அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்க உதவும் துஆ
ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ,
அலைஹி தவகல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்.
ஸூரத்துத் தவ்பா (9:129)
பொருள் :
"அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான "அர்ஷின்" அதிபதி.”
விளக்கம் :
இத்திரு வசனத்தில் அல்லாஹு எனக்கு போதுமானவன் (ஹஸ்பியல்லாஹு) என்ற பொருள் தரும் இச் சொற்றொடரின் சிறப்பினைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “காலையிலும் மாலையிலும் யாரேனும் ஏழு முறை ஹஸ்பியல்லாஹு என்று கூறினால் உண்மையாகவோ பொய்யாகவோ எதுவாக இருந்தாலும் அவருக்குப் பிரச்சனையாக உள்ளவற்றிலிருந்து அவரைக் காக்க அதுவே அவருக்குப் போதுமாகும். (அறிவிப்பு : ஹலரத் அபூதர்தா (ரழி)
யாரேனும் (மேல் காணும்) சொற்றோடர்களை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் 10 (பத்து) முறை ஓதினால் அவற்றால் அல்லாஹுவைப் போதுமாக்கித் தருபவனாகவும், வெகுமதியளிப்பவனாகவும் பெற்றுக் கொள்வார். அவற்றில் ஐந்து இந்த வாழ்க்கைக்கும், ஐந்து மறுமைக்குமாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு : ஹலரத் புரைதா (ரழி), நவாதிருல் உசூல், குர்துபீ: 80/303)