ஒவ்வொரு நபிமாரின் பெயரின் பின்னால் (அலை) என குறிப்பிட்டுள்ளதை அலைஹிஸ்ஸலாம் எனவும், முஹம்மது நபியின் பெயருக்கு பின் (ஸல்) என குறிப்பிட்டுள்ளதை ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் எனவும் தொடர்ந்து படித்து கொள்ள வேண்டுகிறோம்.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் தோன்றிய நபியாவார். இவர்கள் நபிமார்களில் இறுதியானவர். இவர்கள் பிறந்த காலத்தில் அரபு மக்கள் கேவலமான நிலையிலிருந்தனர். அல்லாஹ்வின் ஆலயமாகிய கஅபாவில் 360 விக்ரகங்களை வைத்து சிலை வணக்கம் செய்பவர்களாக இருந்தார்கள். இவர்களை ஆட்சி செய்ய எந்த அரசரும் முன் வரவில்லை. ஒருவருக்கொருவர் தலைமுறை தலைமுறையாகச் சாதாரண காரணங்களுக்கும் சண்டையிட்டுக் கொள்வர். பெண் குழந்தைகளை உயிரோடு குழி தோண்டிப் புதைப்பவர்களாக இருந்தனர். விரிவு
அன்பர்களே! நான் வீற்றிருக்கும் இவ்வொட்டகம் எங்கு போய்ப் படுக்குமோ, அதையே நான் தங்குமிடமாகக் கொள்வேன்! எனக் கூறி ஒட்டகத்தின் மூக்கணாங் கயிற்றை அவிழ்த்து விட்டார்கள். ஒட்டகம் அபூ அய்யூப் (ரழி) என்பவரின் வீட்டுக்கு எதிரே போய் படுத்துக் கொண்டது. அபூ அய்யூப் (ரழி) ஓடி வந்து, முகமன் கூறி பெருமானாரை அழைத்துச் சென்று உபசரித்தார். அன்று கி.பி. 622 செப்டம்பர் 24-ம் நாள், நபித்துவம் 13-ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1, ரபீஉல் அவ்வல் பிறை 12, இந்நாளிலிருந்து தான், ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்பட்டு வந்தது. பின்னர் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் அரபு வருடப் பிறப்பான முஹர்ரம் மாதத்திலிருந்தே ஹிஜ்ரீ ஆண்டின் கணக்கை நிர்ணயம் செய்தார்கள். நபிகள் நாயகம் தங்கள் ஊரில் வந்து குடியேறியதின் நினைவாக, யத்ரிப் மக்கள் அன்று முதல் தங்கள் ஊரின் பெயரை மதீனத்துந்நபி (நபிகளாரின் பட்டணம்) எனச் சிறப்புடன் அழைத்து வந்தனர். அதுவே இன்று சுருங்கி மதீனா என்று அழைக்கப்படுகிறது. விரிவு
நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) (கி.பி 570 - கி.பி 632) அவர்கள் அரபு நாட்டின் மத. சமூக, மற்றும் அரசியல் தலைவர் மற்றும் இஸ்லாத்தை போதித்தவர் ஆவார்கள். இஸ்லாமிய கோட்பாடுகளின் படி ஆதம்(அலை), இப்ராகிம்(அலை), மூஸா(அலை), ஈஸா(அலை) மற்றும் அணைத்து நபிமார்களின் ஏகத்துவ போதனகளையும் உபதேசங்களையும் உறுதிப்படுத்த இறைவனால் அனுப்பபட்டவர். இந்த உலக மக்களுக்கு இறைவழிகாட்ட வந்த இறுதி இறைத்தூதர் ஆவார்கள். விரிவு
இறைவன் மனிதனைப் படைக்க விரும்பி பூமியிலிருந்து மண் எடுத்து அதை தன் திருக்கைகளால் குழைத்து 60 அடியில் ஒர் உருவம் அமைத்து அதில் தன் ஆன்மாவை ஊதினான் இறைவன். ஆதம் (அலை) அவர்கள் உயிர் பெற்றார்கள். ஆதம் (அலை) அவர்கள் இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.விரிவு
ஆதம் (அலை) அவர்களின் மூன்றாம் மகன். இவர்கள் ஆதம் (அலை) அவர்களின் 135 ஆம் வயதில் பிறந்தார்கள் என்றும் இந்தியாவில் பிறந்தார்கள் என்றும், இவர்கள் இங்குப் பிறந்ததனாலேயே இவர்கள் பிறந்த பகுதிக்குச் சேது நாடு என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விரிவு
ஈஸா மஸீஹ் என்னும் பெயர் ஈஸா (அலை) அவர்களுக்கு மட்டுமே கூறப்படுகிறது. இதுவே கிரேக்க மொழியில் ‘ஜீஸஸ் கிறைஸ்ட்’ என்று ஆகி தமிழில் ஏசு கிறிஸ்து என்று மருவியுள்ளது. மஸஹ் என்றால் ’தடவுதல்’ என்று பொருள் படும். இவர்கள் நோயாளிகளைத் தம் கைகளால் தடவி அவர்களின் நோயை நீக்கியதன் காரணமாக இவர்களுக்குத் ‘தடவுபவர்’ என்று பொருள் படும் மஸீஹ் என்னும் பட்டம் ஏற்பட்டதென்று கூறுவர். அதுவே கிரேக்க மொழியில் ’கிறைஸ்ட்’ என்று ஆகியிருக்கிறது. இறைவன் இவர்களைத் தன் திருமறையில் ஈஸா இப்னு மர்யம் (மர்யமுடைய மகன் ஈஸா) என்று கூறுகின்றான்.விரிவு
காபீலுடைய வழிதோன்றல்கள் அட்டூழியங்களில் ஈடுபட அவர்களை நேர்வழிப் படுத்துவதற்கு இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு அவர்களின் நாற்பதாவது வயதில் நபிப் பட்டம் வழங்கி முப்பது சுஹ்ஃபுகளையும் அருளினான் இறைவன். இவர்கள் ஒரு நூறு ஊர்களை உண்டு பண்ணி அங்கெல்லாம் மக்களை குடியேற்றி அவர்களை இறைவனளவில் எழுபத்திரண்டு வழிகளில் அழைத்தனர்.விரிவு
“நூஹை நம்முடைய தூதராக அம் மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் ஆண்டுகள் அவர்களிடையே இருந்தார்.” (29:14) என்று இறைவன் திருமறை குர் ஆனில் கூறுகின்றான். பிரளயத்திற்குப் பின் இவர்கள் 60 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்றும், தனது 40ஆவது வயதில் நபிப்பட்டம் பெற்றனர் என்றும், ஆக 1050 ஆண்டுகள் இவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தனர் என்றும் கூறப்படுகிறது. விரிவு
ஆது சமூகத்தில் பிறந்த நபியாகிய ஹூத் (அலை) அவர்கள் நூஹ் (அலை) அவர்களின் மகன் ஷாம் என்பாரின் மகன் குலூத் என்பவரின் மகனாவார்கள். ஆது சமூகத்தினர்கள் மாட மாளிகைகள் உயரமான கட்டிடங்கள் கட்டி வாழ்ந்து வந்தனர். அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர், தங்களின் வலிமையை நினைத்து பெருமை கொன்டவர்களாக இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்யலானார்கள். ஆகவே இறைவன் அவர்களது சமூகத்தில் இருந்து ஹூத் (அலை) அவர்களை நபியாக அனுப்பினான். விரிவு
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், இவர்கள் நபிமார்களில் ஒருவராவர். இவர்களின் பெயர் திருக் குர்ஆனில் 69 தடவை குறிப்பிடப் பட்டுள்ளது. ஹிப்ரு மொழி பைபிளில் “ஆபிரகாம்” என்று குறிப்பிடப் படுகிறது. இவருக்கு கலீலுல்லாஹ் (அல்லாஹ்வின் நண்பன்) என்ற பட்டமும் உண்டு. நபிமார்களில் பெரும்பாலோர் இவர்களின் வழித்தோன்றல்களாக இருப்பதால் இவர்களுக்கு “அபுல் அன்பியா” (நபிமார்களின் தந்தை) என்னும் சிறப்பு பெயர் உள்ளது. இவர்களுக்கு பின் வேறு எவர் வழியிலும் நபிமார்கள் தோன்றவில்லை. வேதம் அருளப்பெற்ற நான்கு ரசூல்மார்களும் இவர்களின் வழி வந்தவர்களேயாவர். விரிவு
இஸ்மாயீல் அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் மகனாக நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை இன்றி பிறந்த முதல் குழந்தையாவார். நபி இஸ்மாயீல் அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி முஹம்மது (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களின் மூதாதையராகவும், மேலும் அவர் மக்காவுடனும் கஅபாவின் கட்டுமானத்துடனும் தொடர்பு கொண்டவர் ஆவார்கள். விரிவு
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழியில் தோன்றிய ஸமூது கூட்டத்தினர் ‘ஹிஜ்ர்’ என்ற பகுதியில் வாழ்ந்தனர். ‘ஹிஜ்ர்’ இதன் பொருள் மலைப்பாறை என்பதாகும். இது திரு குர் ஆனிலுள்ள பதினைந்தாவது அத்தியாயத்தின் பெயராகும். அதில் மலைகளைக் குடைந்து வாழ்ந்த ஸமூது கூட்டத்தினரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவர்களை இறைவன் ‘அஸ்ஹாபுல் ஹிஜ்ர்’ என்று குறிப்பிடுகின்றான் (15:80). அக் கூட்டத்தினரை நேர்வழிப் படுத்தவே ஸாலிஹ் (அலை) அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அந் நபிக்கு மாறு செய்ததன் காரணமாய் அழிந்தனர். விரிவு
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரருடைய குமாரர் லூத் அலைஹிஸ்ஸலாம். இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷாம் தேசப் பயணத்தை மேற்கொண்ட போது லூத் (அலை) அவர்கள் உடனிருந்தார்கள். இவர்களை இறைவன் ஜோர்தான் நதி தீரத்திலிருந்த ’முதஃபகாத்’ நாட்டிற்கு நபியாக அனுப்பி வைத்தான். அங்குள்ள மக்கள் காட்டு மிராண்டித் தனத்திலும், ஆண் சேர்க்கையில் ஈடுபடும் அவலட்சண நடவடிக்கைகளிலும், சிலை வணக்கத்திலும் ஈடுபட்டு வந்தனர். விரிவு
இஸ்ஹாக் (அலை) அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் இரண்டாவது மகனாவர். ஸாரா அம்மையார் மூலம் பிறந்தவர்கள் ஆவர் இவர்கள். ஒருநாள் வானவர் பன்னிருவர் வந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஸாரா மூலம் இஸ்ஹாக் என்னும் புதல்வரும் யஃகூப் என்னும் பேரரும் பிறக்கப் போகிறார் என்று நன்மாராயம் கூறியபொழுது தம்பதிகள் இருவரும் பெரிதும் வியப்புற்றனர். அதற்குக் காரணம் அப்பொழுது இருவருக்கும் அதிக வயதாக இருந்ததுதான். இஸ்ஹாக் (அலை) அவர்கள் பிறக்கும் பொழுது அவர்களின் பெற்றோர்களுக்கு எத்தனை வயது என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. இவர்கள் ஆஷுரா நாளில் பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது. விரிவு