தவறுகள் செய்யும் மக்களிடமிருந்து
நம்மை பாதுகாக்க வேண்டும் துஆ
அலல்லாஹி தவகல்னா,
ரப்பனா லா தஜ்-அல்னா ஃபித்னதல் லில்கவ்மில் ளாலிமீன,
வ நஜ்ஜினா பிரஹ்மதிக்க மினல் கவ்மில் காஃபிரீன்.
ஸூரத்து யூனுஸ் (10:85-86)
பொருள் :
அல்லாஹ்விடம் எங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டோம். எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி விடாதே!" என்று பிரார்த்தித்தார்கள். (10:85)
(எங்கள் இறைவனே!) "நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளைக் கொண்டு நீ எங்களை பாதுகாத்துக் கொள்வாயாக!" (என்றும் பிரார்த்தித்தார்கள்.) (10:86)
குறிப்பு :
மூஸா நபி (அலை) அவர்களின் மக்கள் இந்த துஆவை ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக இந்த துஆவை அல்லாஹ்விடம் கேட்டார்கள்
ஆதாரம் :
குர்ஆன், ஸூரத்து யூனுஸ் (10:85-86)