Home


யாஸிர் அரஃபாத் - பலஸ்தீன விடுதலை வீரர்

முகம்மது யாஸிர் அப்துர் ரஹ்மான் அப்துர் ரவூப் அரஃபாத் அல்-குத்வா அல்-ஹுசைனி  (24ஆகஸ்ட் 1929 - 11 நவம்பர் 2004) என்பது அவர் முழுப் பெயராகும். என்றாலும் யாஸிர் அரஃபாத் என்ற பெயராலேயே பெரும்பாலும் அறியப்படுகிறார். இவர் கி.பி 1929 ஆகஸ்ட் 24இல் பைத்துல் முகத்தஸில் பலஸ்தீன பெற்றோருக்கு பிறந்தார். இவரது தந்தை, அப்துர் ரவூப் அல் குத்வா அல் ஹுசைனி, அவரது தாயார் ஜாஹ்வா அபுல் சவுத். அரஃபாத் ஏழு குழந்தைகளில் இரண்டாவது இளம் மகனாக பிறந்தார். 1933 ல், அரஃபாத் நான்கு வயதாக இருந்த போது அவரின் தாய், சிறுநீரக நோயால் இறந்தார்.

பலஸ்தீன் நாடு பற்றிய சிறு குறிப்பு

        இஸ்ரேல் நாடு உள்ள நிலம் புனித பூமி அல்லது பலஸ்தீனம் என்றும் அழைக்கப்படுகிறது, இது யூத மக்களின் பிறப்பிடம், எபிரேய பைபிளின் இறுதி வடிவம் தொகுக்கப்பட்டதாக கருதப்படும் இடம் மற்றும் யூத மதம் மற்றும் கிறிஸ்தவத்தின் பிறப்பிடம். ஜெரூசலம், பைத்துல் முகத்தஸ் இங்கு உள்ளது. இது யூத மதம், சமாரியவாதம், கிறிஸ்தவம், இஸ்லாம், ட்ரூஸ் மற்றும் பஹாய் நம்பிக்கை ஆகியவற்றிற்கு புனிதமான தளங்களைக் கொண்டுள்ளது. இப்பகுதி பல்வேறு சாம்ராஜ்யங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது, இதன் விளைவாக, பல்வேறு வகையான இனங்களை கொண்டும் வரலாறைக் கொண்டும் உள்ளது.

        4 ஆம் நூற்றாண்டில் ரோமானிய சாம்ராஜ்யத்தால் கிறித்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டது கிரேக்க-ரோமானிய கிறிஸ்தவ பெரும்பான்மைக்கு வழிவகுத்தது. இப்பெரும்பான்மை 4 ஆம் நூற்றாண்டில் இருந்து 7 ஆம் நூற்றாண்டு வரை அரபு முஸ்லீம் பேரரசுகளால் கைப்பற்றப்பட்ட வரை மட்டுமல்லாமல், மற்றொரு முழு ஆறு நூற்றாண்டுகளுக்கும் நீடித்தது. சிலுவைப்போர் காலம் (1099-1291) முடிவடைந்த பின்னர் இஸ்ரேல் மக்கள் படிப்படியாக பெரும்பான்மையாக முஸ்லிம்களாக மாறினர், அந்த சமயத்தில் இது கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான மோதலின் மைய புள்ளியாக இருந்தது.

        13 ஆம் நூற்றாண்டிலிருந்து பலஸ்தீன் (இன்றைய இஸ்ரேல்) முக்கியமாக முழுவதும் முஸ்லீம் மக்கள்தொகையாக இருந்தது, அரபு ஆதிக்க மொழியாக இருந்தது, இது மம்லுக் சுல்தானேட்டின் சிரியா மாகாணத்தின் முதல் பகுதியாகவும், கி.பி.1516ல் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக இருந்து, பின்னர் கி.பி.1917-18ல் பிரிட்டிஷ் கைப்பற்றும் வரை இவ்வாறே இருந்தது.

உலகில் கி.பி. 1917க்கு முன் யூதர்களின் நிலை

        அந்த காலத்தில் உலகெங்கும் பரவி வாழ்ந்த யூதர்கள் அந்தந்த நாடுகளிலே மிக இழிவாகக் கருதப்பட்டார்கள். விஷமத்தின் மொத்த உருவங்களாக, சதியின் பிறப்பிடக்களாக, நம்பிக்கை கொடுமையில் நடமாடும் உருவங்களாக, பழி பாவங்களுக்கு அஞ்சாத விஷக்கிருமிகளாக அவர்கள் கருதப்பட்டார்கள். ஆனால் அரபு நாடுகளில் வாழ்ந்த யூதர்களோ எந்த விதமான இழிவுக்கும், பழிப்புக்கும், கொடுமைக்கும் ஆளாகாமல் சகோதர சமய மக்களாகச் சமமாக நடத்தப்பட்டார்கள்.

        முதல் உலக யுத்தத்தின் இறுதி காலக்கட்டத்தின் போது ஐரோப்பா முழுவதும் வெறுத்தொதுக்கப் பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும், கொடுமைப்படுத்தப் பட்டவர்களாகவும் வாழ்ந்த விஷமக்கார யூதர்களுக்கென அரபகத்தின் ஒரு பகுதியில் தனிநாடு ஒன்று உண்டாக்க வேண்டுமென்ற விஷமம் கி.பி.1917 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அமைச்சரான பால்ஃபோர்டு பிரகடனத்தின் மூலம் உண்டாக்கப்பட்டது.

        ஒரு யூத தேசிய இயக்கம், சியோனிஸம், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (வளர்ந்து வரும் ஆண்டிசெமிட்டிசத்திற்கு ஓரளவு பதிலளித்தது) தோன்றியது, இதன் ஒரு பகுதியாக அலியா (புலம்பெயர்ந்தோரிடமிருந்து யூதர்களின் வருகை) அதிகரித்தது. முதலாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு யூத தேசிய இல்லத்தை உருவாக்க பகிரங்கமாக உறுதியளித்ததுடன், இந்த நோக்கத்திற்காக பலஸ்தீனத்தை ஆட்சி செய்ய ஒரு ஆணை வழங்கப்பட்டது. இது அரபு-யூத பதட்டங்களை வளர்க்க வழிவகுத்தது.

கல்வி மற்றும் போர் பயிற்சி

        1944 -ல் எகிப்தின் கெய்ரோ  கிங் புவாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் அரஃபாத். அந்த காலத்திலேயே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை மேற்கொண்டார். பின் பேச்சுவார்த்தைகள் மூலம் யூத மற்றும் சியோனிஸம் பற்றி நன்றாக புரிந்து கொள்ள ஆரம்பித்தார் . கல்லூரியில் படித்து 1950 -ல் சிவில் பொறியாளர் பட்டம் பெற்றார். 1948 -ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின் போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபுப்படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார். பின்னர் கி.பி 1957 முதல் 1967 வரை பத்தாண்டுகள் பலஸ்தீன் மாணவர் இயக்கத்தின் தலைவராய்ப் பணியாற்றிய பொழுது கொரில்லா போர் முறையைப் பயின்றார். பின்னர் குவைத்தில் தங்கி அரபு இயக்கங்களோடும் பலஸ்தீன் நாட்டவர்களுடனும் தொடர்பு கொண்டதோடு ‘அல் ஃபத்ஹ்’ என்ற வார இதழையும் தொடங்கி நடத்தினார். ‘ஸவ்த்துல் ஆஸிபிய்யா’ என்ற பிரசுர நிலையத்தை நிறுவி அதன் மூலம் தம் கொள்கை பற்றிய வெளியீடுகளைப் பிரசுரித்து உலகம் முழுவதும் விநியோகித்தார்.

        கி.பி 1965இல் பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளும் சூயஸ் கால்வாய் மீது தாக்குதல் நடத்திய பொழுது இவர் எகிப்தியப் படையணியில் சேர்ந்து பணி புரிந்தார். கி.பி 1969 இல் ‘அல்ஃபத்ஹ்’ என்ற அரபு கொரில்லா இயக்கத்தின் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர் பலஸ்தீன விடுதலைக்காக அயராது பாடுபட்டார்.

யூத கொடுங்கோலர்களின் இனப்படுகொலைத் தாக்குதல்

        பல நூற்றாண்டு காலமாகப் பாரம்பரியமாகப் பிறந்து வளர்ந்த பகுதிகளிலிருந்து முஸ்லிம்கள் (பலஸ்தீனர்கள்) துரத்தப்பட்டு, தாங்கள் குடியிருந்த வீடுகள் யூதக் கொடுங்கோலர்களின் புல்டோஸர் களால் தரை மட்டமாக்கப் படுவதையும், பல சந்தர்ப்பங்களில் அந்தப் புல்டோஸர்களுக்கு அடியிலே தங்கள் குழந்தைச் செல்வங்கள், நடமாட இயலாத பெற்றோர்கள் நசுக்கப்படுவதையும் கண்ணால் காணக்கூடிய துரதிருஷ்டத்தைப் பெற்று, எந்த வித வசதி வாய்ப்பும் இல்லாத பாலைவனச் சூழலில், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையில் தங்கள் வாழ்க்கையைப் புதுப்பிக்கத் தலைப்பட்ட நேரத்திலும்கூட, விமானம் மூலம் விஷவாயுக் குண்டுகளை எறிந்த யூதக் கொடுங்கோலர்களின் இனப்படுகொலைத் தாக்குதலிலிருந்து காப்பாற்றி, தங்களுக்காக ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கி எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழ வழி செய்யும் ஆற்றல் பெற்ற ஒரு பெருந் தலைவராக, பலஸ்தீனிய மக்கள் விடுதலை வீரர் யாஸிர் அரஃபாத்தை நம்பினார்கள்.

பலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைவர்

        பலஸ்தீன் விடுதலை வீரர்கள் சுதந்திரப் பலஸ்தீனைப் பெற வேண்டும் என்று குறிக்கோள் இருந்தாலும் அதனைப் பெறும் வழியில் ஒரு தெளிவான போக்கின்றி அவர்களில் சிலர் அதி தீவிரவாதிகளாக மாறி சில சமயங்களில் தங்களுக்கிடையிலேயே பிளவு பட்டு போராடி விமானக் கடத்தல், ஹோட்டல்களுக்குக் குண்டு வைத்தல் போன்ற நாசகாரச் செயல்களிலும் ஈடுபட்டு, ஒரு விடுதலை இயக்கத்துக்கு நியாயமாகக் கிடைக்க கூடிய அனுதாபத்தைக்கூட இழந்து விடுவார்களோ என்று கருதப்பட்ட காலக்கட்டத்தில், அவ்வாறு பிரிந்து பட்டிருந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒருங்கிணைத்து பலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO)வைத் தோற்றுவித்து அதற்கு ஒரு நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்த விடுதலை வீரராகவும், தியாகத் தலைவராகவும், ராஜதந்திரியாகவும் யாஸிர் அரஃபாத் விளங்கினார். அவர் 1969 முதல் 2004 வரை பலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைவராகவும், 1994 முதல் 2004 வரை பலஸ்தீனிய தேசிய ஆணையத்தின் (PNA) தலைவராகவும் இருந்தார்.

ஆடம்பரமில்லா எளிய தூய வாழ்க்கைக்கு சொந்தகாரர்

        அபூ அம்மார் என்பது அவருடைய முன்னணிப் படை வீரரிடையே அறியப்படும் பெயராகும். அவர் நடத்தும் அரசாங்கத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு  1000கோடி டாலர் - ஏறத்தாழ 76000கோடி ரூபாய் செலவாகியது. ஆனாலும் அரஃபாத்திடத்திலே எவ்வித ஆடம்பரத்தையும் காண முடியாது.

        ஆரம்பத்தில் அல்ஜீரியாவும், சிரியாவும் கொடுத்து உதவிய சில மிஷின் கன்களைக் கொண்டு முறையாகப் பயிற்றுவிக்கப்பட முடியாத கொரில்லாக்களின் கூட்டமாக இருந்த பலஸ்தீனியரை ஒப்புக்கொள்ளப்பட்ட கண்ணியமிக்க ஓர் அரசியல் விடுதலை இயக்கமாகவும், சமயங்களில் இஸ்ராயிலுக்கு எதிரடித் தாக்குதல் நடத்திய வீர ராணுவமாகவும் மாற்றி அமைத்த பெருமை அரஃபாத்துக்கு உரியது.

        கண்ணியமிக்க ஒரு வணிகருக்கு மகனாகப் பிறந்த இவர் தனது 61 வயது வரை மணம் புரிந்து கொள்ளவில்லை. திருமணப் பேச்சை யாராவது எடுத்தால் “நான் தான் ஏற்கனவே பலஸ்தீனை மணமுடித்திருக்கிறேனே” என்று சிரித்துக் கொண்டே சொல்லுவார். அவருடைய தூய வாழ்க்கையைப் பற்றி எதிரிகள் கூட குறை சொன்னதில்லை.

இடைவிடாத துப்பாக்கிக் குண்டுகளுக்கிடையில் அச்சமின்றி வாழ்ந்த வீரர்

        அவருடைய உயிருக்கு குறி வைக்கப்பட்டிருந்தது போல வேறு எந்த உயிருக்கும் குறி வைக்கப்பட்டதில்லை. அவர் எங்கே தங்குவார்? - அவர் எங்கே இரவைக் கழிப்பார்? என்பது நெருங்கிய நண்பர்களுக்குக் கூடத் தெரியாது. இரண்டொரு மணி நேரம் இரவில் தூங்கியது கூட சந்தேகமே!

        இடைவிடாமல் துப்பாக்கிக் குண்டுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வரும் பெய்ரூத் - நகரப் பகுதிகளில் தன்னுடைய பிஜோக் காரின் முன் சீட்டில் சாதாரணப் பலஸ்தீனப் பாலைவனவாசியின் கோலத்தோடு அவர் பிரயாணம் செய்து கொண்டிருப்பது சாதாரணம். தம்முடைய தவிர்க்க முடியாத அலுவல்களின் ஊடே - உலக ராஜதந்திரிகளையும் சந்தித்து உரையாடல் நடத்திக் கொண்டு இருப்பதற்கு இடையே, காயப்பட்ட படைவீரரை மருத்துவமனைகளில் சென்று காண்பதற்கும், அகதிகள் முகாம்களுக்கு சென்று ஆறுதல் கூறுவதற்கும் அவர் தவறியது இல்லை.

        நள்ளிரவில் யாராவது நம்பிக்கைக்கு உரிய நண்பரின் வீட்டுக்குச் சென்று  கதவைத் தட்டி அந்த இரவை அங்கே கழிக்கிறார். காலையில் விழிக்கிறார். கவலைகளும் விழித்தன. பலஸ்தீனியருக்கு ஒரு சுதந்திரத் தாயகம் தேவை. அது தான் அவருடைய நீங்காத கவலை. உலகின் எந்த நாட்டின் தலைநகரில் இருப்பதையும் விட பலஸ்தீன் விடுதலைப் போர் முனையில் இருப்பதே அவருக்குப் பெருவிருப்பான காரியமாக இருந்தது.

அமைதிக்கான நோபல் பெற்றவர் யாஸிர் அரஃபாத்

        கி.பி 1994 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர் அரஃபாத், சுயநிர்ணய-பலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர். அவர் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு பல தசாப்தங்களாக நிலவிய மோதலுக்கு முடிவு எட்ட முயற்சித்தார். அவற்றின் மத்தியில் முக்கியமானவை - 1991 மாட்ரிட் மாநாடு, 1993 ஒஸ்லோ உடன்பாடு மற்றும் 2000 காம்ப் டேவிட் உச்சி மாநாடு.

திருமண வாழ்க்கை

        சுஹா தாவில் என்ற 27 வயது பலஸ்தீன கிறித்தவப் பெண் ஒருவர் அரஃபாத்தின் உதவியாளராகப் பணிபுரிந்தவர். திருமணத்திற்கு முன் சுஹா தாவிலை அவரது அம்மா யாஸிர் அரஃபாத் அவர்களிடம் ப்ரான்ஸில் வைத்து அறிமுகப்படுத்தினார். கி.பி 1990 -ல் யாசிர் அரஃபாத் தனது 61 வயதில் சுஹா தாவில் என்ற அந்த பலஸ்தீன கிறித்தவப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கி.பி. 1995 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் நாள் ஒரு மகள் பிறந்தார். அரஃபாத்தின் மனைவி இவருடனான மணவாழ்க்கையை விரும்பாதவராக இருந்தார். பல முறை அவரை விட்டு விலகிச் செல்ல விரும்பியிருக்கிறார்.

யாஸிரின் மரணம், இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம்

        கி.பி.2004 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று திடீரென நோயுற்றதால் கூட்டத்தில் வாந்தி எடுத்தார். துனிஸிய, ஜோர்டானிய மற்றும் எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் இவர் பிரான்சு நாட்டின் 'பெர்சி ராணுவ மருத்துவமனை' யில் அனுமதிக்கப்பட்ட இவர் நவம்பர் 3 ஆம் நாள் கோமா நிலைக்குச் சென்றார். நவம்பர் 11 அன்று தனது 75 ஆவது வயதில் மரணமடைந்தார்.

        அவரது உடல் தாங்கிய பெட்டி மீது பலஸ்தீனியக் கொடியால் மூடப்பட்டிருந்தது. 11 நவம்பர் 2004 இல் பிரெஞ்சில் ஒரு சிறிய இராணுவ மரியாதை நடைபெற்றது . ஒரு இராணுவ இசைக்குழு , பிரஞ்சு மற்றும் பலஸ்தீன தேசிய கீதங்களை வாசித்தனர். பிரஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் அவரை “தைரியத்தின் மனிதன்” என பாராட்டினார். அடுத்த நாள், அராஃபத்தின் உடல் பாரிஸிலிருந்து பிரெஞ்சு விமானப் படையின் போக்குவரத்து விமானத்தில் எகிப்து, கெய்ரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அங்கு ஒரு சுருக்கமான இராணுவ இறுதிச் சடங்கிற்காக, பல நாட்டுத் தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். எகிப்தின் உயர்மட்ட முஸ்லீம் மதகுரு சையத் தந்தவி ஜனாஸா தொழுகை நடத்தினார். 

        அல்-அக்ஸா மசூதிக்கு அருகில் அல்லது ஜெருசலேமில் எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அரஃபத்தின் விருப்பத்தை இஸ்ரேல் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்தது. அவரது அடக்கம் கிழக்கு ஜெருசலேம் மீதான பலஸ்தீன உரிமைகளை வலுப்படுத்தும் என்று இஸ்ரேல் அஞ்சியது. கெய்ரோ ஊர்வலத்தைத் தொடர்ந்து, அரஃபாத் "தற்காலிகமாக" ரமல்லாவில் உள்ள முகடாவில் அடக்கம் செய்யப்பட்டார்; பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். மேலும் பலஸ்தீன அரசு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு ஜெருசலேமில் அரஃபாத் மீண்டும் புதைக்கப்படுவார் என்று பலஸ்தீனிய செய்தித் தொடர்பாளர் சயப் எரேகாட் கூறினார். பின்னர் நவம்பர் 10, 2007 இல் ரமல்லாவில் உள்ள முகடாவில் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் PNA ஜனாதிபதி தலைமையகத்தில் நிரந்தரமாக அடக்கம் செய்யப்பட்டது..


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.