வாழ்க்கையில் கண்ணியம் மற்றும் மரியாதை பெற இறைவனிடம் வேண்டும் துஆ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன்அளில்ல அவ் உளல்ல, அவ் அஸில்ல அவ் உஸல்ல, அவ் அழ்லிம அவ் உழ்லம, அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலைய்ய.
பொருள் :
யா அல்லாஹ்! நான் வழி தவறி போவதில் இருந்தும் அல்லது நான் வழி கெடுக்க படுவதில் இருந்தும், அல்லது நான் வழி சருகுவதில் இருந்தும் அல்லது வழி சருக்கச் செய்யப்படுவதில் இருந்தும், அல்லது நான் பிறர் மீது அநீதி இழைப்பதில் இருந்தும் பிறர் என் மீது அநீதி இழைப்பதில் இருந்தும், அல்லது நான் பிறரிடம் அறியத்தனமாக நடப்பதில் இருந்தும் அல்லது என்னிடம் பிறர் அறியத்தனமாக நடப்பதில் இருந்தும், உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம்:
அபூதாவுத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா