1857ம் வருஷத்திய சுதந்திர யுத்தத்துக்குக் காரணஸ்தர்களான முக்கிய தலைவர்களுள் அஸிமுல்லாகானும் ஒருவர். முதாலாவது சுதந்திர யுத்தத்தை உருவாக்கிய மகா மேதாவிகளுள் அஸிமுல்லாகானுக்குத் தான் முதல் ஸ்தானம் கொடுக்க வேண்டும். அந்த யுத்தத்தை நடத்துவதற்கான பல திட்டங்களிலும் அஸிமுல்லாகான் வகுத்த திட்டம் தான் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கது. அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவராயினும், தம்முடைய அபார புத்திக் கூர்மையால் உயர்ந்த ஸ்தானத்துக்கு வந்து, இறுதியில் நானா சாஹிபின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மந்திரியும் ஆனார். விரிவு
அதி தீவிர தேச பக்தரான மெளல்வி அஹமத் ஷா என்பவர். அவரது புனிதமான பெயரானது ஹிந்துஸ்தானத்துக்கே ஒரு ஜோதியைக் கொடுத்திருக்கிறது. தேசத்துக்காக அவர் புரிந்த அற்புத சாகஸங்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. புரட்சி யுத்த விதையை தேசமெங்கும் விதைப்பதற்காக யாத்திரை சென்று வந்த அவர், லட்சுமணபுரியில் நடந்த பொதுக் கூட்டங்களில் பதினாயிரக்கணக்கான ஜனங்களுக்கு முன்னிலையில் பகிரங்கமாக தேசியப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்கள் பூண்டையே ஒழித்தாலன்றி, தாய் நாட்டையோ, மதத்தையோ பாதுகாக்க முடியாதென்பது தான் அவர் செய்த உபதேசம். அவ்விதம் உபதேசம் செய்ததற்காக அவர் மீது ராஜத்துவேஷ குற்றம் சாட்டி, ஆங்கிலேயர்கள் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தனர். [ஆனால் அத்தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை.] விரிவு
ஜுலை 3 ம் தேதியன்று பீர் அலி என்ற தலைவரின் வீட்டுக்குப் பல முஸ்லிம்கள் வந்து மேற்கொண்டு செய்ய வேண்டிய அலுவல்களை நிர்ணயம் செய்த பின், அவர்கள் எல்லோரும் சுமார் 200 பேர்கள் தேசியக் கொடிகளுடனும் தேசியக் கோஷங்களுடனும் அவ்வீட்டிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அதைக் கேள்வியுற்ற லயால் சில துருப்புக்களுடன் அவர்களை எதிர்க்க வந்த போது, ஊர்வலத்துக்குத் தலைமை வகித்து வந்த பீர் அலி அவனை நோக்கிச் சுட்டதில் அவன் வீழ்ந்து மாண்டான். ஆனால் பிறகு ராட்ரே துரோகிகளடங்கிய ஒரு பெரும் படையுடன் வந்து தேச பக்தர்களை உக்கிரமாகத் தாக்கவே தேச பக்தர்கள் சிதறுண்டனர். உடனே ஆங்கிலேயர்கள், லயாலைச் சுட்டு வீழ்த்திய பீர் அலி உள்பட சகல தலைவர்களையும் கைது செய்தார்கள். விரிவு
பாரில்லியில் ஆங்கிலேயர் கொடி இறங்கி தேசீயக் கொடி ஏறிய பின், பீரங்கிப் படையின் சுபேதாரான பகத் கான், பாரில்லியிலுள்ள சகல படைகளுக்கும் தளபதியாக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அவர் மிகுந்த வாசாலக சக்தியும் தேச பக்தியும் உள்ளவராதலின், விடுதலை பெற்ற பின் சிப்பாய்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புதிதாக அமைக்கப் பெற்றுள்ள சுயராஜ்யத்தை நிலை நிறுத்த அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளென்ன என்பதையும் உருக்கமாகவும் உற்சாகத்துடனும் எடுத்துரைத்தார். எனவே அத்தகைய நெருக்கடியான ஒரு சமயத்தில் ரோஹில்கந்திலிருந்து அனுபவசாலியும் சிறந்த வீரருமான பகத்கான் தமது துருப்புகளுடனும், பொக்கிஷத்துடனும் டில்லிக்கு வந்தது ஓர் வரப்பிரசாதமாகக் கருதப் பட்டது. விரிவு
மகத்தான தேச பக்தியும் தியாக புத்தியும் வாய்ந்த சக்கரவர்த்தி அம்முறைகளுடன் திருப்தியடைந்து விடவில்லை. அந்தப் பிரதிநிதி சபையினாலும் கோரிய பலன் கிடைக்காமற் போகவே தமது குறையினால் தான் புரட்சி நசுக்குண்டு வருகிறதென்றும் தாம் தலைமை ஸ்தானத்திலிருப்பதன் காரணமாக சாமர்த்தியசாலிகள் எல்லோரும் தம்மை விட்டுப் போய் விடுகிறார்களென்றும் அவர் கருதி, தம் சகல அதிகாரங்களையும் துறந்து விடத் தயாராயிருப்பதாக பகிரங்கமாய் அறிவித்தார். இந்தியா மீண்டும் ஆங்கிலேயர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் வருவதைக் காட்டிலும் வெகுகாலமாக இந்தியாவின் குடலைக் கிழித்து வரும் அன்னிய ஆதிக்க மாகிற கழுகிற்கு இனியும் இடங் கொடுத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அடிமைச் சேற்றில் இந்தியா என்றென்றும் அழுந்திக் கிடப்பதைக் காட்டிலும், இந்தியாவின் சுதந்திரத்தையும் சுயாட்சியையும் பாதுகாக்கும் எவர் ஆட்சி புரிவதாயினும் தமக்குச் சந்தோஷமே யென்றும் தமது ஆட்சியை விட அத்தகையாரின் ஆட்சி தமக்கு நூறு மடங்கு அதிக ஆனந்தத்தைக் கொடுக்கு மென்றும் அந்த முஸ்லீம் பெரியார் பிரகடனம் செய்தார். விரிவு
பரேலியில், கான் பகதூர்கான் ரோஹில்லா பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான போரை வழிநடத்தினார். அவர் கிழக்கிந்திய கம்பெனிக்கு சவால் விட்டார் மற்றும் பரேலியில் தனது சொந்த இணையான அரசாங்கத்தை உருவாக்கினார். பிரிட்டிஷ் படைகள் சுதந்திர போராட்ட வீரர்களைத் தள்ளி முன்னேறியதால், போராட்டம் தோல்வியடைந்து பரேலி ஆங்கிலேயர் வசமாகியது. கான் பகதூர்கான் நேபாளத்திற்கு தப்பிச் சென்றார், அங்கு அவரை நேபாளர்கள் பிடித்து பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர். கான் பகதூர்கான் ரோஹில்லாவுக்கு கொண்டு வரப்பட்டு 24 பிப்ரவரி 1860 அன்று கொத்வாலி (காவல் நிலையத்தில்) இல் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். விரிவு
1847-ம் வருஷம் வாஜித் அலிஷா அயோத்தி நவாப் பட்டத்துக்கு வந்தார். தமது ராஜ்யத்தின் வாழ்க்கையையே பாழாக்கி வரும் விஷத்தன்மை பொருந்திய வெள்ளைப் புழுவை அடியோடு அழித்துவிட வேண்டுமென புதிய நவாப் முதலிலிருந்தே திடசங்கல்பம் செய்து கொண்டார். அந்த நோக்கத்துடன் அவர் தமது ராஜ்யத்தின் உயிர் நாடியான இராணுவத்தைச் சீர்திருத்த முற்பட்டார். வாஜித் அலி ஷா சிப்பாய்களுக்கான அணிவகுப்பு நபராக மாறுவார் என்ற அச்சத்தின் காரணமாக, பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வில்லியம் கோட்டையில் அவரது பிரதமருடன் சிறை வைக்கப்பட்டார். நவாப் பின்னர் கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான மெட்டியப்ரூஸில் உள்ள கார்டன் ரீச்சிற்கு நாடுகடத்தப்பட்டார். நவாப் வாஜித் அலி ஷா செப்டம்பர் 1, 1887 அன்று இந்தியாவின் கொல்கத்தா நகரில் காலமானார். விரிவு
பேகம் ஹஸ்ரத் மஹால் (கி.பி 1820 - 7 ஏப்ரல் 1879) இவரின் இயற் பெயர் முஹம்மதி கானும், ஆனாலும் அவாத்தின் பேகம் எனவும் அழைக்கப்பட்டார். ஆங்கிலேயரை எதிர்த்து வீர சுதந்திரம் வேண்டி நின்ற வீரப் பெண்களின் வரலாற்றுப் பட்டியலை வரிசைப் படுத்தும்போது நிச்சயமாக பேகம் ஹஜ்ரத் மாஹலுக்கு முக்கிய இடமுண்டு.. விரிவு
அலாகாபாத்தில் அராஜக ஆபத்துகளெல்லாம் மறைந்து புரட்சி கட்டுக்கோப்பான முறையில் உருவாகத் தொடங்கியது. புரட்சி மூண்ட மற்றவிடங்களைப் போல் அங்கும் தகுந்த தலைவர்கள் கிடைப்பதில் கஷ்டம் ஏற்பட்டது. எனினும் அந்நகரில் அந்தக் கஷ்டம் அதி சீக்கிரத்தில் நிவர்த்தியாகி விட்டது. தீவிர சுதந்திரப் பிரியரான லியாகத் அலி என்பவர் தலைமை வகித்துப் புரட்சியை நடத்த முன் வந்தார். விரிவு
மிர்ஸா அலீ கான் என்பது இவரின் இயற்பெயர் ஆகும். பிரிக்கப்படாத இந்திய உபகண்டத்தின் எல்லைப் புறத்தில் இருக்கும் வஜீரிஸ்தான் பகுதியில் உள்ள இப்பி என்னும் சிற்றூரில் இவர் பிறந்ததனால் இப்பி பக்கீர் என்று அழைக்கப்பட்டார். இவரின் தந்தை ஓர் ஒட்டகம் ஓட்டுபவர். பதினைந்து வயதிலேயே இவர் 6 அடி 3 அங்குலம் உயரமும், 90 கிலோ கனமும் உள்ளவராக இருந்தார். பதினாறு வயது முதல் இருபது வயது வரை பக்கீர்களுடனும், தர்வேஷ்களுடனும் தொடர்பு கொண்டு ஆன்மீகப் பயிற்சி பெற்றார். பின்னர் இவர் அரசியல் வாழ்வில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சிக் கொடி தூக்கினார். தம்முடைய முப்பத்தொன்றாவது வயதில் துறவறத்தை மேற்கொண்டார் இவர். விரிவு