Home


இஸ்லாமியப் பண்பாடு

(இஸ்லாத்தில் ஜியாரத் செய்யும் முறை) தொடர் - 9

ஜியாரத் செய்யும் முறை :

  1. கப்றுஸ்தானுக்குச் சென்று ஜியாரத் செய்வது ஆண்களுக்கு முஸ்தஹப்பான விரும்பத்தக்க செயலாகும். பெண்களுக்கு  கூடாது.
  2. ஜியாரத் செய்பவர் கப்ரை நோக்கி “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சலாம் சொல்ல வேண்டும்.
  3. சூரத்துல் பாத்திஹா மற்றும் தெரிந்த குர்ஆன் சூராக்களை ஓதி கப்ராளிகளுக்கு ஹதியா என்னும் அன்பளிப்புச் செய்ய வேண்டும்.
  4. பணம், உணவு, உடை, தானியம் போன்றவைகளை அல்லாஹ்வின் பெயரால் ஏழைகளுக்கு வழங்கிய பின் “அல்லாஹ்வே! நான் செய்த இந்த தர்மத்தின் பலனை எனது தாய், தந்தையருக்கோ அல்லது இன்ன அவ்லியாவுக்கோ சேர்த்து வைத்தருள்” என துஆச் செய்வதே பாத்திஹாவின் சரியான முறையாகும்.
  5. கப்ரைத்  தொட்டு முத்தமிடுவது, சஜ்தா செய்வது, தோப்புக்கரணம் போடுவது, சுற்றி வலம் வருவது, தேங்காய் உடைப்பது, தர்ஹாவின் நிலைப் படிகளைத் தொட்டு முகத்தில் தடவிக் கொள்வது ஆகிய அனைத்தும் முற்றிலும் கூடாது.
  6. அவ்லியாக்கள் பெயரால் கோழி, ஆடு அறுப்பதோ அதை உண்ணுவதோ கூடாது.
  7. அல்லாஹ்வே! எனது இன்ன காரியம் நிறைவேறி விட்டால், உனக்காக இத்தனை ரக்அத்து நபில் தொழுகிறேன். அல்லது இத்தனை நோன்பு நோற்கிறேன் அல்லது இத்தனை ஏழைகளுக்கு உணவளிக்கிறேன் அல்லது இத்தனை ரூபாய் தர்மம் செய்கிறேன் என நேர்ச்சை செய்து, அக்காரியம் நிறைவேறிவிட்டால் அந்நேர்ச்சையை நிறைவேற்றுவது தான் உண்மையான நேர்ச்சை செய்வதின் முறையாகும்.
  8. மரணத்தை நினைத்து பாவங்களை விட்டும் விலகி நல்ல அமல்கள் செய்வதற்கு வழி வகுப்பதே ஜியாரத்தின் நோக்கமாகும்.

இஸ்லாமியப் பண்பாடு தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முக்கியமான வெளியீடுகள்

Islamic Culture-1

இஸ்லாத்தில் உண்ணுவது - பருகுவது பற்றிய வழிமுறைகள்...

I C-2

இஸ்லாத்தில் உறங்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரை

I C-4

இஸ்லாத்தில் நகச்சுத்தம், முடி களைதல் பற்றிய வழிமுறைகள்

I C-5

இஸ்லாத்தில் ஆடை அணியும் முறைகள் பற்றிய கட்டுரை....


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.