ஷீத் (அலைஹிஸ்ஸலாம்)
நபி ஆதம் (அலை) அவர்களின் இரண்டாவது மகன் ஹாபீல் என்பவரை முதல் மகன் காபீல் என்பவரினால் கொலையுண்டதும், ஹாபீலைப் போன்ற ஒரு மகனை அளிப்பதாக இறைவன் வாக்களித்ததற் கிணங்க அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் (ஷீத் (அலை) பிறந்தார்கள். இராமேஸ்வரம் தென் பகுதியில் ஹாபீலின் 40 அடி நீள அடக்கதளம் (கப்ரு) இன்றும் உள்ளது.
அளவற்ற அன்பு காட்டிய ஆதம் (அலை)
ஷீத் (அலை) அவர்கள் பிறந்ததும், இறைவன் ஜிப்ரீல் (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்களிடம் அனுப்பி, இந்த குழந்தையின் சந்ததியிலிருந்தே, நபிகட்கரசர் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவதரிப்பார்கள் என அறிவிப்புச் செய்தான். ஆகவே தான், நபி ஆதம் (அலை) அவர்கள் ஷீத் (அலை) அவர்கள் மீது அளவற்ற அன்பு காட்டி வந்தார்கள்.
இந்தியாவில் தமிழகத்தில் பிறந்தார்கள்
உருவத்தால் தம்மை ஒத்திருந்த இவர்களுக்குச் சிரிய மொழியில் ‘இறைவனின் அருட்கொடை’ என பொருள் படும் “ஷீத்” என்று பெயரிட்டனர் தந்தை ஆதம்(அலை) அவர்கள். மேலும். இவர்களை ஆதம் (அலை) அவர்களின் மூன்றாம் மகன் என்று பைபிள் கூறுகிறது. இவர்கள் ஆதம் (அலை) அவர்களின் 135 ஆம் வயதில் பிறந்தார்கள் என்றும் இந்தியாவில் பிறந்தார்கள் என்றும், இவர்கள் இங்குப் பிறந்ததனாலேயே இவர்கள் பிறந்த பகுதிக்குச் சேது நாடு என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆதம் (அலை) அவர்களின் இறுதி காலம்
இவர்கள் ஒரு நபி என்று கருதப்பட்ட போதிலும் குர்ஆனில் இவர்களை பற்றி யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து இறப்பு நெருங்கிய வேளையில் ஆதம் (அலை) அவர்கள் தம் விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றி தம் மகன் ஷீத் (அலை) அவர்களின் விரலில் அணிவித்தார்கள். இறைவன் ஷீத் (அலை) அவர்களுக்கு 50 ஸுஹ்புகளை நல்கினான் என்றும், 29 ஸுஹ்புகளை நல்கினான் என்றும் இருவேறு விதமாகக் கூறப்படுகிறது.
ஆதம் (அலை) அவர்களின் உபதேசம்
ஆதம் (அலை) அவர்கள் தமது பிரதிநிதியாக ஷீத் (அலை) அவர்களை நியமித்து பின் வரும் உபதேசங்களை புரிந்தார்கள்.
நல்லுபதேசம் புரிந்தார்கள்
ஷீத் (அலை) அவர்கள் உலக இன்பங்களைத் துறந்து இறை வணக்கத்தில் மூழ்கினார்கள். மக்களுக்கு நல்லுபதேசம் புரிந்தார்கள். அக்காலத்து மக்கள் இரு பிரிவாகப் பிரிந்திருந்தனர். காபீலைப் பின்பற்றும் ஒரு கூட்டமும், ஷீத் (அலை) அவர்களின் நல்லுபதேசங்களைப் பின் பற்றி இஸ்லாத்தை தழுவியவர்களுமாக அவர்களிருந்தனர்.
ஷீத் (அலை) அவர்களின் இருதி காலம்
ஷீத் (அலை) அவர்கள் மக்காவில் வாழ்ந்து கஃபாவைக் களிமண்ணால் கட்டினார்கள் என்றும் தம் 920 ஆம் வயதில் மக்காவில் காலமாகி அபூகுபைஸ் மலையில் தம் தந்தைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...