Home


வஹ்ஹாபிகள்

முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் (தொடர்-8)

அந்தந்த நாடுகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கு மாற்றமாக அனாச்சாரங்களும், இஸ்லாமிய கட்டுப்பாட்டை சிதைக்கும் புதுமைகளும் முஸ்லிம்களிடையே புகுதலாயின. இதைத் தடுத்து இஸ்லாமிய முறைப்படியே முஸ்லிம்கள் ஒழுக வேண்டும் என்பதை முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் வலியுறுத்திப் போதிக்கலானார். அவரை பின்பற்றும் மக்களையே வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படுகிறது.

அவ்லியாக்களும், ஸூபிகளும் மற்றவர்களுக்காக சிபாரிசு செய்யும் தகுதி படைத்தவர்கள் என்ற எண்ணம் முஸ்லிம்களிடையே வளருவதை வஹ்ஹாபிகள் மறுத்தனர். ஸூபிகள் என்றும் அவ்லியாக்கள் என்றும் நம்புகிறவர்களின் சமாதிகளுக்கு சென்று பிரார்த்திப்பதையும் கண்டித்தனர். இஸ்லாத்தில் அடியாருக்கும் ஆண்டவனுக்குமிடையே எந்தத் தரகுமில்லை. தவ்ஹீத் என்பதே இது தான் என்று வற்புறுத்துகின்றனர் வஹ்ஹாபிகள். சுன்னத் ஜமாஅத் அங்கீகரித்துள்ள நான்கு இமாம்களின் அபிப்பிராயத்தோடு நிற்காமல் ஹதீதுகளின் உதவியாலும் சொந்த அறிவினாலும் குர் ஆன் கருத்துக்களை உணர வேண்டும் என்பது வஹ்ஹாபிகள் போதனை. இவர்கள் பெரும்பாலும் மத்திய அரேபியாவிலும் சிலர் இந்தியாவிலும் வாழ்கின்றனர். இப்பிரிவு தோன்றி 300 ஆண்டுகள் கூட ஆகவில்லை.

ஸனூஸிகள்

வஹ்ஹாபிகள் தோன்றியது போலவே கி.பி, 1837-ம் ஆண்டில் ஒரு இயக்கம் ஆப்பிரிக்காவில் தோன்றியது. அல்ஜீரியாவிலே பிறந்த சீத்திமுஹம்மத்ஸனூஸி என்பவரே இந்த இயக்கத்தின் ஸ்தாபகர். வஹ்ஹாபிகளின் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தும் பிரிவினர் என்றே இவர்களைக் கூறலாம்.

இறந்தவர்களுக்காக இருப்பவர்கள் பிரார்த்திக்கலாமே தவிர, இருப்பவர்களுக்காக இறந்தவர்கள் பிரார்த்திக்கவே முடியாது. ஏக இறைவனான அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும், வேறு எந்த சமாதிகளிடமும் பிரார்த்தித்தால் அது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதேயாகும் என்று வற்புறுத்தினர் ஸனூஸிகள், இத்துடன் நில்லாது மதுபானம் தடுக்கப் பட்டிருப்பதை போலவே, புகை பிடித்தலையும், உணர்ச்சியைத் தூண்டக் காப்பி போன்ற கஷாயங்களை அருந்துவதையும் இந்த ஸனூஸி இயக்கத்தார் தடுக்கின்றனர். வியாபாரத்திற்காக வேண்டியும் யூதர்களுடனும் கிருஸ்துவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்பது இவர்கள் கொள்கை. இஸ்லாத்திற்காக அனைத்தையும் அர்ப்பணம் செய்வது முஸ்லிம்களின் கடமை என்று இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். இவர்கள் ஈராக்கிலும் அராபியாவிலும் கல்லூரிகள் நிறுவி அதில் தேர்ந்த மாணவர்களை இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர்.

இந்த ஸனூஸி இயக்கம் வட ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமிய நாடுகளிலும், சூடானிலும் சஹாரா பாலைவனப் பகுதிகளிலும் இயங்குகின்றது. லிபியா, மொராக்கோ, தூனிஸ் முதலிய நாடுகளின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்ற இந்த ஸனூஸி இயக்கத்தார், இப்போது அல்ஜீரியா சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு பெற்று அதன் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களை முஸ்லிமல்லாதவர்கள் அடிமைப்படுத்த முடியாது என்ற கொள்கையுடைய இவர்கள், ஐரோப்பிய நாகரீகத்தை மட்டுமின்றி அவர்களது ஆட்சியையும் வெறுக்கின்றனர்.

வரலாற்று தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.