Home


இப்பி பக்கீர்

        மிர்ஸா அலீ கான் என்பது இவரின் இயற்பெயர் ஆகும். பிரிக்கப்படாத இந்திய உபகண்டத்தின் எல்லைப் புறத்தில் இருக்கும் வஜீரிஸ்தான் பகுதியில் உள்ள இப்பி என்னும் சிற்றூரில் இவர் பிறந்ததனால் இப்பி பக்கீர் என்று அழைக்கப்பட்டார். இவரின் தந்தை ஓர் ஒட்டகம் ஓட்டுபவர். பதினைந்து வயதிலேயே இவர் 6 அடி 3 அங்குலம் உயரமும், 90 கிலோ கனமும் உள்ளவராக இருந்தார்.

ஆன்மீகப் பயிற்சி மற்றும் அரசியல் வாழ்வு

        பதினாறு வயது முதல் இருபது வயது வரை பக்கீர்களுடனும், தர்வேஷ்களுடனும் தொடர்பு கொண்டு ஆன்மீகப் பயிற்சி பெற்றார். பின்னர் இவர் அரசியல் வாழ்வில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சிக் கொடி தூக்கினார். தம்முடைய முப்பத்தொன்றாவது வயதில் துறவறத்தை மேற்கொண்டார் இவர்.

ஆங்கிலேயரை எதிர்த்துப் பகிரங்கமான போர்ப் பிரகடனம்

        1936 நவம்பர் 25 ஆம் நாள் ஆங்கிலேயரை எதிர்த்துப் பகிரங்கமான போர்ப் பிரகடனம் செய்த இவர் அவர்களை எதிர்த்துத் தம் வாணாளெல்லாம் போராடிக் கொண்டிருந்தார். இவரை வெற்றி கொள்ளவோ, சிறை செய்யவோ ஆங்கிலேயர்களால் இயலவில்லை.

பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தார்

        பாகிஸ்தான் பிரிவினையை இவர் ஆதரித்தார். காயிதே அஃலம் ஜின்னாஹ் இவரைச் சந்தித்து இவரின் ஆதரவைப் பெறுவதற்காக வஜீரிஸ்தான் சென்ற பொழுது எவரையும் எழுந்து நின்று வரவேற்காத இந்த துறவி  அவரை எழுந்து நின்று மார்புறத் தழுவி வரவேற்று, அவருக்குத் தம்மாலியன்ற எல்லாவிதமான ஆதரவும் அளிப்பதாக வாக்களித்தார்.

இவரது மரணம்

        இவர் 1960 ஏப்ரல் 19 ஆம் தேதி  தம்முடைய அறுபதாவது வயதில்  தீடீரென மாரடைப்பால் காலமானார்.


சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முக்கியமான வெளியீடுகள்

Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Freedom Fighter-1

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 1)...


I C-2

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 2)


Maruthu Pandiyar

மருது பாண்டியர் (சிவகங்கை சீமை) வரலாற்றுச் சுருக்கம்


Khan Shahib

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) வரலாற்றுச் சுருக்கம் ....