சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 6)
கான் பகதூர்கான்
சுதந்திர ரோஹில்லாவின் கடைசி அதிபராக இருந்த ஹபீஸ் ரஹ்மத்தினுடைய சந்ததியான கான் பகதூர்கான் இரகசிய ஸ்தாபன வலைகளை வீசி வந்தார். ஆங்கிலேயர்களிடமிருந்து கான் பகதூர்கான், ஹபீஸ் ரஹ்மத்தின் சந்ததி என்ற ஹோதாவில் ஓர் உதவித் தொகையும், ஆங்கிலேயர்களின் கீழ் ஒரு நீதிபதி என்ற ஹோதாவில் மற்றொரு உதவித் தொகையும் பெற்று வந்தார். அவரை ஆங்கிலேயரின் “அபிமான புத்திரர்” என்று அம்மாகாணத்திலுள்ளோர் கருதி வந்தனர். ஆங்கில அரசாங்கம் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது.
ஆனால் அதே சமயம் அவர், பாரில்லி இரகசிய ஸ்தாபனங்களின் உயிர் நாடியாகவும் இருந்து வந்தார். [பக்கம் : 138]
சக்கரவர்த்தியின் சுபேதார் என்ற ஹோதாவில், கான் பகதூர்கான் ரோஹில்கந்த் அதிபராக கரகோஷத்துடனும் சந்தோஷ ஆரவாரத்துடனும் அங்கீகரிக்கப்பட்டார்….. (அவர்) சிறைப்பட்டிருந்த ஆறு வெள்ளையர்களைத் தம் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தும்படி உத்தரவிட்டார்.
ஆங்கில ஆட்சியில் அவர் நீதிபதியாக இருந்தவர்; சட்ட நுட்பங்களை நன்கறிந்தவர். எனவே அந்தக் குற்றவாளிகளை விசாரிப்பதற்காக அவர் நீதிச் சபை ஒன்றை நியமித்தார்….. ஜூரிகளும் வழக்கம் போல் பிரமாணம் எடுத்துக் கொண்டு தங்கள் ஆசனங்களில் அமர்ந்தார்கள். இந்தியாவுக்குத் துரோகம் செய்த குற்றத்துக்காக ஆறு ஆங்கிலேயர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ரோஹில்கந்த் கமிஷனர் உயிர் தப்பி ஓடிவிட்டதால், அவன் தலைமறைவாக இருந்து வருவதாயும், அவனை உயிருடனோ அல்லது அவனது பிரேதத்தையோ கொண்டு வருவோருக்கு ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று கான் பகதூர்கான் ஒரு பிரகடனம் விடுத்தார். [பக்கம் : 141]
பிறகு எல்லா சிப்பாய்களும், பாரில்லி பீரங்கிப் படையின் தலைவரான பகத்கானின் தலைமையில் டில்லிக்குப் புறப்பட்டனர். ரோஹில்கந்த் மாகாணத்திலும் தலைநகரிலும் அமைதிக்கும் ஒழுங்குக்கும் பங்க மேற்படாமல் இருப்பதற்காக கான் பகதூர்கான் ஒரு புதிய படையை உருவாக்கினார். [பக்கம் : 145]
குறிப்பு :
நன்கு கண்ணுக்கு தெரியும் உண்மைகளை மறைக்கும் விதத்தில், இப்பொழுது நாட்டில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முதல் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தார்களா? என இப்பொழுதுள்ள தலைமுறையினர் கேட்கக் கூடிய அளவுக்கு, உண்மை ஒழிக்கப்படுகிறது.
அந்தப் பொய்திரையைக் கிழித்தெறிய, முஸ்லிம் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும், முஸ்லிம் சமுதாய ஸ்தாபனங்களுக்கும் பரம விரோதியாக இருந்த ஒருவருடைய வாக்கு மூலத்தை ஆதாரப்பூர்வமாக இங்கு வெளியிட உள்ளோம். அவர் தமது நூலில் முஸ்லிம்களைப் பற்றிய உண்மையை எவ்வளவோ மறைத்தும், மேலும் அவரால் மறைக்க முடியாத சில முஸ்லிம் தியாகிகளைப் பற்றிய உண்மைகளை, அவர் எழுதிய படி, எவ்வித திருத்தமும் மாறுதலும் இன்றி அப்படியே எடுத்து இடம் பெறச் செய்திருக்கின்றோம். அந்த நூலை எழுதியவர், முன்னால் ஹிந்து மகாசபைத் தலைவர் திரு. வீர சாவர்க்கர். அவர் எழுதிய நூல் “முதல் இந்திய சுதந்திர யுத்தம்” (தமிழாக்கம்)
கான் பகதூர்கானின் இறுதி காலம்
பரேலியில், கான் பகதூர்கான் ரோஹில்லா பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான போரை வழிநடத்தினார். அவர் கிழக்கிந்திய கம்பெனிக்கு சவால் விட்டார் மற்றும் பரேலியில் தனது சொந்த இணையான அரசாங்கத்தை உருவாக்கினார். பிரிட்டிஷ் படைகள் சுதந்திர போராட்ட வீரர்களைத் தள்ளி முன்னேறியதால், போராட்டம் தோல்வியடைந்து பரேலி ஆங்கிலேயர் வசமாகியது. கான் பகதூர்கான் நேபாளத்திற்கு தப்பிச் சென்றார், அங்கு அவரை நேபாளர்கள் பிடித்து பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர். கான் பகதூர்கான் ரோஹில்லாவுக்கு கொண்டு வரப்பட்டு 24 பிப்ரவரி 1860 அன்று கொத்வாலி (காவல் நிலையத்தில்) இல் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 1)...
சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 2)
மருது பாண்டியர் (சிவகங்கை சீமை) வரலாற்றுச் சுருக்கம்
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) வரலாற்றுச் சுருக்கம் ....