Home


இஸ்லாமியப் பண்பாடு

(அன்றாட நிகழ்ச்சியின் போது ஓதும் துஆக்கள்) தொடர் - 12

  1. இறுதி தூதர் முஹம்மது என்ற பெயரைக் கேட்டும் போது “ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்” எனக் கூற வேண்டும்.
  2. மற்ற நபிமார்களின் பெயர்களைக் கேட்கும் போது “அலைஹிஸ்ஸலாம்” எனக் கூற வேண்டும்.
  3. நபித் தோழர்களின் பெயர்களைக் கேட்கும் போது “ரழியல்லாஹு அன்ஹு” என்றும் நபி தோழியர்(பெண்) களின் பெயர்களைக் கேட்கும் போது “ரழியல்லாஹு அன்ஹா” எனக் கூற வேண்டும்.
  4. மரணித்த பெரியோர்களின் பெயர்களைக் கேட்கும் போது “ரஹ்மத்துல்லாஹி அலைஹி” எனக் கூற வேண்டும்.
  5. ஒரு முஸ்லிமைச் சந்திக்கும் போது “அஸ்ஸலாமு அலைக்கும்” எனக் கூற வேண்டும்.
  6. ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என ஸலாம் கூறினால் அதற்கு மறு மொழியாக நாம் “வ அலைக்கு முஸ்ஸலாம்” எனக் கூற வேண்டும்.
  7. ஒரு செயலைச் செய்வேன் என சொல்லும் போது “இன்ஷா அல்லாஹ்” எனக் கூற வேண்டும்.
  8. ஒரு செயலைத் துவங்கும் போது “பிஸ்மில்லாஹ்” எனக் கூற வேண்டும்.
  9. ஒருவருக்கு நன்றி கூறும் போது “ஜஸாக்கல்லாஹ் ஹைரன்” எனக் கூற வேண்டும்.
  10. ஒருவர்  நமக்கு நன்றி கூறும் பொருட்டு ஜஸாக்கல்லாஹ்  ஹைரன் எனக் கூறினால் அதற்கு மறு மொழியாக “வஅன்த்தும் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்" எனக் கூற வேண்டும்.
  11. நாம் சாப்பிடும் போதும், பருகும் போதும் “பிஸ்மில்லாஹ்” எனக் கூற வேண்டும்.
  12. நாம் சாப்பிட்ட பின்பும், பருகிய பின்பும் “அல்ஹம்துலில்லாஹ்” எனக் கூற வேண்டும்.
  13. தான் தும்மும் போது “அல்ஹம்துலில்லாஹ்” எனக் கூற வேண்டும்.
  14. மற்றவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் எனக் கூற கேட்டும் போது “யர்ஹமுகல்லாஹ்” எனக் கூற வேண்டும்.
  15. மகிழ்ச்சியான செய்தி நிகழும் போது “மாஷா அல்லாஹ்”  “அல்ஹம்துலில்லாஹ்” எனக் கூற வேண்டும்.
  16. ஒருவருக்கு கோபம் ஏற்படும் போது “அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்” எனக் கூற வேண்டும்.
  17. தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும் “அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்” எனக் கூற வேண்டும்.
  18. கோழி, ஆடு மற்றும் பிராணிகளை அறுக்கும் போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” எனக் கூறி அறுக்க வேண்டும்.
  19. மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும், மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும் “அல்லாஹு அக்பர்” எனக் கூற வேண்டும்.
  20. கீழே இறங்கும் போது, ஆச்சரியத்தின் போதும், மகிழ்ச்சியின் போதும் “ஸுப்ஹானல்லாஹ்” எனக் கூற வேண்டும்.
  21. மரணச் செய்தி, முள்குத்தல் அல்லது பொருள் நஷ்டம் போன்ற துக்கச் செய்தி நிகழும் போது “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” எனக் கூற வேண்டும்.

இஸ்லாமியப் பண்பாடு தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முக்கியமான வெளியீடுகள்

Islamic Culture-1

இஸ்லாத்தில் உண்ணுவது - பருகுவது பற்றிய வழிமுறைகள்...

I C-2

இஸ்லாத்தில் உறங்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரை

I C-4

இஸ்லாத்தில் நகச்சுத்தம், முடி களைதல் பற்றிய வழிமுறைகள்

I C-5

இஸ்லாத்தில் ஆடை அணியும் முறைகள் பற்றிய கட்டுரை....


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.