Home


ஷைத்தானிடமிருந்து காப்பாற்ற வேண்டும் துஆ

ரப்பி அவூதுபிக மின் ஹமஸாதிஷ் ஷயாத்தீன்.

வ அவூதுபிக ரப்பி அய்யஹ்ளுரூன்.

ஸூரத்துல் முஃமினூன் 23: 97,98

பொருள் :

"என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து என்னை காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன். (23:97) என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்" (23:98)

விளக்கம் :

        என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருங்கள். (23:98) என அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இறைவன் திருக்குர் ஆன் வாயிலாக கற்றுக் கொடுத்த துஆ.

ஷைத்தானிடமிருந்து காப்பாற்று :

        மறைவாக உள்ள ஜின் இனத்து ஷைத்தான்களை நற்குணங்கள் வாயிலாகவோ, நல்லுபதேசங்கள் மூலமாகவோ எதிர் கொள்வது இயலாது. அல்லாஹுவின் பாதுகாப்புக் கிட்டினாலே தவிர அவைகளிடமிருந்து தப்ப முடியாது. எனவே அத்தீய சக்திகளின் இன்னல்களிலிருந்து விடுபட இறைவன் “நபியே! கூறுவீராக: என்னுடைய இரட்சகா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.” என்று பிரார்த்திக்குமாறு ஸூரத்துல் முஃமினூன் 97, 98 ஆம் திருவசனங்கள் வாயிலாக பணிக்கிறான்.         

(மஆரிஃப் ஷஃபீஉ 06:331)

        மனங்குமுறும் போதும், வெஞ்சினம் பொங்கும் போதும், வெறியுணர்வு தலையெடுக்குந் தருணங்களிலும் இத் திருவசனப் பிரார்த்தனையை ஓதுமாறு நம்பிக்கையாளர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

        

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி