குழந்தை பாக்கியம் வேண்டும் துஆ
ரப்பி லா ததர்னீ ஃபர்தவ்
வஅன்த கைருல் வாரிசீன்
ஸூரத்துல் அன்பியா 21:89
பொருள் :
"என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ வாரிசாகக்கூடிய வர்களில் மிக்க மேலானவன்"
ஆதாரம் :
அல்குர்ஆன் - ஸூரத்துல் அன்பியா 21:89
விளக்கம் :
21:89. ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் தன் இறைவனை நோக்கி "என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ வாரிசாகக்கூடிய வர்களில் மிக்க மேலானவன்" என்று பிரார்த்தனை செய்த சமயத்தில்,
21:90. நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம்முடைய அருளை) விரும்பியும் (நம்முடைய தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள்.