துன்பத்தில் இருக்கும் போது ஓதும் துஆ
லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக
இன்னீ குன்து மினழ் ழாலிமீன்
பொருள் :
அல்லாஹ்வே! "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)"
ஆதாரம் :
அல் குர் ஆன் : ஸூரத்துல் அன்பியா (21:87)
விளக்கம் :
மீன் வயிற்றினுள் சென்றாலும், நெருப்புக் குண்டத்தில் தள்ளப்பட்ட நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் போல் நபி யூனுஸ் (அலை) அவர்கள் ஆபத்து ஏதுமின்றி இருந்தார்கள். வியப்பிலும் அதிர்ச்சியிலும் இறையச்சத்திலும் புரண்ட நபி யூனுஸ் (அலை) அவர்கள் திக்குத் தெரியாது இறைவனைத் துதித்துப் பிரார்த்தனை செய்தவாறு இருந்தார்கள்.
"உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று திரும்பத் திரும்பத் துதித்தவாறு பிரார்த்தனை செய்தார்.
இறுதியில் இவர்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான் இறைவன். மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பு நல்கினான்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ஹல்ரத் யூனுஸின் துஆவைத் தன் துஆவுடன் இணைத்துக் கொண்ட முஸ்லிமின் பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படும். (அறிவிப்பு : ஹல்ரத் ஸஅது (ரழி))