ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரழியல்லாஹு அன்ஹு)
ஹஸ்ஸான் இப்னு தாபித் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி. 563 - கி.பி. 674) அவர்கள் கஸ்ரஜ் குலத்தில் ஏறத்தாழ கி.பி. 563 ஆம் ஆண்டில் யாத்ரிபில் பிறந்தார். இவர் ஒரு அரேபியக் கவிஞர், நபி தோழர்களில் இவரும் ஒருவர். இவரது தந்தை தாபித், இவரது பாட்டனார் அல்முந்திர் ஆகியோர்களும் கவிஞர்களாய் விளங்கினர். சிறந்த கவிஞராகிய இவர் தொடக்கத்தில் கஸ்ஸானிய அரசர்களின் அரசவைக் கவிஞராய்ப் பணியாற்றினார். பின்னர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மதீனா வருகை (ஹிஜ்ரத்)தின் போது இஸ்லாத்தினை தழுவிய இவர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன் புகழ்ந்தும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எதிரிகளை தாக்கியும் கவி பாடிய கவிஞர் மேலும் இவரே இஸ்லாத்தின் முதல் மதக் கவிஞரும் ஆவார்
இஸ்லாத்தை தழுவிய இவரிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவில் குடியேறிய பொழுது இவருக்கு வயது அறுபது இருக்கலாம். இஸ்லாத்தைத் தழுவிய இவரிடம் இவரது உதவி தேவைப்படுகிறது என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய பொழுது இவர் தம் நாவைத் தொட்டுக் காட்டி, “என்னுடைய இந்த ஆய்தத்தை எவராலும் எதிர்த்து நிற்க இயலாது” என்று கூறினார்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களால் அமைக்கப்பட்ட தனி மேடையில் (மிம்பரில்) நின்று ஹஸ்ஸான் இப்னு தாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து கவிதை பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் "அல்லாஹ்வின் தூதரை புகழும் காலமெல்லாம், ரூஹுல் குத்ஸியை (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துவானாக! என்று கூறி ஹஸ்ஸான் இப்னு தாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை வாழ்த்தினார்கள். (ஸஹிஹுல் புகாரி)
உருவ வழிபாட்டினர் மீது வசைக் கவி
“நானும் குறைஷியாயிற்றே, குறைஷியரை நீர் தாக்கும் பொழுது எனக்கு வருத்தம் ஏற்படுமே” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய பொழுது, “வெண்ணெயிலிருந்து மயிரை எடுப்பது போன்று தங்களை அவர்களிலிருந்து தனியாகப் பிரித்து எடுத்து விடுவேன்” என்று கூறினார் இவர்.
பனூ குரைலாக்களின் கோட்டையை முற்றுகையிட்ட பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவரை நோக்கி, உருவ வழி பாட்டினர் மீது வசைக் கவி பாடுமாறும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதில் இவருக்கு உதவி நல்குவார்கள் எனக் கூறியதாகவும் மிஷ்காத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பார்வையில்
பள்ளிவாசலில் ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கவிபாடிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைக்கண் பார்வையால் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: உங்களை விட சிறந்தவரான இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இருந்தபோதே இப்பள்ளிவாசலில் கவி பாடியுள்ளேன். (அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) ஸஹிஹுல் புகாரீ - 2973, ஸஹிஹுல் முஸ்லிம் - 4539
இஸ்லாத்தை பரப்புவதில் ஆர்வம்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்கு பின் இவர் கிழக்கே சீனா வரை பயணித்து ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி), தாபித் இப்னு கைஸ் மற்றும் உவைஸ் அல் கர்னி ஆகியோருடன் இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரழி) அவர்களின் பணி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் செய்தியை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தன, ஏனெனில் கவிதை அரபு கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. ஹஸ்ஸான் இப்னு தாபித்தின் வேலைகளும் வார்த்தைகளும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை புகழ்வதில் மிகவும் அழகாகக் கருதப்படுகின்றன.
நெஞ்சை உருக்கும் இரங்கற்பா
பிற்காலத்தில் இவர் கண்ணொளி மங்கப் பெற்றார். அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் இறந்த பொழுது இவர் அவர்கள் மீது நெஞ்சை உருக்கும் இரங்கற்பாக்கள் பாடினார். இவரது மகன் அப்துர் ரஹ்மான், பேரன் ஸைத் ஆகியோரும் கவிஞர்களாகய் விளங்கினர்.
இவரது இறுதி கால வாழ்வு
இவர் அறுபது ஆண்டுகள் உருவத் தொழும்பராயும், பின்னர் இஸ்லாத்தில் இணைந்து அறுபது ஆண்டுகள் முஸ்லிமாயும் வாழ்ந்து தம் 120 ஆவது வயதில் கி.பி. 674 இல் காலமானதாகக் கூறப்படுகிறது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.