சங்கடத்தின் போது ஓதும் துஆ
லாயிலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம்.
லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புஸ்ஸமா வாத்தி, வ ரப்புல் அர்ளி, வரப்புல் அர்ஷில் கரீம்.
பொருள் :
அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன் மிகவும் சாந்தம் உடையவன். அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி! அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவனே வானங்களுக்கும் அதிபதி, பூமிக்கும் அதிபதி, சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்.
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.