கல்வியறிவை அதிகப்படுத்த வேண்டும் துஆ
ரப்பி ஸித்னீ இல்மா.
ஸூரத்து தாஹா 20 :114
பொருள் :
"என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து"
ஆதாரம் :
அல்குர்ஆன், ஸுரத்து தாஹா 20:114
விரிவுரை :
“ என் கண்ணத்தில் கணவர் அறைந்து விட்டார் அதற்கு ஈடாக என்ன செய்ய வேண்டும்?” என்று ஒரு பெண்மணி அண்ணல் நபி (ஸல்) அவர்களை அணுகி கேட்டார். அதற்கு “ஈடு வழங்கிடுக!” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உத்திரவிட்ட போது இறைவன், “அவ்வாறன்று! ஈடு உண்டா இல்லையா? என்பதையும், இதுவல்லாத இன்னும் பல கல்வி ஞானத்தையும் இரட்சகனே எனக்கு வழங்கியருள்” என்று எம்மிடம் கேளுங்கள் என அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பணித்தான். (நூல்: குர்துபீ 06:250) விரிவுரை : தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் Vol 9.