைக் கத்தரிப்பார்கள். இருபது தினங்களுக்குள் கக்கத்து மூடி, கீழ்முடி முதலியவைகளைக் களைவார்கள் என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். உலக இரட்சகர் நபியே கரீம் (ஸல்) அவர்களது முன் மாதிரியைப் பின்பற்றி நாமும் மேற்கண்ட விதி முறைகளைப் பின் பற்றுவது மிக அவசியமாகும். இவை எல்லாம் சிறு காரியங்கள்தானே என்றெண்ணி அலட்சியமாக இருந்து விடுதல் கூடாது. விரிவு
ஆண்கள் தொப்புளிலிருந்து முழங்கால் முட்டுவரை மறைப்பது பர்ளு என்னும் கட்டாயக் கடமையாகும். பெண்கள் இரு கரண்டைக் கை, இரு பாதங்கள், முகம் தவிர, மற்ற உறுப்புக்களையும் மறைப்பது (பர்ளு) கட்டாயக் கடமையாகும். விரிவு
ஒரு முஸ்லிமைச் சந்திக்கும் போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என ஸலாம் சொல்ல வேண்டும். கேட்பவர் ‘வ அலைக்கு முஸ்ஸலாம்’ எனப் பதில் கூற வேண்டும். மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொல்லுவது சுன்னத். உடனடியாக பதில் சொல்லுவது வாஜிபு. காரணமின்றி பதிலைப் பிற்படுத்தக் கூடாது. விரிவு
வீட்டின் தலை வாசல் வழியே தான் செல்ல வேண்டும். “பிஸ்மில்லாஹ்” சொல்லி வலது காலை முன் வைத்து ஸலாம் சொல்லி உள்ளே நுழைய வேண்டும். விரிவு
வாகனத்தில் வலது காலை வைத்து “பிஸ்மில்லாஹ்” என்று சொல்லி ஏறியவுடன் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்ல வேண்டும். வாகனம் புறப்படும் போது கீழ் வரும் துஆ ஓத வேண்டும். “சுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமாகுன்னா லஹு முக்ரினீன் வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்” விரிவு
கப்றுஸ்தானுக்குச் சென்று ஜியாரத் செய்வது ஆண்களுக்கு முஸ்தஹப்பான விரும்பத்தக்க செயலாகும். பெண்களுக்கு கூடாது. ஜியாரத் செய்பவர் கப்ரை நோக்கி “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சலாம் சொல்ல வேண்டும். விரிவு
அறுப்பவர் முஸ்லிமான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும். அறுக்கும் போது அதற்குரிய சுலோகமாகிய “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” எனக் கூற வேண்டும். அல்லாஹ்வுடைய நாமத்துடன் வேறு யாருடைய பெயரையும் சேர்த்துக் கூறக் கூடாது. விரிவு
குழந்தை பிறந்தவுடன் அதன் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும். அழகிய திருநாமத்தைச் சூட்ட வேண்டும். பிறந்த ஏழாம் நாள் அல்லது வசதிப்படும் போது குழந்தையின் தலைமுடியை இறக்கி அதன் எடையுள்ள வெள்ளியோ, தங்கமோ எழைகளுக்கு தானம் செய்வது சிறப்புக்குரியது. விரிவு
மரணித்த பெரியோர்களின் பெயர்களைக் கேட்கும் போது “ரஹ்மத்துல்லாஹி அலைஹி” எனக் கூற வேண்டும். ஒரு செயலைத் துவங்கும் போது “பிஸ்மில்லாஹ்” எனக் கூற வேண்டும். ஒருவருக்கு நன்றி கூறும் போது “ஜஸாக்கல்லாஹ் ஹைரன்” எனக் கூற வேண்டும். விரிவு