தன்னுடைய பெற்றோருக்கும் சேர்த்தே பிரார்த்தனை புரிதல்
ரப்பி அவ்ஸிஃநீ அன்அஷ்குர நிஃமதக்கல்லதீ அன்அம்த அலைய்ய வஅலா வாலிதைய்ய வஅன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வஅத்ஹில்நீ பிரஹ்மதிக்க ஃபீ இபாதிக்கஸ் ஸாலிஹீன். (27:19)
பொருள் :
"என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன்னுடைய அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக் கூடிய நற் செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!"
விளக்கம் :
நபி ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனையை இறைவன் திருகுர்ஆனில் ஸூரத்துந் நம்லி என்ற 27வது அத்தியாயம் வசனம் 19 இல் சுட்டிக் காட்டுவதிலிருந்து, நம்பிக்கையாளர் ஒருவர் தனக்கு மட்டுமின்றி தன்னுடைய நேர்வழிக்கும் நல் வாழ்வுக்கும் நற்செயலுக்கும் அடிப்படைக் காரணங்களாக விளங்கும் தன்னுடைய பெற்றோருக்கும் சேர்த்தே பிரார்த்தனை புரிதல் அவசியம் என்பதை உணர்த்துகிறது.