நம்பிக்கையும் சொல் வளமும் வேண்டும் துஆ
ரப்பிஷ்ரஹ்லீ சத்ரீ,
வயஸ்ஸிர்லீ அம்ரீ,
வஹ்லுல் உக்ததம் மில்லிஸானீ,
யஃப்கஹு கவ்லீ. (20: 25,26,27,28)
பொருள் :
“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!” (20:25)
“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!” (20:26)
“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” (20:27)
“என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!” (20:28)
ஆதாரம்:
அல்குர்ஆன், ஸூரத்து தாஹா (20: 25, 26, 27, 28)
விளக்கம்:
இறைதூதர் மூஸா (அலை) அவர்கள், கொடுங்கோலன் ஃபிர் அவ்னுக்கு நல்லுரை வழங்குமாறு இறைவனால் கட்டளையிடப் பட்டார்கள். இதனால் பெரும் கவலை கொண்ட மூஸா நபியாவர்கள் மூர்க்கத்தனமும் அரக்க குணமும் கொண்டிருந்த ஃபிர் அவ்னைத் திருத்திச் சரி செய்வதற் கேற்றவாறு தான் இல்லை எனக் கருதினார்கள் இருப்பினும் இறைவனது ஆணையை முறையாக நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலையில் “இறைவா! இதற்கேற்ப எனக்கு மனவுறுதியைத் தந்தருள் என் நெஞ்சத்தை விரிவாக்கியருள்” எனக் கேட்டார்கள்.
மேலும் “எனது நாவில் உள்ள திக்கிப் பேசும் குறைபாட்டை நீக்கி ஃபிர்அவ்னிடம் சரளமாகவும், திக்கித் திணறாமலும் உரையாடுவதற்கேற்ற வலிமையை எனக்குக் கொடுத்தருள்வாய்” என்று துஆ கேட்டார்கள்.