Home


இஸ்லாமியப் பண்பாடு

(இஸ்லாத்தில் கோழி-ஆடு அறுக்கும் முறை) தொடர் - 10

கோழி - ஆடு அறுக்கும் முறை :

  1. அறுப்பவர் முஸ்லிமான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும்.
  2. அறுக்கும் போது அதற்குரிய சுலோகமாகிய “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” எனக் கூற வேண்டும்.
  3. அல்லாஹ்வுடைய நாமத்துடன் வேறு யாருடைய பெயரையும் சேர்த்துக் கூறக் கூடாது.
  4. அறுக்கும் முன் பிராணிக்கு தண்ணீர் புகட்டுவதும், முகத்தை கிப்லா திசையில் கிடத்துவதும் சுன்னத்தாகும்.
  5. கூர்மையான கத்தியால் பிராணியின் தொண்டை முடிச்சுக்குக் கீழே அறுக்க வேண்டும். சுவாச நரம்பு, உணவு செல்லும் நரம்பு, இந்த இரண்டிற்கும் வலது பக்கமுள்ள இரண்டு நரம்புகள் ஆகிய நான்கும் அறுபட வேண்டும்.
  6. கத்தி, ஈட்டி போன்ற கூரிய ஆயுதத்தை அறுப்பு சுலோகம் கூறி எறிய, அது பிராணியின் உடலில் பாய்ந்து ரத்தம் வெளியாகி விழுந்து இறந்து விடுமாயின் அதன் மாமிசத்தைப் புசிக்கலாம். ஆனால் துப்பாக்கியால் சுட அது செத்து விடுமாயின் அதன் மாமிசத்தைப் புசிப்பது கூடாது.
  7. தானாகச் செத்தது, குதித்தோடும் இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத வேறு பெயர் கூறி அறுக்கப் பட்டவைகளின் மாமிசம் இவைகளைப் புசிப்பது ஹராமாகும். பிராணியின் ஆண், பெண் குறிகள், நரம்பு, ஜவ்வு, பித்தப்பை, கழலை, நீர்ப்பை, இவைகளையும் புசிப்பது கூடாது. மீன் இனத்தில் குதித்தோடும் இரத்தம் இல்லாததால் அவற்றை அறுக்காமல், நீரிலிருந்து வெளியேறி இறந்து விட்டாலும் புசிக்கலாம். ஆனால் நீரிலேயே இறந்து மிதக்கும் மீனை புசிப்பது கூடாது.

இஸ்லாமியப் பண்பாடு தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முக்கியமான வெளியீடுகள்

Islamic Culture-1

இஸ்லாத்தில் உண்ணுவது - பருகுவது பற்றிய வழிமுறைகள்...

I C-2

இஸ்லாத்தில் உறங்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரை

I C-4

இஸ்லாத்தில் நகச்சுத்தம், முடி களைதல் பற்றிய வழிமுறைகள்

I C-5

இஸ்லாத்தில் ஆடை அணியும் முறைகள் பற்றிய கட்டுரை....


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.